உன்னை விடமாட்டேன் - பகுதி 1

 பாத்து சாமி” என்று ரிஷிகேசை கீழே சறுக்கி விழாமல் பிடித்துக் கொண்டான் மலையரசன். தவறி விழுந்திருந்தால் கண்டிப்பாக எமலோகம்தான். உயிரை காப்பாற்றினான் என்று நன்றியுணர்வை விட மலையரசன் மேல் சினம்தான் உருவாயிற்று.

மலையரசன் மட்டும் பிரச்சனை செய்யாமலிருந்தால் இந்நேரம் மலேசிய தொழிலதிபரிடம் பேசிக் கொண்டிருந்திருப்பான். ஆனால் இப்போது அவன் பின்னால் செல்ல வேண்டியுள்ளது. ரிஷி ஒன்றும் வெறும் ஏசி அறையில் மட்டும் அமர்ந்து பழக்கப்பட்டவன் அல்ல. காடு, மலை, மேடு எல்லாம் பார்த்தவன்தான். தனக்கு இருக்கும் பணத்திற்கு பலரை அனுப்பினாலும் எல்லோரும் ‘முடியாது’ என்று கூறிவிட்டதால் குளுகுளு அறையில் பஞ்சணையில் புரண்டவன் வேறுவழியின்றி தானே களம் புக வந்துவிட்டான்.

மலையரசனை பார்த்தான் ரிஷி. 'லாவகமாக மலையேறுவது, கடினமான பாதையில்லா இடங்களை கடப்பது, உடன் வருபவரையும் கவனமாக பார்த்துக் கொள்வது என எல்லாவற்றிலும் கண்டிப்பாக என்னை விட திறமைசாலிதான். ஆனால் அப்பா மட்டும் தொழிலை கவனிக்க வரச்சொல்லாவிட்டால் ஒருவேளை அவனுக்கு சமமாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது என் திறமையை நிச்சயம் இவன் அறிந்து கொள்ளக்கூடாது, கவனமாக இருக்க வேண்டும்' மனதில் நிச்சயித்துக் கொண்டான். “சாமி! பாம்புதான் பயப்படக்கூடாது, இப்படிக்கா வாங்க” என்றான் மலையரசன். மனதில் மீண்டும் சினம் துளிர்த்தது, வெளிக்காட்டாமல் “ம்.. சாமி சாமி என்று என்னை உயர்த்தி பேசினாலும் பேச்சில் அதிகாரம் தொிகிறது, அதனால் நீதான் சாமி. நான் ஆசாமிதான்.” என்று சிரித்தான் ரிஷி.

“யாருஞ்சாமி கிடையாது. எல்லோரும் ஆசாமிதான் சாமி. ஆனா என்ன செய்ய? விருந்தாளிங்க சாமிக்கு சமானம். அதனால சாமின்னு மரியாதை கொடுக்கச் சொல்றாங்களே! எங்கப்பாமாரையும், தாத்தாமாரையும் மீறமுடியல” குரலில் கோபம் கொப்பளித்தது,

‘நான் வெற்றி பெற இவனை நன்கு புரிந்து கொண்டு இவனை கைக்குள் கொண்டு வர வேண்டும். அல்லது வேறுயாரையாவது இவனுக்கு எதிராக கொம்பு சீவி விட வேண்டியதுதான்.’என்று நினைத்தான் ரிஷி.



Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31