உன்னை விடமாட்டேன் – பகுதி 3
"நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை மலையரசா! நான் இங்கு வந்த காரணங்களில் இரண்டை மட்டும் கூறினேன். மூன்றாவதைச் சொல்லி நமக்குள் விவாதம் வேண்டாம் என்றுதான் கூறவில்லை. நீ இவ்வளவு மட்டமாக என்னை நினைக்க வேண்டாம். ஆம். மலைத் தேனுக்காகத்தான் வந்தேன். பல இடங்களில் மலைத்தேன் கிடைக்காமல் இல்லை. ஆனால், இங்குள்ள மலைத்தேன் மிக உயர்ந்த தரத்துடன் உள்ளது, பல நோய்கள் சட்டென்று தீர்கின்றன. இது அனுபவமாகவும், சில ஆராய்ச்சி கள் மூலமாகவும் கண்டறியப்பட்டுள்ளது,”
மேலும் தொடர்ந்தான் ரிஷி. “இங்கு மிக அதிகமாக தேன்கூடுகள் உள்ளன. எங்களால் நிச்சயமாக இதிலிருந்து தேனெடுக்க இயலாது, கரணம் தப்பினால் மரணம் நிச்சயம். ஆனால், இது உங்களுக்கு கை வந்த கலை. மலையில் சறுக்காமல், தடுமாற்றம் இல்லாமல் தேனெடுப்பதில் நீங்கள் அனைவரும் வல்லவர்கள். நல்ல வருமானமும் உங்கள் எல்லோருக்கும் வரும். தேனை தேன்கூட்டை கலைக்காமல் அதிலே ஒரு நூலை கட்டி தொங்க விட்டு, அந்த நூல் வழியாக சொட்டு சொட்டாக வரும் தேனை மிக பொறுமையாக சேகரிக்கிறீர்களாம். அதுவும் குறிப்பிட்ட அளவு மட்டும்தானாம். தினமும் கூட தேன் எடுப்பதில்லை என்றும் கேள்விப்பட்டேன். இந்த தேனுக்கு தேவை மிக அதிகமாய் உள்ளது, இதை அதிக விலை கொடுத்து வாங்கவும் பலர் காத்துக் கொண்டிருக்கிறா்கள் தொியுமா? இங்குள்ள உண்மை நிலவரத்தை தொிந்து கொள்ள வந்தேன்”
மலையரசன் உடனே, “ஓ! நீங்களும் அந்த பணக்கார பிரபு அனுப்புன ஆளுதானா? நீங்க ஓரடிகூட முன்னே வைக்க வேண்டாம். திரும்பவும் வந்த வழியே கொண்டு போய் விட்டுறேன். வாங்க.” என்றான்.
‘அந்த பணக்கார பிரபு யார்?’ என சிந்தித்தவன் தன்னைத்தான் குறிப்பிடுகிறான் என்று நொடிப் பொழுதில் உணர்ந்தான். ‘தன்னை முன்பின் பார்த்தறியாததால் தப்பித்தோம், மேலும் அந்த வன அதிகாரி இவனிடம் என்ன கூறி நம்மை இவனுடன் அனுப்பி வைத்தார் என்று தொியவில்லையே! தான் நிதானத்தை கைவிட்டது தவறு’ என உணர்ந்தான் ரிஷி. நிலைமையை சமாளிக்க முடிவு கட்டினான் ரிஷி.
“ஏன் மலையரசா இவ்வளவு கோபம். அந்த வன அதிகாரி உன்னிடம் என்னைப் பற்றி ஒன்றும் கூறவில்லையா?” என்று கேட்டான் ரிஷி. “எங்க கூட தங்கி எங்கள பத்தியும், எங்க சாமியைப் பத்தியும், கல்யாணம் மாதிரியான சடங்கை தொிஞ்சிக்க வந்ததாவும்ல சொன்னாரு. சரியான புளுகுமூட்டை போல. அந்த பணக்கார துரை ஆள் மேல ஆளாய் அனுப்பிக்கிட்டுருக்கான். அவன் அனுப்புற ஆளுங்க பேசுறதும், நடந்துக்கறதும், கொண்டு வர சாமானுங்களும் ஒன்னும் சரியில்லை சாமி. அவனுங்களுக்கு இருக்குற திமிரு அதுக்கும் மேல. அவனுங்க பணம் படைச்சவங்களா இருந்தா எங்களுக்கென்ன சாமி? அவங்க முதலாளி எந்த ஊரு, நாட்டை, உலகத்த சுத்துனா எங்களுக்கென்ன சாமி. அந்த முதலாளியோட ஆளுன்னு தொிஞ்சா உங்கள இங்கன கூட்டி வந்திருக்க மாட் டேன் சாமி.” என்றான் ஆத்திரத்தை துளிகூட மறைக்காமல்.
“வந்தவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் மலையரசா?” என்று விசாரிக்க ஆரம்பித்த ரிஷியின் கைகளை பலவந்தமாக பற்றிய மலையரசன் “அது எதுவும் உங்களுக்கு சொல்லத் தேவையில்ல. நான் இப்ப வன அதிகாரி இருக்கற இடத்துல கொண்டு போய் விட்டுறேன்” என்று கூறியபடி அவனை இழுத்தான். எதிர்பாரா இந்த இழுப்பினால் மலையில் சற்று தடுமாறி விழ ஆரம்பித்தான் ரிஷி.
‘ஐயோ! எதிர்பாராதது என்றாலும் தவறு தவறுதானே! வந்த விருந்தாளி உயிர் போக நாம காரணமா?’ திகைத்தான் மலையரசன். காப்பாற்ற முடியாத தொலை!வுக்கு கண் இமைக்கும் நேரத்தில் ரிஷி சறுக்கி விட்டான். “ஐயோ! ஒரு உயிரை எடுத்துட்டேனே!” என கதறினான் மலையரசன்.
Comments
Post a Comment