மன்னிப்பு


     ருக்மணி கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த பசும்பாலுடன் அறைக்குள் சென்றாள். மனம் நிறைய கோபம். இருக்காதா பின்னே? தன் அண்ணன் ருக்மி என்னதான் தன்னை தனக்கு பிடிக்காத சிசுபாலனுக்கு கட்டி கொடுக்க நினைத்தாலும் அண்ணன் அண்ணன்தானே! தனக்கு மிகவும் பிடித்தமான கிருஷ்ணனுடன் செல்ல விடாமல் பலமுறை தடுத்து அக்கிருஷ்ணனுடனேயே சண்டையிட்டாலும் அண்ணன் இல்லை என்றாகி விடுமா?
     அண்ணன் செய்தது தவறுதான் என்றாலும் கிருஷ்ணன் எப்படி பாதி மொட்டை, பாதி மீசை என்று மழித்து அண்ணனை அவமானப்படுத்தலாம். அவளால் ருக்மியின் உயிரை காக்க முடிந்ததே தவிர கிருஷ்ணனால் அவமானப்படுத்தப்படுவதை தடுக்க இயலவில்லை. பலராமர் வராவிட்டால் நிலைமை இன்னும் மோசமாயிருக்கும்.
     கிருஷ்ணனுக்குத்தான் என்ன ஒரு கோபம்? என்ன ஒரு ஆக்ரோஷம். அவளுள் ஒரு ரசனை பிறந்தாJiலும் மாட்டிக் கொண்டவன் தன்னுடனே பிறந்த அண்ணனாயிற்றே. அண்ணன் பட்டபாடு நிச்சயம் மமறக்கவில்லை தானே விரும்பி கிருஷ்ணனுடன் தோில் ஏறி வந்தவள். எல்லா சொந்தங்களையும் துறந்து வந்தவள். தற்போது அவள் கோபம் செல்லுபடி ஆகுமா? என்ன சீரை கொண்டு வந்தாள் கோபிக்க? யார் ஆதரவு தருவார்கள் கிருஷ்ணனுக்கு எதிரான கோபத்திற்கு? உண்மை புரிந்தாலும் மனம் கேட்கிறதா?
     தன் பிறந்த தேசமான குண்டினபுரத்தில் இருந்து துவாரகை வரை கண்ணனுடன் எதுவும் பேச இயலாத அவசரகதி பரபரப்பு, துவாரகை வந்த உடன் மணப்பெண்ணாக திருமணம் நடக்கும் நாள்வரை அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டிய கட்டாயம். இப்பொழுதோ திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் வந்தாகி விட்டது, இனி தன் உணர்வுகளை கொட்டி கண்ணனிடம் மனைவி என்ற முறையில் சண்டையிட வேண்டியதுதான்.
     பாலை தன்னிடம் கொடுக்காமல் மௌனமாக நின்றவளிடம் பாலை வாங்கி அருகில் வைத்துவிட்டு பேச ஆரம்பித்தான் கண்ணன். “ருக்மணி! நீ என்மீது எவ்வளவு காதலை வைத்துள்ளாய். அதற்கு மரியாதை கொடுக்காத என்னை மன்னிப்பாயா? கண்மணி!”
     ‘ம்.. தன் தவறை அவரே உணர்ந்துள்ளார் போலும். நல்லதாயிற்று. நான் நன்றாகவே கோபித்துக் கொள்ளலாம்.’ மனதுள் எண்ணிக் கொண்டாள் ருக்மணி.
     ருக்மணியின் தோளைத் தொட்டு தன்னுடன் மென்மையாக அணைத்துக் கொண்டவன் “ஆம் ருக்மணி! என்னைத் தவிர யாரையும் மனதால் கூட நினைக்காத உன்னை என்ன தைரியம் இருந்தால் சிசுபாலனுக்கு கட்டி கொடுக்க நினைத்திருப்பான் ருக்மி.” அவளோ கிருஷ்ணன் சொல்ல வருவது என்ன? என புரியாமல் அவன் வார்த்தைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
     தோளைத் தொட்ட கிருஷ்ணனின் கரம் அவளது இடையைத் தொட ஆரம்பித்தது, “நீ உத்தமமானவள். மனம், மெய், வாக்கினால் என்னையே நினைத்திருக்கும் உன்னை மற்றவனுக்கு கட்டி வைத்து உனக்கு, உன் காதலுக்கு, கற்புக்கு மாசு கற்பிக்க நினைத்தவன் ருக்மி, அதில் இவ்வளவு பிடிவாதமாய் இருந்தவனை தங்கை என்ற முறையினால் வே-றுவழியின்றி அவனை கொல்லவிடாமல் தடுத்தாய்.
     தற்போது கண்ணனின் கைகள் அவள் உடலில் விளையாட ஆரம்பித்தன. நான் உன் காதலன். உன் கற்பின் காவலன். ருக்மியை தண்டிக்க கடமைப்பட்டவன். ஆனால் செய்தது என்ன? நீ தடுத்ததையும், பலராமன் அண்ணன் தடுத்ததையும் காரணமாக வைத்துக் கொண்டு உன் அண்ணனை கொல்லாமல் விட்டுவிட்டேன் கண்மணி. என்னை மன்னிப்பாயா கண்மணி?
     கேள்வி கேட்டாலும் பதிலளிக்க இயலாமல் தன் இதழை அவளின் இதழுடன் பொருத்தி தன் மாய வலையில் சிக்க வைத்து பஞ்சணையில் கிடத்தினான் கிருஷ்ணன்.
     தான் எதற்கு கோபப்படடோம்? கோபப்பட்டது சரியா? அல்லது கண்ணன் சொல்வதுதான் சரியா? எதையும் சிந்திக்க இயலாமல் கண்ணனுடன் சங்கமித்தாள் ருக்மணி.

Comments

  1. மிக அருமையாக கொண்டு போய் இருக்கிறார் கதையின் ஆசிரியர்......நன்றாக உள்ளது வாழ்த்துகள்....sk

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31