உன்னை விடமாட்டேன் – பகுதி 11

 ரிஷி சிறு வயதிலேயே விளையாட்டு, மலையேற்றம், குதிரையேற்றம், சண்டை பயிற்சி, துப்பாக்கி சுடல் என பல வகையிலும் தோ்ச்சி பெற்றவன். பொியவனானதும் காவல்துறையின் உயரதிகாரி பதவி தேடி வந்தும், தன் தந்தையின் பாசக்கட்டளையை மீற முடிளாமல் தொழில் பொறுப்பை ஏற்றான். இருப்பினும், தான் விரும்பிய துறையாகிய காவல்துறையில் மறைமுக பணி புரிபவன். பெரும்பாலும் காடுகளில். மலைகளில் ஒளிந்திருக்கும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பது, அவர்களை உயிருடன் பிடிப்பது, ரௌடிகளின் என்கவுண்டரில் தந்தைக்கே தொியாமல் நேரடி களத்திற்கு செல்பவன். அதில் பெருவிருப்பமுடையவன். தந்தைக்கு எப்போதாவது தனது ரகசியம் தொிந்து விட்டால் கெஞ்சி கொஞ்சி கூத்தாடி சமாளிப்பவன்.

ரிஷி எழுந்து பார்த்தான். மலையரசன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். இருளில் ஒளிரும் கடிகாரத்தில் மணி ஒன்றேகாலைக் காட்டியது. இதுதான் சமயம் என்று தன் துணிகளுக்கு மத்தியில் ஒளித்து வைத்திருந்த ரேடியோ டிரான்ஸ்மிட்டரை எடுத்துக் கொண்டு குடிலை விட்டு வெளியே வந்தான். மலையரசன் நடுவில் எழுந்து வந்தால் மாட்டாமல் இருக்க வௌியே தாளிட்டான் ரிஷி. வெளியே எங்கும் இருள் பரவிக் கிடந்தது. யாராவது அக்கம் பக்கத்தில் இருக்கும் குடில்களில் ஒன்றிலிருந்து வந்துவிட்டால் மாட்டாமல் இருக்க ஒரு மரத்தின் மீது ஏறினான் ரிஷி.

ரேடியோ டிரான்ஸ்மிட்டரை எடுத்து ஆன் செய்து தன் தங்கையிடம் தாழ்ந்த குரலில் பேசினான். “சூர்யா! என்னவாயிற்று? அப்பா ஏதாவது கேட்டாரா?” என்று வினவினான் ரிஷி. சூர்யகலா, “அண்ணா! நீ உன் நண்பன் மாதவன் வீட்டில் இருப்பதாக சொன்னாலும் சொன்னாய். அப்பா நேரடியாக மும்பைக்கு தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளார். நாளை மாதவன் வீட்டிற்கு சென்று விடுவார். நாளை காலை 11.30 மணிக்கு இங்கிருந்து கிளம்பி செல்வார். மாதவன் வீட்டில் நீ இல்லையெனில் மாதவன் சட்னிதான். நீ இப்போ எங்கண்ணா இருக்கிறாய்?” என்றாள்.

ரிஷி, “அப்படியா! நான் மாதவனை உஷார் செய்து விடுகிறேன். கவலைப்படாதே! நான் திருநெல்வேலி பக்கமாக இருக்கும் மலையை அடுத்த காட்டில் இருக்கிறேன். நான் நினைத்தபடி, அனுப்பிய ஆட்கள் அனைவரும் இங்கு கோல்மால் செய்திருக்கிறார்கள். மலையரசன் என்பவன் 50 இலட்சம் வாங்கிய மாதிரி தொியவில்லை. மீதி தகவல் எல்லாமும் பொய்யாகத்தான் இருக்கும். ஒரு மாதம் தேவைப்படாது என்றே நினைக்கிறேன். சீக்கிரம் வந்து விடுவேன். அதுவரை அப்பாவை சமாளி.” என்றான்.

“நான் உனக்கு தகவல் கொடுப்பது தொிந்தால் என் நிலைமை என்னவாகும் தொியுமா?” என்றாள் தங்கை. “அப்பாவிற்காவது உன்மேல் சந்தேகம் வருவதாவது. நீ ஒன்றும் பயப்படாதே!” ரிஷி பேசிக்கொண்டிருக்கும்போதே மலையரசன், “ரிஷி! ரிஷி!” என்ற சத்தத்துடன் வேகமாக கதவைத் தட்டினான். “சரி நான் வைத்து விடுகிறேன். நாளை இரவு பேசுகிறேன்.” கட் செய்து ரேடியோ டிரான்ஸ்மிட்டரை பாக்கெட்டில் வைத்து மரத்திலிருந்து குதித்து கதவைத் திறந்தான்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31