உன்னை விடமாட்டேன் – பகுதி 55
ரிஷிக்கும், தேனரசிக்கும் ஒரு போட்டா போட்டி நடந்தது. அவள் பாடத்தை அன்று சரியாக படித்துவிட்டால் அன்றிரவு ரிஷி அவளைத் தொடக்கூடாது. ஆனால் ரிஷி, அவளைத் தொடுவதற்காகவே அவளால் பாடத்தை படிக்க முடியாத அளவுக்கு அதிகரித்தான். அவள் எதிர்ப்பு தெரிவித்தால் மிகவும் கடின மொழியாக ஆங்கிலம், ஹிந்தி என்று சிறிதளவு கொடுத்தான். பல நாட்கள் ரிஷியே வெற்றிக்கொடி நாட்டினான். ரிஷி முன் போல் இல்லாமல் தற்போது ரசனையுடன் தன்னுடன் சேர்வது கண்டு பயந்தாள். அதனால் அவள் தப்பிப்பதற்கு மிகவும் கடுமையாக படித்தாள். விளைவு ஒரு பக்கம் அவள் படிப்பில் புலியாக மாறினாள். மற்றொரு பக்கம் தாயாகவும் ஆனாள்.
சுனிலின் பணத்தாசையை சமாளிக்க தன் கடையை வெவ்வேறு பணக்கார இடங்களில் பரப்பி பொருட்களை விற்றான். பொருட்கள் விற்றுத் தீர்ந்ததும் சுனிலுக்குக் கூட தெரியாமல் மாயவன், தென்னரசு இவர்களை தொடர்பு கொண்டு பொருட்களை எடுத்துவரச்செய்தான். சுனில் ஏதேனும் துருவிக் கேட்டாலும் மலையரசன் தங்களைப் பற்றிய உண்மையைக் கூறவில்லை. பிற்பாடு சுனில் பிடிபட்டால்கூட நம்மைப் பற்றி அவனுக்கு சொல்லத் தெரியக்கூடாது என நினைத்தான். வன அதிகாரியிடமும் ஆலோசனைக் கேட்டான். உண்மையில் மலையரசனுக்கு வன அதிகாரி நல்கிய பல அறிவுரைகளும், ஆலோசனைகளும் பெருமளவில் உதவியது.
சுனில் உண்மையில் சாமர்த்தியசாலிதான். ஒரே ஆட்டோவை பயன்படுத்தாமல் நண்பர்கள் மூலம் வேறு வேறு ஆட்டோ, கார், வேன் என பயன்படுத்தினான். செலவும் அதிகமாகியது. காரணம் கேட்டால், “ரிஷி பின்னாடி வரும் வாகனங்களை கவனிக்கிறான்” என்றான் சுனில். அதுமட்டுமல்ல ரிஷி தன் காரை எங்கோ உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் விட்டு விட்டு வேறு வழியாக வெளியேறி மற்றொரு காரில் காட்டு பங்களாவிற்கு செல்வது தெரிந்தது. இதைக் கண்டுபிடிக்கவே மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.
தொடர்ந்து கண்காணிக்காமல் இடையில் பல நாட்கள் அமைதியாய் இருந்தான் சுனில்.. மலையரசனுக்கு பொறுக்க முடியவில்லை நாட்கள் விரயம் ஆனாலும் வெற்றி கிட்டும். அவசரப்பட்டால் மாட்டிக்கொள்வோம். மேலும், ரிஷி என்னை இரண்டு முறை நன்கு கவனித்து விட்டான். அவன் என் முகத்தை மறப்பதற்கும் எனக்கு தாடி சிறிது வளர்வதற்கும் நேரம் தேவைதான். என்றான். மலையரசனுக்கும் அது உண்மை என்றே புரிந்தது.
காட்டு பங்களா போகும் வழி ஆளரவமற்ற பகுதியாகவும் ஒரே சாலையாகவும் இருந்தது. சுனில் உண்மையில் பயந்தான். ஆளரவமற்ற சாலையில் அடிக்கடி சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று கூறி அங்கு ஒரே ஒருமுறை மட்டுமே போனார்கள். அந்த வண்டியை ஒருவன் மடக்கி விசாரித்தான். சுனில் ஒரு ஊரின் பேரைக் கூறி அவ்வூரை தேடி வந்ததாகக் கூற அவன் இந்த வழியில் எந்த ஊரும், வீடும் கிடையாது வழியும் கிடையாது வந்த வழியே திரும்பி சுற்றிக்கொண்டுபோ என்றான். அதன் பிறகு சுனில் ஒரு மாதம் வரை அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்க ஒப்புக்கொள்ளவில்லை.
கடைசியில் மலையரசன் அந்த ஆளரவமற்ற சாலை அருகே வந்ததும் இறங்கி கால்நடையாகவே நடந்துபோக ஆரம்பித்தான். சாலையின் நீளம் அதிகமாய் இருந்தது. அவன் தாகம், பசியால் தவிக்க ஆரம்பிக்க மீண்டும் பழைய இடத்திற்கே வந்துவிட்டான். இம்முறை மலையரசன் நிதானமாக திட்டமிட ஆரம்பித்தான். | மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத உணவை மூட்டையாகக் கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
வழியில் வண்டி சப்தமோ,, ஆள்வரும் சப்தமோ கேட்டால் அடர்ந்த மரங்களிடையே மறைந்து கொள்வான்.. பல நாட்கள் ரிஷி காரில் செல்வதைக் கண்டு வெற்றி நிச்சயம் என்ற உறுதியோடு முன்னேறினான்.
ரிஷி தேனரசி தாயானதை உணர்ந்துகொண்டான். அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவள் வயிற்றில் தன் குழந்தையை உணர முயன்றான். ஆசையுடன் அவள் வயிற்றில் கைவைத்துப் பார்த்தான். தேனரசிக்கு இதுவரையிலும் ஏன் கடத்தி வந்தான். நம்மை வைத்து என்ன செய்யப்போகிறான். உண்மையிலேயே குழந்தையை மிகவும் விரும்புகிறானே! நம்மையும் நன்கு கவனித்துக் கொள்கிறானே! ரிஷி பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தாள் அவள்.
Comments
Post a Comment