உன்னை விடமாட்டேன் – பகுதி 14

 இங்கு தலைவர் யார்? முக்கியமானவர்கள் யார்? என்பதுடன் அனைவரின் பெயரையும் கேட்டுக் கொண்டான். அவர்களுக்குள்ள உறவுமுறைகளையும் தொிந்து கொண்டான் ரிஷி. சிங்கராசா தாத்தாதான் தலைவர் என்பதையும், அவரைச் சோ்த்து மொத்தம் 7 தாத்தாக்கள் இருப்பதையும் தொிந்து கொண்டான். எல்லோருமே, பொியப்பா, சித்தப்பா உறவு முறைகளுடன் இருப்பதை கவனித்த மலையரசன், "கல்யாணம் பண்ண பொண்ணுக்கு எங்கே செல்வீர்கள்?" என்று ரிஷி கேட்டான். "மேற்கால போனா காட்டாறு வரும். அதைத் தாண்டி எங்களோட சாதிசனம் அங்கேயும் இருக்கு. அங்கனதான் பொண்ணு குடுக்கிறது, வாங்கறது எல்லாம்" என்றான் மாயவன்.

“இங்கே இன்னொரு இனமும் இருக்கிறதுபோல் தொிகிறதே! அவர்கள் தேனெடுப்பார்களா?” என்று கேட்டான் ரிஷி. அவங்க மலைச்சாதிக்காரங்க. அவங்கதான் முன்ன காலத்துல எங்களவிட நல்லா மலை ஏறுவாங்க. இப்போ அவங்க வெளியாளுங்க தொடர்பால கெட்டு போயி செல்போனு, அது, இதுன்னு திறமையே இல்லாம போயிட்டாங்க. அவங்களோட இருப்பிடத்தையும் வெளியிலேயே மாத்திக்கிட்டாங்க. அதனாலத்தான் எங்க தாத்தாமாருங்க எங்கள பொத்தி, பொத்தி வைக்கிறாங்க. இங்கன இருக்குற நல்லதையும், அங்கன இருக்கிற கெட்டதையும் சொல்லி, சொல்லி எங்கள வளர்க்கிறாங்க.” என்றான் மாயவன். மலையரசன், ரிஷி முன்பே பல விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பதையும், மேற்கொண்டு விசாரிப்பதையும் கவனத்துடன் மனதில் பதிய வைத்துக் கொண்டான்.

சுனை வந்து விட்டது. ரிஷி குளிக்க தயாரானான். "அட, சாமி உங்களுக்கு தொப்பையே காணும்." மாலுச்சாமி ஆச்சரியப்பட்டான். "ஏன்? உங்கள் எல்லோருக்கும்தான் தொப்பை இல்லை. தாத்தாமார்களுக்குக் கூட தொப்பை இல்லை. என்னை மட்டும் கேட்பானேன்." என்று கேட்டான் ரிஷி. வெளியாளுங்களுக்கு தொப்பை இல்லாம இருந்தா ஆச்சரியம்தானே சாமி. அவங்க குண்டா இருந்தா கேட்கவே வேணாம். மலையேறும் போது நிரம்பவே சிரிப்பா இருக்குஞ்சாமி” சிரித்தான் சிற்றரசு.

ரிஷி, மலையரசனைக் கண்டு கொண்டதாகவே தொியவில்லை. எல்லோரிடமும் நன்கு பேசினான் ரிஷி. மலையரசன், குளிக்க சுனையில் இறங்கப் போன ரிஷியை வேண்டுமென உள்ளே ஆழமாய் தள்ளி விட்டான். நீரின் ஆழத்திற்கு சென்று இரண்டு முறை நீருக்கு மேல் வந்த ரிஷி நீச்சல் தொியாமல் தத்தளித்தான். சிரிப்புடன் இருந்த மலையரசன் மூன்றாம் முறை மேலே வரும்போது பிடித்துக் கொள்ளலாம் என காத்திருந்தான். ஆனால், ரிஷியின் தலை மூன்றாம் முறை வெளியே வரவில்லை. மலையரசன் பயந்து விட்டான். அனைவரையும் தேடச் சொன்னான்.


ரிஷியோ யாரும் அறியாமல் ஆழ் நீச்சல் அடித்து சுனைக்கு அருகே உள்ள மரங்களுக்குப் பின்னே கரையேறி தான் குளித்தபின் அணிவதற்காக கொண்ட வந்த ஆடையை எடுத்துக் கொண்டான். மரங்களின் மறைவில் ஆறஅமர குளித்துவிட்டு, உடையை அணிந்து கொண்டான். தாமரை தண்டு நிரம்பிய கொடிக்குள் சிக்கி விட்டானா என பதைத்து போய் தன்னை அனைவரும் வலை போட்டு தேடுவதைக் கண்டு மனதிற்குள் சிரித்தபடி குடிலை நோக்கி நடந்தான்.

ரிஷி மட்டும் தனியே வருவதைக் கண்ட சிங்கராசா தாத்தா, ‘மற்றவர்கள் எங்கே?’ என விசாரிக்க, ‘அனைவரும் சுனையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.’ என பதில் கொடுத்தான். தாத்தா, “மேய்ச்சலுக்குப் போகணும். சீக்கிரம் வாங்கன்னா என்ன கூத்தடிக்கிறார்கள்?” கோபமுடன் கர்ஜித்தார். “விடுங்க தாத்தா!” என்று அவரை சமாதானப்படுத்திவிட்டு, “எதை மேய்க்கணும் தாத்தா? இங்கே ஆடு, மாடு, கோழி எதையும் காணோமே?” என்றான் ரிஷி.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31