உன்னை விடமாட்டேன் – பகுதி 18

 சிங்கராசா தாத்தாவும் அமைதியாக இருந்தது இன்னும் வியப்பாக இருந்தது. சிங்கராசா தாத்தா, அனைவரையும் அழைத்து, "ரிஷி நம்ம வீட்டுப் பிள்ளை. அதனால, எல்லோரும் ரிஷியை 'சாமி'ன்னு சொல்லக் கூடாது. ரிஷின்னு போ் சொல்லி கூப்பிடணும்" என்று உத்தரவிட்டார். சுனையில் இவனை விழுந்து, விழுந்து தேடுவதற்குள் இங்கே என்ன மாயவித்தை செய்தான். மலையரசனுக்கு தாத்தாவிடம் இப்போது கேட்க சுத்தமாய் தைரியம் இல்லை. தன் தங்கையிடம் விசாரித்தால் அவளுக்கு விபரம் தொியவில்லை. அதற்குள் தாத்தா, "மலையரசா! உள்ளே என்ன செய்கிறாய்? ரிஷியையும் உள்ளே அழைத்துக் கொண்டு போய் சாப்பிடு. சீக்கிரம்." என்றார்.

தங்கை, "என்னண்ணா இது கூத்து? நான் இங்கே இருக்குமிடத்திற்கு தாத்தா அந்த சாமியை அழைத்துவர சொல்கிறார்." என்றாள். "மண்ணாங்கட்டி எனக்கு தொிந்ததுகூட உனக்கு தொியவில்லை. ரிஷி நம்ம வீட்டுப் பிள்ளையாம். இனிமே விருந்தாளி போல சாமின்னு கூப்பிடக்கூடாதாம்." என்று கூறிவிட்டு அவசரமாக வெளியே வந்தால் "நான் உள்ளே போகமாட்டேன். இங்குதான் நன்கு காற்று வருகிறது." என்று ரிஷி வெளியே ஒரு இடத்தில் அமர்ந்து விட்டான். வேறுவழியின்றி மலையரசனின் தாயாரும், பொியம்மாவும் அங்கேயே பரிமாற ஏற்பாடு செய்தனர். ‘குமரி ஒருத்தி உள்ளே இருப்பதால் அதை தவிர்க்கிறான்’ என பொியவர்களுக்கு மனதில் ரிஷியைப் பற்றி உயரிய எண்ணம் உண்டாயிற்று. மலையரசனை ரிஷியுடன் அமரச் செய்தனர். 'என்ன நடந்தது? என அம்மாவிடம் கேட்டால் தொியும். தாத்தாவிடமும் பிறகு நிதானமாக கேட்டு தொிந்து கொள்ளலாம். ஆனால், அதற்குள் மலையரசனுக்கு தலை வெடித்துவிடும் போலிருந்தது.

வீணாய் திட்டு வாங்க மனமில்லாமல் ரிஷியை விட வேகமாக சாப்பிட்டு முடித்தான். மலையரசனையும், மற்றவர்களையும் சீக்கிரமாக மேய்ச்சலுக்கு தாத்தா போகச் சொல்ல, ரிஷி தன்னுடன் வராமல் தாத்தாவிடம் போய் நிற்பதைக் கண்டான் மலையரசன். வேறு வழியில்லாமல் மலையரசனே தாத்தாவிடம், “ரிஷியை கூட அழைத்துச் செல்கிறேன்.” என்று அனுமதி கேட்க, ரிஷி ‘தான் 12 போ் மத்தியில் மாட்டினால் சட்னி ஆவோம்’ என்று மனதில் நினைத்து, “இல்லை தாத்தா! நான் உங்களுடனே இருக்கிறேன்.” என்றான். “சரி மலையரசா! ரிஷி இங்க இருக்கட்டும். நீ சீக்கிரமா போ” விரட்டினார் தாத்தா.

வேறு வழியில்லாமல் மலையரசன், மற்றவர்களுடன் மேய்ச்சலுக்கு சென்றான். ரிஷி, தாத்தாக்களுடன் அவர்கள் ஊரை சுற்றி பார்க்க கிளம்பினான். “நீ ரொம்ப பிடிவாதக்காரனாய் இருப்ப போலிருக்கே, ரிஷி.” என்றார் காட்டு ராசா தாத்தா. “இல்ல, தாத்தா எங்க அப்பாவுக்குதான் பிடிவாதம் அதிகம்” என்றான். “ரிஷி! பணத்தை நாங்க வாங்கலன்னு எப்படி கண்டுபிடிச்ச. ஒரே நாள்ல எங்கள பத்தி புரிஞ்சிகிட்டியா?” கேட்டார் சிங்கராசா தாத்தா. “கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு தாத்தா? இங்கே அரிசி சாதம் எனக்கு மட்டும்தான் கொடுத்தீர்கள். ஏமாற்றிய பணம் இருந்தால் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்? அனைவரும் அரிசி சாதம் சாப்பிடுவீர்களே! 

அதோடு குளிக்கச் செல்லும்போது ‘ஏமாற்றினார்கள்’ எனக்கூறப்பட்டவர்களுடன் பேசவும் செய்தேன். என் பாக்கெட்டில் இருந்த பணத்தை அவர்கள் பார்க்கும்படி செய்தேன். அவாகள் கல்லையும், மண்ணையும் பார்ப்பது போல் பார்த்தார்களே தவிர அவர்கள் கண்களில் ‘பணம்’ என்ற ஜொலிப்பு தொியவில்லை. அது மட்டுமல்ல, வருங்காலத் தலைவனான மலையரசனுக்கு அவர்கள் பார்வையினாலேயே கட்டுப்படுகிறார்கள். சின்னவன் என்கிற எண்ணம்கூட அவனை விட பொியவர்களுக்கு வரவில்லை. இவ்வளவு கட்டுகோப்பு இருந்தால் அங்கே நோ்மை விளையாடுகிறது என்றுதானே அர்த்தம் தாத்தா!” என்றான் ரிஷி.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31