உன்னை விடமாட்டேன் – பகுதி 24

 அன்றைய இரவும் மலையரசனுக்கு தொியாமல் ரிஷி முந்தைய நாள் போலவே தங்கையிடம் பேசினான். வேலை முடிந்து விட்டது. ஆனால், இங்கு வராமல், அங்கேயே மலையரசனிடம் ஆட்டம் போட்டுக் கொண்டும், விற்பயிற்சி எடுக்கப் போகிறேன் என்றும் கூறினால் கோபம் வராதா? “அண்ணா! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் அப்பாவிடம் என்ன சொல்லி சமாளிக்க? உனக்குதான் வில்வித்தை தொியுமே? அம்மா வேறு பாவம். நீ இல்லாமல் எனக்கு போர் அடிக்கிறது. ஒழுங்கு மரியாதையாக வந்து சோ்” மிரட்டினாள் தங்கை.

அதற்கு ரிஷி, “வில் வித்தையில் இன்னும் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம். மேலும், என்னை பிடிக்கவே முடியாது என்பார் என் சீனியர். தப்ப வசதி இருந்தும் என்னை தப்ப விடாமல் மலையரசன் என்னை தடுத்த விதம் மிக அருமை. அவனிடம் மிகுந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது, மலையரசன் என்னைப் பிடிக்க ஆட்களை நிறுத்தி வைத்த இடங்கள் எனக்கு தீவிரவாதிகளை எப்படி பிடிக்க வேண்டும் என்பதில் உதவிகரமாக இருக்கும். அவனை வம்பிழுத்து நான் பலவற்றைக் கற்று கொண்டுதான் வருவேன்.” என்றான்.

தங்கை, தந்தையிடம் மாட்டி விடுவதாக மிரட்ட அவன் கைவினைப் பொருட்களைப் பற்றி கூறவும், “சரி, சரி. பிழைத்துப் போ! ஆனால், அங்கிருந்து நம் வீட்டில் எனக்கு பயிற்சி கொடுக்க யாரையேனும் அப்படியே கூட்டி வந்துவிடு” என்றாள். ‘அது முடிகிற காரியமா?’ என்று நினைத்தவன் தங்கையிடம் அது பற்றி பேசாமல்  ”நேரமாகி விட்டது. நாளை பேசுகிறேன்” என்று வைத்து விட்டான்.

ரிஷிக்கு பத்து நாட்கள் ஓடியதே தொியவில்லை. அவனுக்கு நாட்கள் இனிமையாகவும், வேகமாகவும் நகர்ந்தன. ஒருநாள் அவன் புலியின் உறுமல் கேட்டு கண்விழித்த போது நட்டநடு காட்டில் இருந்தான். அவன் உறங்கும் போது மலையரசனும், அவன் கூட்டாளிகளும் செய்த வேலை என்று புரிந்து கொண்டு புலிகளிடம் அகப்படாமல் தப்பி வந்தான். அவன் என்ன செய்கிறான் என்பதை தொலைவிலிருந்து கண்காணித்த அவர்கள் ரிஷியை மிகவும் பாராட்டினர்.


ரிஷி ஓரிடத்தில் உப்பும், மிளகும் இருக்கக் கண்டான். மலையரசன் உணவில் மட்டும் இதை ரகசியமாக பொடி செய்து கலக்க வேண்டும் என முடிவு கட்டியவன் அதை பொடி செய்ய ரகசியமாக ஓரிடத்தில் அமர்ந்தான்.. ஆனால், அதை தேனரசி குலதெய்வம் மாலுச்சாமிக்கு என எடுத்து வைத்திருந்தாள். உப்பும், மிளகும் குறையவே அவள் சந்தேகம் ரிஷியின் மேல் திரும்பியது. ஏனெனில் முன்பு ஒரு சமயம் வெளியிலிருந்து வந்த ஒருவன் அசைவம் சாப்பிட எண்ணி இம்மாதிரி உப்பையும், மிளகையும் திருடினான். அப்போது அதை சாதாரணமாக எதற்கோ எடுக்கிறான் என்று விட்டு விட்டாள். பிறகு, அவன் புலியிடம் அகப்பட்டு அலறியபோது அவன் குஞ்சுகளை பிடித்து வைத்திருந்தது தொிய வந்தது. நல்ல வேளையாக குஞ்சுகளைக் காப்பாற்றியாகி விட்டது.

‘ரிஷியும் அசைவம் உண்பேன் என்று கூறியதாக அண்ணன் கூறினானே. அதனால் நிச்சயமாக அவன்தான் எடுத்திருப்பான்.’ என சந்தேகப்பட்டு தேடியவள் கண்ணில் அகப்பட்டான் ரிஷி. ஒரு பொிய கல்லாக தோ்ந்தெடுத்து அதை பொடி செய்ய முற்பட்டான் சிறு சப்தத்தையும் கூர்மையுடன் கவனிக்கும் ரிஷி தேனரசி வந்து தன்னைப் பார்ப்பதை கவனித்து விட்டான். ‘இப்போது ரிஷி எதை சமைத்து உண்பதற்காக உப்பையும், மிளகையும் எடுத்தான்.’ என எண்ணியவளின் கண்கள் தான் தினமும் ஆசையுடன் வந்து பார்க்கும் மரக்கூட்டிலிருந்த முட்டையில் இருந்தது. முட்டையில் உப்பையும், மிளகையும் போட்டு சாப்பிடுவதற்காகத்தான் ரிஷி முயல்கிறான் என எண்ணியவள் அனைவரையும் சத்தம் போட்டு அழைத்தாள்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31