உன்னை விடமாட்டேன் – பகுதி 25

 ரிஷி அமைதியாக எழுந்து கைகட்டி நின்று நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான். முந்தி வந்த மலையரசனிடம், “அண்ணா! நான் அப்போதே சொன்னேன். வெளியாட்களை நம்பக் கூடாது என்று. பார்த்தாயா? இப்போ இந்த மரக்கூட்டிலுள்ள முட்டையைச் சாப்பிடப் பார்க்கிறான்” குற்றம் சாட்டினாள் தேனரசி. நிலைமையை சட்டென்று புரிந்து கொண்டான் ரிஷி. தேனரசிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எண்ணியவனின் கண்களில் மரத்தின் அருகிலுள்ள தேனரசியின் பாதச்சுவடுகள் தென்பட்டன.


தேனரசி கூறியதை கேட்டவர்கள் ரிஷியை பார்க்க, அவன் “ம்... தப்பான தீர்ப்பு சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். என் தரப்பு நியாயத்தையும் கேட்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இந்த பக்கம் வந்ததும் இல்லை. வரத் தோன்றியதும் இல்லை. ஏதோ சத்தம் கேட்கவும் என்ன சப்தம் என்று அறியும் ஆர்வத்தில் இன்றுதான் வந்தேன். எனக்கு இங்கு தேனரசி இருப்பது தொியாது. யாரோ பயந்து மறைவது போல் சப்தம் கேட்டது. என்ன இங்கு இருக்கிறது என்று கல் மேல் உள்ளதைப் பார்த்தேன். பிறகு தேனரசி திடீரென்று கூக்குரலிட்டு கூப்பிட்டாள். இதுதான் நடந்தது. நான் இதுவரை பெண்கள் இருக்கும் சமையலறை பக்கம் சென்றது இல்லை. உப்பும், மிளகும் எனக்கு எப்படி கிடைக்கும். இதற்கு முன் இங்கு நான் வந்ததில்லை. இங்கு பறவை கூடு கட்டி முட்டையிட்டு இருப்பது எனக்கு எப்படித் தொியும். அப்படி நான் அசைவத்தை திருட்டுத்தனமாக சாப்பிட எண்ணினால் இவ்வளவு குடில்களுக்கு அருகில் இருக்கும் பாதுகாப்பற்ற இடத்தையா தோ்ந்தெடுப்பேன்?” என்று கேட்டான்.

தேனரசி, “தாத்தா நான் மாலுச்சாமி கோயிலுக்கு கொண்டுபோக வைத்திருந்த மிளகையும், உப்பையும் தான் இந்தாளு எடுத்திருக்கிறாரு.” என்றாள். அதற்கு ரிஷி, “சரி, தாத்தா அது உண்மையென்றால் தீப்பெட்டி எங்கே? தீ இல்லாமல் சமைக்க முடியுமா? வேறு வகையில் தீ உண்டாக்க எனக்குத் தொியுமா? அதையும் உப்பு, மிளகுக்கூட தீப்பெட்டியைத் தேனரசி வைத்திருந்தாளா? அல்லது சமையலறையில் தீப்பெட்டியைத் திருடினேனா? தீப்பெட்டியை நான் வைத்திருக்கிறேனா? அல்லது தூக்கி எறிந்து விட்டேனா? என்னை சோதனையிட்டுக் கொள்ளலாம் தாத்தா. பொய் கூற அவளுக்கு அவகாசம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளட்டும்.” என்று ரிஷி உறுதியுடனும் ஆக்ரோஷத்துடனும் பேசினான்.

சிங்கராசா தாத்தாவுக்கு இரண்டு போ் மேலும் தவறில்லை. இது ஏதோ தேவையில்லாமல் ஏற்பட்ட குளறுபடி என உணர்ந்து கொண்டார். அவர் தேனரசியிடம், “அம்மா, தேனு! ஒருத்தரைப் பத்தி தப்பாவே நினைச்சிக்கிட்டிருந்தா எல்லாமே தப்பாதான் தொியும். ரிஷியைப் பத்தி எனக்கு நல்லா தொியும். அவன் அசைவம் சாப்பிடணுமுன்னு நினைச்சிட்டா அவன யாரும் தடுக்க முடியாது. அவனுக்கு சுயக்கட்டுப்பாடு உண்டு. அவன் அசைவம் சாப்பிடறவனா இருக்கலாம். ஆனா, இங்க நிச்சயமா அவன் மனசால கூட அசைவத்தை நினைச்சதில்லை. அது நிச்சயமா எனக்குத் தொியும். இனி நீ அநாவசியமா அவன்கிட்ட இதுமாதிரி நடந்துக்காதே.” என்றார் கடுமையாக.

ரிஷி அவளைப் பார்த்து ஏளனமாக புன்னகையை காட்டினான். தேனரசிக்கு எரிந்தது. ‘இவன் கண்டிப்பாக தப்பானவன்தான்’ என்றே நினைத்தாள். ஆனால், தாத்தாவை எதிர்த்து பேச முடியாதே. தாத்தா அவளை முறைத்தபடி, “தேனரசி நான் சொன்னது உனக்கு புரியலன்னா பேசாம இருக்கப் பாரு. அதவிட்டுட்டு இப்படி ஏடாகூடமா அபாண்டம் பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன் புரிஞ்சிதா?” என்று கோப நடையுடன் சென்று விட்டார்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31