உன்னை விடமாட்டேன் – பகுதி 28

ரிஷி "ஆம். என்னுடைய பொய் கலந்த உண்மையை நிச்சயம் அவர் தொிந்து அதன்படி அவருடைய பேரனாகிய என்னை நம்புவார்.” என்றான் மிக்க உறுதியோடு. ரிஷி பொய் கலந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறான் என்பது மலையரசனுக்கு தெள்ளத் தெளிவாயிற்று அதை தாத்தா தொிந்து கொண்டுள்ளார் என்பதையும் ரிஷி தொிந்தே வைத்திருக்கிறான் என்பதும், தன்னை அவருடைய பேரன் என்றதும் மலையரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “டேய்! பாத்துடா. நாங்க நிறைய பேரப் பசங்க இருக்கோம்டா. தாத்தா எங்கள மறந்துறாம.” என்றான் மலையரசன். ஆனால், ரிஷி மௌனமாக, அழுத்தமாக இருந்தான்.

மலையரசன் அவனை அணைத்தபடி, “என் தங்கை குழந்தை மாதிரிடா! அவ உன்ன தப்பா புரிஞ்சிகிட்டத பொிசா எடுத்துக்காத” என்றான் மலையரசன். ரிஷி, “மலையரசா! நான் ஒரு அப்பாவியா இருந்திருந்தால், தாத்தாவைப் போல் ஒரு சரியான அனுபவசாலி இல்லாதிருந்தால் அவளால் நான் எப்படி பாதிக்கப்பட்டிருப்பேன்? அப்பாவிகள் யாரும் இருந்தால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள். இதனை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது” என்றான் ரிஷி. “இங்கே அது மாதிரியான தவறுகள் நடக்காது” என்றான் மலையரசன் ரிஷியை தட்டிக் கொடுத்தபடி. அவன் சாந்தமாகி உறங்கினான்.

ஆனால், தேனரசிக்கோ உறக்கம் வரவில்லை. ரிஷியின் ஏளனப் புன்னகை ‘என்னை உன்னால் என்ன செய்ய முடியும். நான் தவறு செய்தால் கூட எல்லோரும் முட்டாளாகி என்னைத்தான் நம்புவார்கள்.’ என்று கூறுவதைப் போலவே தோன்றியது. ‘அண்ணன் கூட தன்னை நம்பவில்லை. யார், யார் இங்கே முக்கியமானவர்கள் என்று ரிஷி விசாரித்தது அவர்களை கைக்குள் போட்டுக் கொள்ளத்தான். மலைத்தேனுக்காக வேறு ஏதோ பொிய சதித் திட்டம் ரிஷியிடம் உள்ளது’ என்று பலவிதமாய் சிந்தித்தவள் உறக்கம் வராமல் சற்றே வெளிக் கதவை திறந்து பார்த்தாள். அவள் பார்வை ரிஷி இருக்கும் குடிலை நோக்கிச் சென்றது.

ரிஷி வழக்கம் போல தன் தங்கையிடம் பேச மரத்தில் ஏறினான். இக்காட்சியைக் கண்டவள் ‘இங்கு நமக்கு ஏதோ தீங்கிழைக்க முடிவு செய்து யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறான் ரிஷி. இதை இப்படியே விட்டால் அனைவரும் ஏமாந்து போய்விடுவோம். மலைத்தேனுக்கு ஆள் மேல் ஆளை அனுப்பியவன் எதுவும் நடக்காததால் தானே வந்து ஏதோ செய்கிறான். நம்முடைய இனிய வாழ்க்கை முறையை தவிடு பொடியாக்க சதித் திட்டம் தீட்டுகிறான். இனி, என்ன ஆனாலும் கவலையில்லை' என இப்போதைய நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்து விட்டாள். இவ்வாறு செய்தால் பிற்பாடு தனது நிலை என்னவாகும் என்பது பற்றி அவளுக்கு கவலை இல்லை. எல்லோரையும் ஏமாற்றி, ரிஷி செய்ய இருக்கும் சதித் திட்டத்தை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

தான் நினைக்கும் செயலை செய்ய மறுக்கும் நடுங்கிய கைகளை வற்புறுத்தி செயலாற்ற வைத்தாள். தன் ஆடைகளையும், கூந்தலையும் நன்கு கலைத்துக் கொண்டாள். ரிஷி சிறு அசைவையும் சுலபத்தில் கண்டு கொள்பவன். அதனால், அவன் சுதாகரிக்க இடம் கொடாமல் மரத்தில் இருந்து இறங்கும் முன் வெகு வேகமாக ஓடி அவனிருக்கும் இடத்தை அடைய வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்தாள். ‘நேற்று பெளர்ணமி. அதனால் வெளிச்சம் சற்று அதிகம்தான். அதனால்தான் ரிஷி மரம் ஏறியதைக் காண முடிந்தது. நான் ஓடி வருவதை பௌா்ணமி வெளிச்சத்தில் அவனும் விரைவில் கவனித்து விடுவான். அதனால் என்னுடைய வேகம் அசாத்தியமானதாக இருக்க வேண்டும்' என எண்ணியவள் அதை செயலாற்றினாள்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31