உன்னை விடமாட்டேன் – பகுதி 35
தேனரசிக்கு நேற்றிலிருந்து வீடே நரகம்
ஆயிற்று. நடத்தை கெட்டவள் போல. தாய் பேசினால் எப்படி இருக்கும்? போதாக்குறைக்கு நீ
செத்தால் பரவாயில்லை. நீ ஏன் பிறந்தாயோ? என்ற வார்த்தைகள் ஈட்டியை போல் அவள் நெஞ்சைப்
பிளந்தன. பெரியம்மா கூட உனக்கு எப்படி கல்யாணம் ஆகும் என கவலைப்பட்டாளே தவிர தாயைக்
கண்டிக்கவில்லை. பாட்டியும் ஒத்து ஊதினாள். இம்மாதிரியான சூழ்நிலையை அவள் இதுவரை
கண்டதில்லை. அவளால் தாங்க முடியவில்லை.
தேனரசி மாலுச்சாமியை நினைத்துக்
கொண்டாள். ‘உனக்கு உப்பு, மிளகு எடுத்து வச்சதுல ஆரம்பிச்ச
பிரச்சினை பெரிதாக மாறுதே தவிர குறையக் காணும். கேட்கக் கூடாத வார்த்தையெல்லாம்
கேட்டுட்டேன். இனி நான் உயிரோட இருக்கணுமா? முடியாது.. நான் யாருக்கும் பாரமா
இருக்க விரும்பல. என்னை கண்டிக்கவும் வேண்டாம். கல்யாணம் பண்ணிக்கொடுக்கவும்
வேண்டாம். தற்கொலை பண்ணா உன்கிட்ட வரமுடியாதுன்னு சொல்வாங்க. ஆனால் எனக்கு வேற வழி
தெரியல. உன்னை மனசில் நினைச்சுகிட்டு தற்கொலை பண்ணிக்க போறேன். நீதான்
எல்லாத்துக்கும் பொறுப்பு.’ என நினைத்துவிட்டு, தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.
முடிவில் இரவில் அனைவரும் உறங்கிய பின் குடிலை விட்டு வெளியேறி தற்கொலை செய்து
கொள்ள வேண்டும் என முடிவு செய்தாள்.
மலையரசன் மதிய உணவிற்கு வந்தபின் ரிஷி அவனுடன் சாப்பிட்டான். அதன் பிறகு மலையரசன் தன்னுடன் வருமாறு அழைத்தான்.
ஆனால், ரிஷி மறுத்து விட்டான். நாளை வருவதாக மலையரசனிடம் கூறினான். “கால் இன்னும் வலிக்கிறதா?”
என விசாரித்த மலையரசனிடம் “இல்லை, ராசாளியை வெகுநேரம் தூக்கிக் கொண்டு சுற்றியதால் சற்று சோர்வாக உணர்கிறேன்”
என்று கூறினான். பிறகு மலையரசன் தன்னை விட்டு சென்ற
பிறகு, ராசாளியுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ரிஷி. அவன் பார்வை தேனரசி இருக்கும் குடிலை நோக்கியே இருந்தது. கடைசியில் அவனுக்குப் புரிந்தது என்னவென்றால் தாத்தா அவளை மிக்க பாதுகாப்புடன்
வைத்திருக்கலாம் என்பதே அது. மேற்கொண்டு என்ன செய்யலாம்?
என தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
ராசாளி,
“என்ன மாமா! யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க”
என்று கேட்டான். ரிஷி, ”அதுவா?
நீ கொடுத்த விளையாட்டு சமானுல எதை முதலில் வைத்து விளையாடலாம்ன்னு யோசிச்சேன்.”
என்றான். “மக்கு மாமா! இதுகூட தெரியாதா?
எல்லாம் நம்ம இஷ்டம்தான். நமக்கு எது பிடிச்சிருக்கோ
அதை வைத்து விளையாடவேண்டியதுதான்.” என்றான் ராசாளி. உடனே ரிஷி அவனிடம், “என்னையா மக்குனு சொன்னாய். உன்னை என்ன செய்கிறேன்?
பார்.” என்று விளையாட்டாய் துரத்தினான்.
ராசாளி குடுகுடுவென ஓடினான். அவனை பின்தொடர முடியாதது
போல் நடித்து, “டேய்! மெதுவாக ஓடுடா!
என்னால உன்னை பிடிக்க முடியல” என்றான்.
ராசாளி, “மாமா! காலு இன்னும்
சரியாகலியா? தாத்தாவை கூட்டிக் கொண்டு வரவா?” என்று கவலையுடன்
கேட்க, ரிஷியின் மனம் நெகிழ்ந்தது. குழந்தை தான் பிடிக்க
முடியாமல் தவிப்பதை பார்த்து சந்தோஷப்படாமல் கவலைப்படுகிறதே என்று அவனை கட்டி அணைத்துக்
கொண்டான்.
இராசாளியை அவனது தாய் வந்து அழைத்துச் சென்ற
பின் மலையரசனுடன் இரவு உணவை முடித்துக் கொண்ட ரிஷி உறங்கலானான்.
அவன் உறங்க ஆரம்பித்ததும் மலையரசனும் ஆழந்து உறங்கிவிட்டான்.
தேனரசியோ உறங்காமல் அனைவரும் எப்பொழுது ஆழ்ந்து உறங்குவார்கள் என காத்திருந்தாள்.
Comments
Post a Comment