உன்னை விடமாட்டேன் – பகுதி 36

 நடு இரவில் விழித்த ரிஷி பக்கத்தில் மலையரசன் ஆழ்ந்து உறங்குவதை உறுதி செய்து கொண்டான். பின் மரத்திலிருந்து டிரான்ஸ்மிட்டரை எடுக்க வெளியில் வந்தான். மரத்தில் உட்கார்ந்து தங்கையை தொடர்பு கொண்டு, “இனி பத்து நாட்கள் வரை பேச முடியாது.” என கூறி விட்டு மரத்திலிருந்து இறங்க முற்பட்டான். அப்போது தேனரசி குடிலை விட்டு வெளியே வருவதைப் பார்த்தான். அவள் எங்கோ தனியே செல்வதைப் பார்த்து விட்டு வெற்றி களிப்புடன் அவளை பூனை போல பின்தொடர்ந்தான்.

சிறிது தூரம் சென்றதும் அவளின் வாயை பொத்தி, வாயினுள் கைக்குட்டையை திணித்தான். அவளை அங்கிருக்கும் கொடியைக் கொண்டு பிணைத்தவன், அருகிலுள்ள மயக்கம் தரும் மூலிகை செடியின் இலைகளை பறித்தான். அவளை மயக்கமடைய வைத்து விட்டு அங்கேயே அப்படியே படுக்க வைத்து விட்டு மலையரசனிடம் சென்றான். மலையரசன் மூக்கின் அருகே மயக்க மூலிகையை முகர வைத்தான். மலையரசனை தூக்கத்திலேயே மயக்கத்தில் ஆழ்த்தினான்.

‘இனி நிச்சயம் மலையரசன் 6 மணி வரைக்கும் எழும்ப மாட்டான். மலையரசன்தான் இம்மூலிகையை எவ்வளவு, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான். இப்பொழுது அதை அவனுக்கு எதிராக பயன்படுத்துகிறோமோ’ என மனதில் வந்த நினைவை உதாசீனப்படுத்தி விட்டு டிரான்ஸ்மிட்டரை தனது பைக்குள் வைத்தான். ராசாளி பைக்குள் வைத்திருந்த விளையாட்டு சாமான்கள் கண்ணில்பட அவனது அன்பு நினைவுக்கு வந்தது. விரைவாக பையை தோளில் மாட்டிக்கொண்டு தேனரசி இருக்குமிடத்தை நோக்கி சென்றான்.

அவன் நேரத்தை விரயமாக்காமல் தேனரசி இருக்குமிடத்திற்கு வந்ததற்கு காரணம் புலி வந்துவிடக்கூடாது என்பதுதான். ரிஷிக்கு தெரிந்தே இருந்தது பயணம் மிக கடினமானது என்று. ஆனால் அவன் பயப்படவில்லை. காரணம், அவன் தீவிரவாதிகளை பிடிக்க செல்லும்போது அவன் பார்க்காத சிரமமா? அவளை தனது தோளில் கிடத்திக் கொண்டு காட்டுவழியே நடக்க ஆரம்பித்தான். பௌர்ணமி முடிந்து நான்கு நாட்களாகின்றன. அந்த அடர்ந்த காட்டில் அந்த நிலவொளி வெளிச்சத்தில் புலிகளை கவனத்தில் வைத்தபடி பயணம் செய்தான். வெளிச்சம் தேவைப்படும் இடத்தில் ஷூக்குள் மறைத்து வைத்திருந்த சிறிய டார்ச் லைட்டை உபயோகித்தான்.

குறிப்பிட்ட இடம் வந்தவுடன் அவளை ஒரு இடத்தில் பத்திரமாக கிடத்தினான். பிறகு விரைவாக தவறான பாதையில் தனது காலடித்தடம் நன்கு பதியுமாறு நடந்தான். ‘தன்னை தேடி வருபவர்கள் இந்த காலடித் தடத்தை பின்தொடர்ந்து ஏமாறட்டும்’ என எண்ணியவன் மீண்டும் தன் காலடித்தடம் பதியாத வண்ணம் புதர் மேலேயும், மரவேர்கள் மேலேயும் நடந்து தேனரசி இருக்குமிடத்திற்கு வந்தான். சரியான பாதையில் தேனரசியை தூக்கிச் சென்றான். நடுவில் ஒரு புலியை சந்திக்க நேர்ந்தது. மரக்கிளையை உடைத்து பெரிய சப்தத்தை உருவாக்கி விரட்டினான். பல சிரமங்களுக்கிடையில் காட்டை தாண்டி மலைக்கு அருகில் வந்துவிட்டான்.

தன் ஒளிரும் கைகடிகாரத்தில் நேரம் பார்த்தான். மணி மூன்றை காட்டியது. இந்த நிலவொளி வெளிச்சத்தில் நிச்சயமாக மலையேறுவது அபாயம் நிறைந்தது. நேரமும் விரயமாகும் என எண்ணியவன் ஒரு இடத்தில் தேனரசியை கிடத்தினான். பிறகு சாப்பிடும்படியாக இருப்பதை தேடி உண்டான். அங்குள்ள கொடிகளை கொண்டு உறுதியான கயிறைத் திரிக்க ஆரம்பித்தான்.

நான்கு மணிக்கு தேனரசியின் பெரியம்மா முல்லையரசிக்கு விழிப்பு வந்தது. தேனரசியை படுக்கையில் காணவில்லை. ‘பக்கத்தில் எங்காவது இருப்பாள்’ என சாதாரணமாக எண்ணியபடி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். காலைக்கடன்களை முடித்துவிட்டு உலை வைக்க தயாரானபோது தேனரசியை இன்னும் காணவில்லையே என தேட ஆரம்பித்தாள். அதற்கு முன்பே தேனரசியின் தாயார் முல்லைக்கொடி தேட ஆரம்பித்திருந்தாள்


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31