உன்னை விடமாட்டேன் – பகுதி 41
ரிஷி தேனரசியை, தீவிரவாதிகளுக்கென்று தனிப்பட்ட முறையில் அமைத்த அறையில் சங்கிலியுடன் பிணைத்தான். பிறகு, அந்த அறையை பூட்டிவிட்டு அவனுடைய அறையில் குளித்தான். அழைப்புமணியை அழுத்தி, உள்ளே வந்த காவலாளிகள் வாங்கி வந்திருந்த உணவு, மற்றும் மளிகை சாமான்களை, ஓரிடத்தில் வைக்கச் சொன்னான். தமது கட்டளையின்றி உள்ளே வரக்கூடாது என்றான்.
ரிஷியை பார்க்க வந்த தலைமைக் காவலாளி, “சார்! மின்வேலியில எர்த் இருக்கும்படி பார்த்துக்க சொன்னீங்களாமே! தலையில் கொண்டை முடி, காதுல கம்மலோட ஒருத்தன் வந்தா தகவல் சொல்ல சொன்னீங்களாமே! அப்போ வர்றவன் சாகக்கூடாதுதானே சார்! கை, கால்ல மட்டும் சுட்டு உயிரோட பிடிக்கலாமா? சார்” என்று கேட்டார். ரிஷி பதற்றத்துடன் “அப்படியெல்லாம் பண்ண வேண்டாம். அவனுக்கு சின்ன காயம்கூட ஏற்படக்கூடாது.” என்றான். தன்னை தலைமைக் காவலாளி வித்தியாசமாக பார்ப்பதை உணர்ந்தான் ரிஷி.
மலையரசன் வருவான் என ரிஷி நினைக்கவில்லை ஏனெனில் காட்டு பங்களா பற்றி யாருக்கும் தெரியாது. அப்படியிருக்க எங்கோ உள்ள மலையரசன் எப்படி கண்டுபிடித்து வருவான். முடியாதுதான். ஆனால் பொதுவாக ரிஷி எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பவன். ரிஷி நிதானமாக, “அப்படி ஒருவன் வந்தால் தகவல் சொல்லுங்க. பங்களாவிற்குள் அவனை நுழைய விடாமல் பார்த்துக்குங்க. அது போதும்.” என்றான். “சரி சார்!” என்று தலையாட்டியபடி தலைமைக் காவலாளி சென்றார்.
உணவைக் கொண்டு வந்த காவலாளி, “சார்! ரெண்டு சாப்பாடு கேட்டீங்க. நீங்க மட்டும்தானே இருக்கீங்க.” என்று தனக்கு வந்த சந்தேகத்தைக் கேட்டான். ரிஷி சிரித்தபடி, “நிச்சயமா உங்களுக்கு கிடையாது எட்வர்ட். உங்களை அலைகழிக்க வேண்டாம்ன்னுதான் ரெண்டு வேளை உணவை மொத்தமா வாங்கிட்டு வரச் சொன்னேன்” என்றான். ரிஷிகேஷ் மிகுந்த களைப்புடன் இருப்பதை உணர்ந்த காவலாளிகள் அதிகம் உரையாடாமல் விலகினர். அவர்களிடம் ரிஷி, “நான் இங்கே இருப்பது யார்க்கும் தெரிய வேண்டாம். முக்கியமாக அப்பாவுக்கு” என்றான். இதையெல்லாம் நீங்க சொல்லணுமா சார்! என்று கூறிவிட்டு காவலாளிகள் சென்றனர். சைவ உணவை தேனரசியிடம் வைத்து விட்டு, அசைவ உணவை சாப்பிட்டபின் நன்றாக உறங்கினான். உறங்கி எழுந்தபின் புத்துணர்ச்சியாக உணர்ந்தான்.
முன்பே மயக்கம் தெளிந்து எழும்பிய தேனரசி தன்னருகே உணவும், நீரும் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தாள். அவளுக்கு கோபம், கோபமாய் வந்தாலும் ஏதும் செய்ய முடியாத நிலைமை. அவள் ‘மலைத்தேனைக் வருடந்தோறும் கொடுத்தால்தான் உங்கள் பேத்தியை விடுவேன்’, என்று ரிஷி தாத்தாவை மிரட்டுவதற்காக தன்னை கடத்திக் கொண்டு வந்திருப்பதாக நினைத்தாள். உணவையும், தண்ணீரையும் தொடவில்லை. சங்கிலியில் இருந்து கைகளை விடுவிக்க முயன்றதில் கைகள் புண்ணானதுதான் மிச்சம்.
உள்ளே வந்த ரிஷி எள்ளி நகையாடினான். “உன்னை காட்டுவழியாவும், மலை மேலே ஏத்தி வந்தப்போ கூட உன் உடம்புல சின்ன கீறல் கூட ஏற்படல. ஆனால் காயத்தை நீயே உண்டு பண்ணிக்கிற. இந்த சங்கிலியில் இருந்து விடுபட முடியுமான்னு கூடவா யோசிக்கக் கூடாது. நீ சரியான முட்டாள்ன்னு திரும்ப, திரும்ப நிரூபிக்கிற.” என்றான் ரிஷி. அவள் கோபத்தை எவ்வளவு தூண்ட முடியுமோ தூண்டினான். பசியும், தாகமும் இருந்தாலும் செத்தாலும் பரவாயில்லை, பட்டினி இருப்பது என தேனரசி முடிவு பண்ணியிருந்தாள். ரிஷி அவளை விடவில்லை. வலுகட்டாயமாக உணவை திணிக்க முயன்றான். அவள் அவனை தாக்க முயன்றாள். அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. அதற்காக அவனை அப்படியே விட்டுவிடுவதா? முடியாது, முடியவேமுடியாது என கை, கால்களினால் தானே ஒன்றும் செய்ய முடியவில்லை. பின் வாயால் கடிக்க முயன்றாள். கடிக்கவும் முடியவில்லை. கடைசியில் அவள், அவன் முகத்தின் மீது தன் எச்சிலை உமிழ்ந்தாள். ரிஷியின் கோபம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இவளை சாப்பிட வைக்க முயன்றால் எவ்வளவு திமிராக நடந்துகொள்கிறாள். முகத்தில் எச்சிலை துப்ப என்ன தைரியம்? அதுவும் தனியே இருக்கும் ஆண் மகனிடம். என்னைப் பற்றி இவள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள். நான் என்ன செய்வேன்? அநாகரிக செயலுக்கு பதில் எப்படி கிடைக்கும் என்று தெரிய வேண்டாமா? என எண்ணியவன் அவள் பெண்மையை சூறையாடினான்.
தேனரசிக்கு ‘இந்த கேவலமானவனிடம் இருந்து இதைத்தானே எதிர்பார்க்க முடியும்.’ என்று தோன்றியது. உயிர் வாழும் எண்ணம் அப்போதே இல்லை. இப்போதோ அதை விட முக்கியம் அவனை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்பது. அதனால் அவளின் வேகம் அதிகரித்திருந்தது. ரிஷி அதனை வெறி என்றே கருதினான். “என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நான் நினைத்ததை சாதிப்பேன். உன்னை சாப்பிட வைப்பேன்.” என்று வலுகட்டாயமாக சாப்பிட வைத்தான். இரண்டு நாட்களாக அவளை வேண்டுமென்றே கோபப்படவைத்தான்.
அந்த இரண்டு நாட்களில் ரிஷயைக் கொல்வதென்ன, அவன் மேல் சிறு கீறலைக் கூட வர வைக்கக் கூட முடியாது என்று தேனரசி புரிந்துகொண்டாள். சரி! இனி தற்கொலையாவது பண்ணிக் கொள்ளலாம் என்று முயற்சி செய்தாள். அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது அதுவும் முடியாது என்று.
Comments
Post a Comment