உன்னை விடமாட்டேன் – பகுதி 45

 "என்னை எத்தனை நாள் இப்படியே வைத்திருப்பதாக உத்தேசம்?” என்று கேட்டாள் தேனரசி. ரிஷி அவள் பேசியதைக் கேட்டு வியந்தாலும் எந்த முகமாறுதலையும் வெளிப்படுத்தாமல் “உனக்கு புத்தி வளரும் வரை“ என்றான். அவளுக்கு கோபம் வந்தது. முதலிலேயே தன் கோபம் செல்லாக்காசு என்பதை நடைமுறையில் அனுபவமாகக் கண்டவளாயிற்றே. அவன் வம்புக்கு இழுக்கிறான். மாட்டக்கூடாது என முடிவுகட்டினாள்.

‘மலைத்தேனுக்காகத்தானே தன்னைக் கடத்தினான்‘ என எண்ணியவாறு “மலைத்தேன் என்னவாயிற்று?” என்றாள். ரிஷிக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. ‘இவளை அடைத்து வைத்ததால் இவருக்கு பைத்தியம் ஏதாவது பிடித்துவிட்டதோ? என எண்ணியவன், “மலைத்தேனா? புரியவில்லை மலைத்தேன் உனக்கு வேண்டுமா? கொண்டுவரச் சொல்லவா!” என்றான். அவனை முறைத்தவள், “நீ மலைத்தேனுக்காகத்தானே எங்களிடத்திற்கு வந்தாய். மலைத்தேன் தர தாத்தா சம்மதித்துவிட்டாரா? என்றாள்.

உண்மையிலேயே இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ? என எண்ணினான். ஆனாலும் அவளிடம் பொறுமையாக, “அதுதான் உன் தாத்தாவிடம் அதற்கு இனி முயற்சி செய்யமாட்டோம் என்று உறுதி மொழி கொடுத்துவிட்டேனே.” என்றான். உடனே தேனரசி, “பொய். அப்படி பொய் சொல்லிவிட்டுத்தானே மலைத்தேனுக்காக யாரிடமோ மரத்தில் ஏறி எதிலோ ரகசியமாய் பேசினாய்.” என்றாள்.

“என்ன? ஓ! அப்படியா? சரி! நான் யாரிடம் பேசினேன்? சொல். நானும் தெரிந்துகொள்கிறேன் என்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். தேனரசி நினைத்தாள் “என்ன இது? இவன் எதற்க்கெடுத்தாலும் ஏடா கூடமாய் பேசுகிறானே!” என்று. பிறகு அவள் அவனிடம், “பேசியது நீதானே உனக்குத்தானே தெரியும்“ என்றாள். “நான் மலைத்தேனுக்காகத்தான் யாரிடமோ பேசினேன் என்று தெரிந்து வைத்திருக்கிறாயே! அப்படியென்றால் நான் யாரிடம் பேசி இருப்பேன் என்றும் தெரிந்திருக்குமே“ என்றான்.

தேனரசி கோபமாக, “ஆம்! எனக்குத் தெரியும். நீ உன் அடியாட்களுடன் பேசியிருப்பாய். அவர்கள் மூலமாய என்னைக் கடத்தி வந்து விட்டாய் . எத்தனை பேரை அழைத்தாயோ, அதனால் தானே என்மீது துளி காயம் ஏற்படாமல் மயக்கமடைந்த என்னைத் தூக்கி வர முடிந்தது? ஒத்தையில் என்னை அவ்வளவு கடின பாதையில் உன்னால் எப்படித் தூக்கி வர முடியும். இது கூட தெரியாத முட்டாளா நான்.” என்றாள்.

ரிஷி வாய் விட்டுச் சிரித்தான். “ம்...பரவாயில்லையே நீ அதிபுத்திசாலிதான் நான் ஒத்துககொள்கிறேன். அந்த மலைத்தேன் விஷயம் எனக்குப் புரியவில்லை. மலைத் தேனுக்காக அடியாட்களுடன் பேசிய நான் உன்னை ஏன் கடத்தினேன்? புரியவில்லையே?” என்றான். “அடியாட்கள் வந்தால் என் தாத்தா மலைத்தேனை வருடந்தோறும் தர சம்மதித்து விடுவாரா? அதனால் என்னைக் கடத்தி அவரை மிரட்டிக் கொண்டிருக்கிறாய்“ என்றாள். ‘ம்..அப்படியா சரி சாப்பிட நேரமாயிற்று. நீ சாப்பிடு’ என்று கிளம்பினான்.

தேனரசிக்கு அவனை எப்படி தடுப்பது என்றே புரியவில்லை. அவள் , “என்ன பதிலே கூறவில்லை“ என்றாள். ரிஷி அதற்கு “நீ தான் ரொம்ப தெளிவாக இருக்கிறாயே நான் எதுவும் சொல்லி உன்னைக் குழப்ப விரும்பவில்லை.” என்று கூறினான். வெளியேற முயன்ற ரிஷியிடம் தேனரசி, ‘நான் நாயா? என்னை இப்படி சங்கிலியிலேயே பிணைத்து வைத்திருக்கிறாய்.’ என்றாள். ‘நீ நாய் மாதிரி நடந்துகொண்டதால் உன்னை சங்கிலியிலேயே பிணைத்து வைத்திருக்கிறேன். இப்போது நீ சற்று அமைதியாக இருப்பதால் விடுவிக்கிறேன் மறுபடியும் நீ நாயாக மாறினால் மீண்டும் சங்கிலியில் பிணைப்பேன்” என்றான்.

'அவளுக்கு கோபம் வந்தாலும் அமைதியாக இருந்தாள் கோபப்பட்டு, ‘தான் சங்கிலியில் இருந்து விடுபடும் வாய்ப்பை விட்டுவிடக் கூடாதே‘.. தன்னை சங்கிலியில் இருந்து விடுவித்து அந்த அறையிலேயே பூட்டி வைப்பான் என எதிர்பார்த்தாள். ஆனால், அவன் தன்னுடன் வரும்படி அழைத்தான். காலை உணவை கையில் ஏந்தியபடி அவனுடைய அலுவல் அறைக்கு வந்தாள் தேனரசி. ரிஷி அவளை சாப்பிடும்படி சொல்லிவிட்டு அங்கிருந்த தன் உணவைச் சாப்பிட்டான். பிறகு தன் அன்றாட அலுவலைக் கவனிக்க ஆரம்பித்து விட்டான்.

பைலை திருப்பியவன் யார் யாரிடமோ பல்வேறு மொழிகளில் பேசினான். உத்தரவிடும் பாணியில் அதிகாரமாக பேசிய ரிஷியை அவள் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். எதிர்முனையில் மிகவும் பவ்யமான குரல்களே ஒலித்தன. பிறகு, அவள் மெதுவாக நகரலாம் என முயன்றது முடியவில்லை. ‘என் வேலை உன்னால் தடங்கல் ஆனால் உன்னை மீண்டும் சங்கிலியில் பிணைப்பேன்’ என்று மிரட்டினான் ரிஷி. அவள் பொம்மை போல அமர்ந்து கொண்டாள்.

தேனரசிக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இவனை எதிர்த்தால் இரு மடங்காய் திருப்பிக்கொடுப்பான். அடங்கி நடந்தால் அமைதியாக இருப்பான் என்று.. திடீரென ரிஷியின் குரல் மிகவும் தழைந்தது.. தேனரசி வியப்புடன் கவனிக்க ஆரம்பித்தாள்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31