உன்னை விடமாட்டேன் – பகுதி 47
தேனரசிக்கு ரிஷி தன்மேல் ஆசைப்படவில்லை என்பது நன்கு தெரியும். ஏனெனில், முகத்தில் எச்சிலை உமிழ்ந்த அன்று கோபத்தில் எல்லை மீறினானே தவிர, பிறகு அவன் பார்வையில் கூட எல்லையை மீறவில்லை. அவன் பெண் பைத்தியம் இல்லை. பணப்பைத்தியம் என்று நினைத்தாள். அவன் மலைத்தேனுக்காக அவளைக் கடத்தவில்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்தக்காரணமும் பொய். வேண்டுமென்றே சீண்டுகிறானே. என்ன செய்வது? என்ன பேசுவது? என்று தெரியவில்லை. தற்கொலை மட்டுமே குறிக்கோளாய் கொண்டவள் தவித்தாள். பதிலுக்கு பதில் பேசியவளை வாயடைக்க வைத்த வெற்றிக் களிப்புடன் மணியைப் பார்த்தான் ரிஷி.
காலை 11.45. மதிய சமையலை முடிக்க வேணடுமே! பரபரப்புடன் இயங்கினான். ரிஷி அவளை அழைத்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்தான். வெஜிடேபிள் பிரியாணிக்கு தேவையான காய்கறிகளை எல்லாம் நறுக்கினான். தேனரசிக்கு கண்ணில் பட்டது கத்தி தான். அதை எப்படியாவது எடுக்க வேண்டும் என எண்ணினாள். பிறகு அதை வைத்து தன் உடலில் எந்த பாகத்தில் குத்துவது என சிந்திக்க ஆரம்பித்தாள். ‘கழுத்தில், நெஞ்சில், வயிற்றில்… ஆம் அதுதான் சரி’ முடிவெடுத்தாள் தேனரசி. ரிஷி வேகமாக செய்தாலும், பரபரப்பாக இயங்கினாலும் தேனரசியைக் கண்காணித்தான். அது அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
எப்பொழுது அவனுக்கு கவனம் தன்னை விட்டு நீங்கும் என அவளும் எதிர்பார்த்திருந்தாள். இடையில் அவன் சொன்ன வேலையை செய்தாள். கடைசியாக ரிஷி தயிர் பச்சடியை செய்து முடிக்கும்போது தன் கைகளை கழுவச் சென்றான். இதுதான் சமயம் என்று தேனரசி கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியை எடுத்தாள். ஆனால் அந்தோ! அவளால் எடுக்கத்தான் முடிந்ததே தவிர, வயிற்றில் குத்திக் கொள்ள முடியவில்லை. ரிஷியின் கரம் அவளின் கரத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது.
அவன் முகத்தில் எல்லையில்லா கோபம் தெரிந்தது. ‘முட்டாள்’ என்று சீறினான். “உன்னை திரும்பவும் சங்கிலியில் தான் பிணைத்து வைக்க வேண்டும்” என்று கூறினான் ரிஷி . ‘ஐயோ மீண்டும் சங்கிலியா?’ என மனம் பதறியவள், “வேண்டாம். இல்லை, இல்லை இனி இவ்வாறு செய்ய மாட்டேன் என்னை விட்டுவிடு” என்றாள்.
“ஏன் தற்கொலை செய்ய முயன்றாய் தேனரசி” என்று கேட்டான் ரிஷி. “ம்... தற்கொலை செய்துகொள்ள மிகவும் ஆசை அதனால்” என்றாள். அவளை மீறி கண்களில் கண்ணீர் சரம்சரமாய் இறங்கியது அதை மறைக்க தலைமுடியை சரி செய்வதுபோல் வேறுபக்கம் திரும்பினாள். ரிஷி அதை கவனித்தாலும் கவனியாதவன் போல “நான் அவ்வாறு நினைக்கவில்லை தேனரசி. நீ தற்கொலை செய்ய முயன்றாலாவது என் கை உன் மேல் படாதா என்று ஏங்கி இவ்வாறு செய்கிறாய்” என்றான்.
அவள் முகம் கோபத்தால் செந்தணலாய் ஜொலித்தது. அவள் கோபம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் மனதில் என்ன நினைக்கிறாளோ அவளின் முகம் அதை கண்ணாடியாய் காட்டியது. அவள் கோபத்திலும் அமைதியாக இருந்தாள். அவனிடம் ஏதாவது பேசப் போக அதுவே சண்டையாக மாறி ரிஷி ஏடாகூடமாய் நடந்து கொள்வதற்கா? வேண்டவே வேண்டாம் என்று அமைதியாக இருந்தாள். ஆனால் ரிஷி விட்டால்தானே?
அவன் அவளை விடுவதாக இல்லை. “மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி. நான் முன்பே சொன்னேன் அல்லவா? என்மீது உனக்கு இன்னும் ஆசை தீரவில்லை என்று”. என்றான் இப்பொழுது அவளால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.
“என்னை கற்பழித்து என் வாழ்க்கையை சீரழித்து விட்டாய். இனி நான் வாழ்வதற்கு வாழ்க்கை எங்கே இருக்கிறது?”
“ஒரு முறை கோபத்தில் ஏதோ நடந்து முடிந்துவிட்டது. நீ ஒன்றும் கவலைப்படாதே! உனக்கு ஒரு நல்லவனாய் பார்த்து மணமுடித்து வைக்கிறேன். உன் வாழ்க்கைக்கு ஒரு குறையும் இருக்காது. நிச்சயமாய் நான் செய்வே...” அவன் இன்னும் முடிக்கவில்லை. ஆனால், தேனரசியின் குரல் ஆக்ரோஷமாய் ஒலித்தது.
Comments
Post a Comment