உன்னை விடமாட்டேன் – பகுதி 48

 "நீ என்ன எனக்கு ஒருவனைப் பார்த்து மணமுடிப்பது? இந்த வெளி உலகத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் என்னை மணமுடிக்க வருவார்கள் என்று எனக்குத் தெரியும். இதைப்பற்றி நீ பேசாதே. ஒரு பெண்ணை பற்றி உனக்கு என்ன தெரியும்? பெண்ணின் மனதைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? உன் தங்கைக்கு இவ்வாறு நடந்தால் இப்படிப் பேசி இருப்பாயா?” என்று கண்களில் நீர் வடிய அதே கண்களில் அக்னியும் பறக்க பேசினாள்.

தன் தங்கையைப் பற்றி பேசியதும் ரிஷிக்கு கோபம் வந்தது. “நீ என்ன அவளை உன்னுடன் ஒப்பிடுகிறாய்? அவள் உன்னை போல் அல்ல. நீ அபாண்டமாக என் மேல் பழி சுமத்தியவள். என் தங்கை அப்படியல்ல.”

தேனரசி இப்போது கேட்டாள், “நான் உன்மேல் அப்படி பழி சுமத்தியதற்காகவா என்னை கடத்தி வந்தாய்.”

‘ஆமாம்’ என்றான் ரிஷி.

“நான் நீ மலைத்தேனுக்காக எங்கள் வாழ்க்கை முறைக்கு தீங்கு விளைவித்து விடுவாய் என்று எண்ணி அவ்வாறு உன்னை விரட்ட முயன்றேன். ஏனென்றால் நீ பணக்காரன். பணக்காரர்கள் எல்லாம் மிகவும் மோசமானவர்களாக இருப்பார்கள். பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதனால் நான் உன்னை விரட்டுவதற்காக அவ்வாறு நடந்தும் கொண்டேன். அதற்காகவா இப்படி செய்தாய்? உனக்கு இது நியாயமாகத் தெரிகிறதா?”

“நீ என்ன இதை சாதாரண விஷயம் போல பேசுகிறாய் உன்னால் என் கால் உடைந்தது இது சாதாரணமான விஷயமா?”

“உன் கால்தான் சரியாகி விட்டதே! பின் ஏன் என்னை கடத்தி வந்தாய்?”

“ஒருவேளை என் கால் சரியாகாமல் போயிருந்தால் என்ன ஆயிருக்கும்”

“ஆனால் அப்படித்தான் ஆகவில்லையே! அதுமட்டுமல்ல, நான் சரிவர ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை என்றுகூட நீ எடுத்துக் கொண்டிருக்கலாமே. ஏன் உன் தங்கை இவ்வாறு யாரையாவது தவறாக நினைத்து நடந்து கொண்டிருந்தால் பதிலுக்கு அவன் இவ்வாறு நடந்து கொண்டால் நீ பொறுத்துக் கொண்டு இருப்பாயா?”

“என் தங்கை ஒன்றும் உன்னைப்போல் முட்டாள் அல்ல ஒருவரை எடை போடத் தெரியாமல் இருப்பதற்கு,”

“புத்திசாலித்தனமும், முட்டாள்தனமும் எப்பொழுதும் ஒரே போல் ஒருவருக்கு இருந்து விடுவதில்லை ஏதோ ஒரு சமய சந்தர்ப்பத்தில் உன் தங்கை முட்டாள் தனத்தினால் யாரையோ தவறாக நினைத்தால் அதனால் அவளுக்கும் இவ்வாறு நடந்து விட்டால் அது உனக்கு சம்மதமா?”

“ஹா ஹா ஹா ஹா நல்ல நகைச்சுவையாக இருக்கிறது என் தங்கை அதிபுத்திசாலி. நானே அவளிடம் மாட்டிக்கொண்டு முழிப்பேன். நடக்காததை பற்றி பேசாதே. வேறு ஏதாவது பேசு.”

“அந்த மாலுச்சாமி தான் உனக்கு பதில் கொடுப்பார்.”

“சரி சரி சாப்பிடு. பசி வந்துவிட்டது போலும். பயங்கரமாக உளறுகிறாய்.” என்றான் நகைத்தபடி,

தேனரசி தன் விதியை நொந்தபடி அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.

ரிஷியும் மனதில் சிந்திக்க ஆரம்பித்தான். “தேனரசி இவ்வாறு அமைதியாக இருப்பதும் நல்லதல்ல. கண்டிப்பாக மீண்டும் தற்கொலைக்கு முயற்சிப்பாள். எப்பொழுதும் காப்பாற்றிக் கொண்டிருப்பது சாத்தியமில்லை அதனால் வாழ்வில் இவளுக்கு பிடிப்பை உண்டாக்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம்?”

அன்று இரவு அவன் தேனரசியிடம், “நான் தூங்காமல் உன்னை கண்காணித்துக் கொண்டே இருக்க முடியாது என்னை மன்னித்துவிடு” என்று அவளை முன்பு இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான். தன்னை சங்கிலியால் மீண்டும் பிணைக்கப் போகிறான் என்பதை தேனரசி புரிந்து கொண்டாள். ஆனால் அவனோ அவளை நாட ஆரம்பித்தான். தேனரசிக்கு ஒன்றும் புரியவில்லை. இவன் ஒழுங்காகதானே இருந்தான். திடீரென என்னவாயிற்று? அதை அவனிடமே கேட்டாள் அவள்.

“நீ உண்மையில் கொள்கைப் பிடிப்பு உள்ளவள் தானா என்று சோதனை செய்யப் போகிறேன்”

“கொள்கைப் பிடிப்பா? என்ன கொள்கை பிடிப்பு?”

அவன் பேசவில்லை. அவளால் அவனைத் தடுக்க முடியவில்லை. ரிஷி தான் நினைத்ததை சாதித்து விட்டு மீண்டும் அவளை சங்கிலியால் பிணைத்த போது அவள் கோபத்துடன் என்ன தவறு செய்தேன் என்று இப்போது என்னிடம் இவ்வாறு நடந்து கொண்டாய் என்றாள்.

“நீ நன்கு யோசித்துப் பார். புரியும்." என்று கூறிவிட்டு சென்றான் ரிஷி.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31