உன்னை விடமாட்டேன் – பகுதி 50

 வெற்றிகரமாக எழுத்தை எழுதி படித்த பின் ரிஷியிடம் தைரியமாக கொள்கைப்பிடிப்பைப் பற்றி கேட்க ஆரம்பித்தாள் அவனும் தன் அலுவல் வேலையை மூட்டை கட்டி வைத்துவிட்டு சொல்ல ஆரம்பித்தான். "நான் முதலில் சில கேள்விகளைக் கேட்பேன். நீ பதில் சொல்லிக்கொண்டே வா. பிறகு நான் சொல்ல வருவது உனக்கு புரியும் சரியா?" என்றான் ரிஷி.

“முட்டையை நீ சாப்பிடுவாயா?”

“இல்லை சாப்பிட மாட்டேன்.”

“ஏன்?”

“அந்த முட்டைக்குள் இருப்பது ஒரு உயிர். தெரியுமா உனக்கு?”

“அப்படியா ஒரு உயிர் என்கிறாய். அதுதான் பிறக்கவே இல்லையே” “பிறக்காவிட்டாலும் அது உள்ளே உயிருடன் தான் இருக்கிறது. உருவாகி விட்டாலே அது உயிர் தானே.

“எல்லா உயிருக்கும் அப்படித்தானா?”

“ஆமாம் அப்படித்தான்.”

“பிறகு பேச்சை மாற்ற மாட்டாயே. இந்தக் கொள்கை பிடிப்புடன் நிச்சயமாக இருக்கிறாயா?”

“நான் ஒன்றும் பச்சோந்தி அல்ல. பேச்சை மாற்றுவதற்கு.

“எல்லா உயிருக்கும் அப்படித்தான் என்றால் ஒரு உயிர் உன் வயிற்றில் உருவானால்... உனக்கு கரு உண்டானால் அதற்கும் அப்படித்தானே”

“என்ன” என்று அதிர்ந்தாள் தேனரசி.

“நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லையே உன் வயிற்றில் உண்டான கருவுக்கும் அதுதானே”

“ஓ நான் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்பதற்காக நீ என்னை கர்ப்பவதியாக ஆக்குகிறாயா?”

“இல்லை, இல்லை நீ கொள்கை பிடிப்புடன் அந்த உயிரை உயிராக மதிக்கிறாயா? என்று சோதனை செய்து பார்க்கிறேன்”

“நான் உயிரோடு இருப்பது உனக்கு என்ன முக்கியம்” கோபத்துடன் கேட்டாள் தேனரசி.

“நான் ஒன்றும் அப்படி சொன்னதாக நினைவில்லையே நீ கொள்கை பிடிப்புடன் இருக்கிறாயா என்பதை சோதனை செய்வதாக தான் கூறினேன்.”

தேனரசி மனதில் மாலுச்சாமியை நினைத்துக்கொண்டாள். “சாமி! இது என்ன சோதனை!” வாய்விட்டு சொன்னவள் கதறி அழுதாள். அவளை சமாதானப்படுத்த ரிஷி அணைத்தான். ஓர் ஆணின் ஸ்பரிசத்தால் அவள் அவனை அனிச்சை செயலாக உதறித் தள்ளினாள். அவனுக்கு கோபம் வந்தது. மீண்டும் அவளை வேண்டுமென்றே பலாத்காரமாக அணைத்தான். தேனரசி இப்பொழுது மிகவும் சோர்ந்து போனாள். அவனை எதிர்த்து என்ன செய்ய முடியும்? அவள் அவனைத் தடுக்க முற்படவில்லை. வாடிய பூ மாலை போல துவண்டவளை எதுவும் செய்யாமல் மென்மையாக தலைமுடியைக் கோதி விட்டான். அவள் கண்களில் பெருகிய நீரைத் துடைத்தான்.

தேனரசிக்கு ரிஷியின் செய்கை புரியவில்லை. தன் துயரம் அவனைப் பாதிக்கிறது என்பதை உணர்ந்தாள். அவன் தொடுகையை மறுத்தால் வேண்டுமென்றே பல மடங்காய் தொடுவான் என்பதும் புரிந்தது. “நீ எதற்காக உண்மையில் என்னை கடத்தினாய்? என்னை என்னதான் செய்யப் போகிறாய்?” என்று கேட்டாள் தேனரசி.

ரிஷிக்கு, “உன்னை நான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்” என்று சொல்லி அவளின் துயரத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால், ‘உன்னையா நான் திருமணம் செய்து கொள்வது? என்று அவள் கூறி விட்டால் என்ன செய்வது? என்று தயங்கினான். தன்மேல் வேண்டுமென்றே சாய்ந்து மயக்க முயலும் பெண்களை கண்டிருக்கிறான் தன்னை மணக்க விரும்பிய பல பெண்களை பார்த்திருக்கிறான் ஆனால் தேனரசியைக் கண்டு ரிஷிக்கு பயம்தான். அவனுக்கு இது ஒரு கௌரவ பிரச்சனை ஆயிற்று. ஆகவே அவன், “எனக்கு ஒரு அழகான குழந்தை தேவைப்படுகிறது அதை வளர்க்க ஒரு தாயும் தேவைப்படுகிறாள். வேறொன்றுமில்லை என்று கூறினான். “அதற்கு நானா கிடைத்தேன்” சீறினாள் தேனரசி. “ஆமாம் அழகான குழந்தை! என்று சொன்னேன் அல்லவா!”

“அது முட்டாளாய் இருக்கும் பரவாயில்லையா”

“நான் அப்பாவாயிற்றே! புத்திசாலி ஆக்கிவிடுவேன்.” தேனரசிக்கு ஒன்றும் ரசிக்கவில்லை அவள் சோர்ந்து போய் படுத்தாள்.

அவளைத் தன்னறைக்கு தூக்கிச் சென்று தன்னுடனே படுக்க வைத்துக் கொண்டான். தேனரசிக்கு உள்ளுக்குள் கோபம், கோபமாய் வந்தது. கட்டிய மனைவி போல் இப்படி அருகிலேயே படுக்க வைத்திருக்கின்றான். மறுத்தால் நிச்சயம் கோபம் வரும். ஏடாகூடமாய் நடந்து கொள்வான். அவனிடமிருநது மெதுவாக விலகி என்னை அந்த அறையிலேயே சங்கிலியில் பிணைத்துவிடுகிறீர்களா? என்று தன் கண்ணீரை அடக்கிக்கொண்டு மென்மையாகக் கேட்டாள்.

ரிஷிக்கு செருப்பால் அடித்ததுபோல் இருந்தது. ‘உன் அருகில் படுப்பதைவிட சங்கிலியில் பிணைத்து கஷ்டப்படுவதே மேல்.’ என்று கூறுவதைப்போல் இருந்தது. தனக்கு கோபம் வரக்கூடாது என்று மென்மையாய்க் கேட்கிறாள் என்பதும் புரிந்தது. தன்னைப் பிடிக்காத பெண்ணும் உலகத்தில் இருக்கிறாள். அவளுக்கு தன்னை சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று உணர்ந்தான். தாத்தா கூறியதைக் கேட்டிருக்கலாம் எல்லாம் தலைவிதி தன்னையே நொந்து கொண்டவன் அவளிடம் ,”இல்லை. நீ இப்படியே தான் படுத்தாக வேண்டும்” என்றான். வேறு வழியின்றி துயரத்துடன் படுத்தவள் அப்படியே தூங்கினாள்.

தன் மதிப்பு என்ன? மரியாதை என்ன? அந்தஸ்து என்ன? ஆனால் அதையெல்லாம் தூசாகக் கருதி தன்னை விலக்கும் பெண்ணும் இருக்கிறாளே அவளை எப்படி தன் பக்கம் இழுப்பது என தெரியாமல் தவித்தான் ரிஷி.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31