உன்னை விடமாட்டேன் – பகுதி 52

 ரிஷி தன் தங்கையை வைத்துக்கொண்டு எங்கிருக்கிறான் என தெரியாமல் தவித்தான் மலையரசன். அவன், ‘ரிஷி வரும்போது தங்கையை அழைத்து வருவானா?’ என குழம்பி நின்றான். மனம் அலைமோதியது. ‘பெண்களிடம் தவறாய் நடப்பானோ? பெண்களை நம் முன் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தது நடிப்பாக இருக்குமோ.?’

“நிஜமா? என்ன நடந்தாலும் நான் உன் நண்பன்தானா? நல்லா, நிதானமா யோசிச்சு பதில் சொல்லு” புன்னகையுடன் கேட்ட ரிஷியின் முகம் நினைவுக்கு வந்தது. அதற்கு, தான் சொன்ன பதிலும் நினைவுக்கு வந்தது.

மாயவனும், தென்னரசும் கைவினைப் பொருட்களுடன் வந்துசேர்ந்தனர். விலையை பல மடங்காய் உயர்த்தி விற்க முடிவு செய்தான் மலையரசன். நியாய விலை சொன்னால் இந்த பணக்கார ஏரியாவில் விரைவில் விற்றுவிடும். அது மட்டுமல்ல பொருளை திரும்பவும் எடுத்து வர திருநெல்வேலியில் உள்ள தங்கள் இருப்பிடம் செல்லவேண்டும். நேரம் விரயம்.

அவன் வியாபாரி அல்ல. செலவுக்கு பணம் சிறிது வந்தாலும் போதும் அன்றைய பொழுதை கழித்து விடலாம்.. அதனால் அவன் அநியாய விலையைத்தான் நிர்ணயித்தான். அவனுக்கு ஒரு நாளைக்கு ஒரே ஒரு பொருள் மட்டுமே விற்க வேண்டும். மனதில் கணக்கிட்டு செயல்படுத்தினான். விற்ற முதல் நாளே அநியாயம் என்றாலும் பொருளை சிலர் வாங்கினர். 7 பொருட்கள் சின்னதும், பெரிதுமாய் விற்றுத்தீர்ந்தது. கையில் 70,000 வந்தது. ஆச்சரியப்பட்டு போனான். இன்னுமே விலையை அதிகரித்தான்.

பொருளை விற்கும் போது மாயவன், தென்னரசு ஆகிய இருவரிடமும் “நாளை கடையை இதே முறையில் நீங்கள் இருவரும் பார்த்துக்கொள்ளுங்கள். ரிஷியை நாளைப் பார்த்து விடுவேன் என நினைக்கிறேன். பார்த்தால் அவன் சட்டையைப் பிடித்திழுத்து தேனரசியை எங்கு வைத்திருக்கிறாய்? இத்தனை நாட்களாய் என்ன செய்தாய்? என்று கேட்பேன்” என்றான் கோபத்துடன். மேலும்,”நீங்கள் வர வேண்டாம். நான் மட்டுமே போய் பார்க்கிறேன்” என்றான். இருவரும் பயந்தனர். ."அவன் பணக்காரன் சட்டையெல்லாம் பிடிக்க முடியாது கோபப்படாமல், என்ன செய்ய வேண்டும் என நிதானித்து முடிவெடு.” என்றார்கள்.

மலையரசனுக்கும் அது சரி என்றே பட்டது. ‘இந்த இடம் ரிஷியினுடைய கோட்டை. அவனை ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மையே.‘ என நிதானத்துடன் சிந்திக்க ஆரம்பித்தான் .

ரிஷி அன்று அதிகாலையிலே எழுந்து பரபரப்பாய் வேலை செய்துமுடித்தான்.. பிறகு தேனரசியை காலைக்கடன்களை முடிக்க வைத்தான். ‘காலை 8 மணிக்குள் வீட்டிற்கு சென்று அம்மா. தங்கையை பார்த்துவிட்டு அப்படியே 10 மணிக்கு முன் ஆபிஸிற்கு செல்லவேண்டும். மதியம் 1 மணிக்கு ஆபிஸிலிருந்து இங்கு வந்து விட வேண்டும்.’ மனதிற்குள் கணக்கிட்டான். 6.30 மணிக்குள் குளித்து உடை மாற்றி வந்தான்.

சங்கலியில் பிணைக்கப்பட்டுள்ள தேனரசியிடம் “ஒரு ஆறு மணி நேரம் இங்கிருக்க மாட்டேன். ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டான். அவள் எங்கேயோ வெறித்தபடி அமைதியாக இருந்தாள். அவளிடம், “நான் சொல்வது காதில் விழவில்லையா? சரி, சரி நான் கொடுத்த பாடங்களை படித்து முடி. இல்லையென்றால் இன்று இரவு நான் உன் அருகில் வருவதை மிகவும் எதிர்பார்க்கிறாய் என்று அர்த்தம்.” என்றான். தீக்கனல் தெறிக்க அவனை முறைத்தாள். சிரித்தபடியே நின்றவனை வியப்புடன் பார்த்தாள். கோட்சூட், டை சகிதமாக நின்றவனை முதன்முதலாக அந்த ஆடையுடன் அன்று தான் பார்த்தாள். பொதுவாக அவன் உடுப்பு விலை உயர்ந்ததாக இருந்தாலும் சாதாரண உடை போலத்தான் இருக்கும்.

“தங்கையை பார்க்க இப்படித்தான் உடை அணிய வேண்டுமா?” என்றாள். தேனரசி.

“இல்லை. வேலையை பார்க்க இந்த உடை அவசியம். என் அலுவலகத்திற்கு அப்படியே சென்றுவிடுவேன். நன்றாயிருக்கிறதா?”

”அது எப்படி இருந்தால் எனக்கென்ன?”

“பாராட்டவும் மனது வேண்டும். நீ அழகாய் இருக்கிறாய் என்று நான் மறைமுகமாக பாராட்டுகிறேன் அல்லவா!”

“முட்டாள் என்று நேரடியாகத் திட்டுவது என்ன கணக்கு?”

“ஓஹோ... நான் அவ்வாறு கூறுவதால் பாராட்டு கிடையாதா?”

“நீ என்ன நான் பேசுவதன் பொருளையே மாற்றுகிறாய் . எவனோ ஒருவனை நான் ஏன் பாராட்டவேண்டும். என்னைப் பாராட்ட மனம் இருப்பதுபோல் பேசுகிறாயே அதை விட பல மடங்கு முட்டாள் என்று திட்டுகிறாயே? அதை எந்த கணக்கில் சேர்ப்பது.? என்றுதான் கேட்டேன்.”

“ஓ...அப்படியா? முதலில் நான் யாரோ ஒருவன் அல்ல. உன் வயிற்றில் வரப்போகும் குழந்தைக்கு தந்தை. அப்புறம்...”

“என் வயிற்றில் உன் குழந்தை உருவாகாது. மாலுச்சாமி உருவாக விடமாட்டார்.”

“அப்படியா? என் குழந்தைக்கு உன்னை தாயாக்காமல் நானும் உன்னைவிட மாட்டேன்.”

“இல்லை...இல்லை. அப்படி நடக்காது” தேனரசி அழ ஆரம்பித்து விட்டாள்..

“சரி, சரி போகும்போது இப்படித்தான் அழுவாயா?” எரிச்சலடைந்தான் ரிஷி. தேனரசிக்கு கடுப்பாய் இருந்தது. ஏதோ அவனுடைய வீட்டில் ஒரு நபர் என்பதைப் போலல்லவா பேசுகிறான். ஆனாலும் கண்களையும், முகத்தையும் துடைத்து வேறுபக்கமாய் முகத்தை திருப்பியவளை திருப்பவிடாமல் முத்தமிட்டான்

அவனிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டு, “உன்னைப் போய் பெண்கள் விஷயத்தில் உத்தமமானவன் என்று நினைத்தேனே!” என்றாள் கோபமாக, “கவலைப்படாதே! உன்னைத் தவிர வேறு பெண்ணிடம் போகாமல் உத்தமனாய் இருக்கிறேன் சரியா?” மறைமுகமாக தன் மனதை உரைக்க முயன்றான் ரிஷி. அவளுக்கு புரிந்தால்தானே! “உன்னிடம் நான் ஒன்றும் எதுவும் கேட்கவில்லை. நீ எப்படி இருந்தால் எனக்கென்ன?” என்றாள் தேனரசி.

“சரி' எனக்கு நேரமாயிற்று நான் சென்று வருகிறேன். மறக்காமல் அனைத்தையும் எழுதிப் பார். படி, தேவையானவற்றை அருகில் வைத்துள்ளேன். மதியம் வந்துவிடுவேன்” என்று சென்றுவிட்டான். படித்தால் இன்று இரவு ரிஷி அருகில் வருவதை தடுக்கலாம் என எண்ணி மும்முரமாய் படிக்க ஆரம்பித்தாள். அவளுக்கு உதவியாக டிவியில் படிப்பு சம்மந்தமாக வீடியோ ஒன்றும் ஓடியது.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31