உன்னை விடமாட்டேன் – பகுதி 66

 "இங்கே பார் ரிஷி, என் தங்கையை அங்கு வந்து ஆறு மாதங்களாக தேடி பார்க்க முடியவில்லை. புளியமரத்தில் ஒரு கொப்புல இருக்கிற புளியங்காய் எட்டலன்னா நாங்க என்ன செய்வோம்னா அடுத்த கொப்பை பிடித்து இழுப்போம். அப்போ எட்டாம இருக்கிற புளியங்காய் தன்னால பக்கத்துல வந்துடும். உன்னைப்போல.” என்றான் மலையரசன் வேண்டுமென்றே ரிஷியை சீண்டுவதற்காக.

“ஹேய் நான் யாருக்கும் எட்டாதவன் கிடையாது. என்னைப் பார்க்கணும்னு செக்யூரிட்டிங்ககிட்ட சொன்னா நிச்சயம் என்னை நீ பார்த்திருக்கலாம். உன் தங்கை எங்கே? என்று என்னிடம் கேட்டிருக்கலாம். எல்லாத்தையும் விட்டுட்டு என் தங்கையை ஏன் கடத்தினாய்?”

நடுவில் புகுந்த மாயவன் “மலையரசா! வெளியாளுங்க பேச்சுல சாகசக்காரங்க டோய். பாத்தியா? முதல்ல பொட்டப்புள்ளய கடத்தின அவன் உத்தமன் மாதிரியும் .....”

“மாயவா நான் உன்கிட்ட பேசல. மலையரசா சொல்லு.” என்றான் ரிஷி.

“நான் வருவேன்னு உனக்குக் கண்டிப்பா தெரியும். ஏன் உன் செக்யூரிட்டிக்கிட்ட அவன் என் நண்பன் மரியாதையா உள்ள அழைச்சுட்டு வாங்க அப்படின்னு சொல்லியிருக்கலாம்ல. அதைவிட்டுட்டு எர்த்தை வைச்சேன்னு பேசுற நீ!”

“நீ கண்டுபிடிச்சி வருவேன்னு என்ன நிச்சயம்? சொல்லு. நீ ஒரு வேளை வந்திட்டின்னா புத்திசாலித்தனமா என்கிட்ட வராம, வீரசாகசமா எதுனா பண்றேன்னு முட்டாள்தனமா......

“டேய் டேய் நிறுத்து. அங்கே இருக்கிறவங்ககிட்ட கவனமா இருங்க. எச்சரிக்கையா இருங்கனு உத்தரவு போட்ட நீ பேசுறியா? அவன் உள்ளே வராம கவனமா இருங்கன்னு சொல்லல நீ!”

“டேய்! கண்ல பட்டா சுட்டுடுறோம்னு சொன்னப்போ என்ன சொன்னேன்?. சுடக்கூடாது. ஒரு காயம்படக் கூடாதுன்னு சொன்னேன்ல. அது மட்டுமில்ல காட்டுபங்களாவில் இல்லாத உன் தங்கையை தப்பிக்க வைச்சி கூட்டிட்டு போறேன்னு, அங்க இருக்கிற தீவிரவாதியை விடுவிச்சிட்டீன்னா போலீஸுக்கு நான் என்ன பதில் சொல்றது? சொல்லு”

“அப்பப்பா...போதுமடா. உன்ன பேச்சில ஜெயிக்க முடியுமா? என் தங்கை உண்மையிலே எங்கிருக்கிறா? என்ன பண்றா? புத்தி புகட்டுறோம்னு அவளை என்ன பண்றிங்க?”

“முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு. என் தங்கையை ஏன் கடத்தினாய்?”

“என் தங்கையின் நிலையை அப்படியாவது தெரிந்துகொள்ளலாம்னுதான்.” சொல்லிவிட்டு மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்தான் மலையரசன்.

“அத்தை பசிக்குது. சீக்கிரம் சாப்பாடை போடுங்க” அமர்ந்தான் ரிஷிகேஷ். 'அத்தை' என்று ரிஷி அழைத்ததும் அண்ணன் இந்த திருமணத்தை ஒத்துக்கொண்டான் என்பதை உணர்ந்து அதிர்ந்தாள் சூர்யகலா. .முல்லைக்கொடியும், முல்லையரசியும் உடனடியாக அவனுக்கு பரிமாறினார்கள்.

சிங்கராசா தாத்தா ஒன்றை கவனித்தார். 'நேரடியான சரியான பதிலைச் சொன்னவுடன் மீண்டும் மீண்டும் அதேகேள்வி கேட்பதை நிறுத்திவிட்டான் ரிஷி. முதலில் நீதான் தவறு செய்தாய். பதிலுக்கு நான் செய்தேன். நான் செய்தது தவறல்ல என்பது போன்ற வாதங்களுக்கு பதிலுக்கு பதில் கொடுத்தான். மிக சரியான பதிலை சொன்னவுடன் விட்டுவிட்டான். இவ்வளவு நுண்ணறிவு இருக்கும் இவனை அடைய தேனரசி கொடுத்து வைத்திருக்கவேண்டும். அந்த கொடுப்பினை அவளுக்கு இருக்கிறதா? தெரியவில்லை.’ என்று அவர் மனதுள் நினைத்துக் கொண்டார். பசி தீர நன்கு சாப்பிட்டு மோரைக் குடித்தவன் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு நேரமாயிற்று தாத்தா! நான் போயிட்டு வர்றேன்.” எழுந்தான் ரிஷி.

“டேய்! தேனரசி எங்கே, எப்படி இருக்கிறாள்? கேட்டான் மலையரசன்.

“அதான் என் தங்கைய கடத்தினா தெரிஞ்சிக்கலாம்னுதான்னு கடத்தினாய். எப்படியோ தெரிஞ்சுக்கோ. பைபை. தாத்தா வரேன். என்று கூறி கிளம்ப முற்பட்டான்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31