உன்னை விடமாட்டேன் – பகுதி 69

 மலையரசன் இருக்கும் குடிலுக்கு பாலைக் கொடுத்து சூர்ய கலாவை உள்ளே அனுப்பினார்கள். அவளோ பயமாய் இருக்கிறது. நான் போக மாட்டேன் என அழ ஆரம்பித்து விட்டாள். பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க தாத்தா வந்தார்.

“ஏம்மா தாத்தாவைப் பார்த்தா பயமா இருக்கா?”

“இல்ல தாத்தா!”

“சரி என் கூட வா” என்று மலையரசன் இருக்கும் குடிலினுள் கூட்டிச்சென்றார்.

கட்டிலில் சூர்யகலாவை சீண்டும் ஆவலில் அமர்ந்து கொண்டு இருந்தவன், தாத்தாவைக் கண்டு திகைத்து எழுந்தான். மலையரசன் காலில் சூர்யகலாவை விழச் சொன்னார். விழுந்தாள். “பாலை அவனிடம் கொடுத்து பாதியைக் குடித்து மீதியை உனக்குக் கொடுக்கச் சொல்” என்றார். சூர்யகலா மனதுள் 'அய்யய்யோ மறுபடியும் எச்சில் பாலைக் குடிக்க வேண்டுமா?' என எண்ணியபடி தாத்தா கூறியதைச் சொல்லி கொடுத்தாள். அவன் குடித்துவிட்டு மீதியைக் கொடுக்க வாங்கி விட்டு தாத்தாவைப் பார்க்க “குடிம்மா” என்றார் சிரித்தபடி. வேறு வழியின்றி அந்தப் பாலைக் குடித்தாள். “சரிம்மா ஒன்னும் பிரச்சினை இல்ல. நீ கட்டில்ல படுத்து தூங்கு” என்றார். தயங்கி நின்றவளை எப்படியும் இரவு முழுக்க தூங்காம இருக்க முடியுமா? சொல்லு. படும்மா. என்றார்.

சூர்யகலா கட்டிலில் படுத்த பின், “மலையரசா! நீயும் பக்கத்துல படுத்து தூங்கு. நாளைக்கு காலைல சூர்யகலா ஏதாவது புகார் பண்ணா அவ்வளவுதான். என்ன புரிஞ்சுதா!” என்றார் தாத்தா. “தாத்தா! என்ன இது” என்றான் மலையரசன். வெளியில் பெண்களின் சிரிப்பு சத்தம் கேட்டது. “ஏண்டா காலைல தாலி கட்டமாட்டேன்னு அடம் பிடிச்சவன்தானே நீ. பேசாம நீயும் படுத்து தூங்கு. நிச்சயம் அவகிட்ட இருந்து எந்த புகாரும் உன்னப்பத்தி வரக்கூடாது. புரிஞ்சுதா! அம்மா, சூர்யகலா! நீ நிம்மதியா படுத்து தூங்கு” என்று கூறி விட்டு மீண்டும் மலையரசனை எச்சரித்து விட்டு தாத்தா வெளியே சென்றான்.

அவளைச் சீண்டவேண்டும் என்று ஆவலுடனும், அவளை அணைக்க வேண்டும் என்றும் ஆசையுடன் இருந்தவன் கதவைத் தாளிட்டுவிட்டு அவளின் அருகே கண்களை மூடி பேசாமல் படுத்துக்கொண்டான். புரண்டு படுத்தால் மேலே கையோ காலோ பட்டு அவள் கத்திவிட்டால், பயந்து அடக்க ஒடுக்கமாய் ஒரே நிலையில் படுத்தான். கடைசியில் அது கடினமாக இருக்கவே சட்டென்று கீழே தலையணையைப் போட்டு போர்வையை விரித்து படுத்து தூங்கிவிட்டான்.

ரிஷியோட தங்கச்சி இவ்வளவு கோழையா? என்று அவன் சிரித்தது, பிறகு தன்னருகில் அவன் வர முயன்றது, மலையரசனின் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி அவனுக்கு எதிராக பேசியது எல்லாம் வரிசையாய் நினைவுக்கு வந்தன. பெண்கள், அதுவும் குறிப்பாக மனைவி, தன் கணவன் பெயர் சொல்லி அழைப்பது கை நீட்டி பேசுவது அங்கே ஆண்களுக்கு கௌரவக் குறைச்சல் என முன்பு அண்ணன் கூறியதும் நினைவுக்கு வந்தது. பயந்துபோய் ஆடாமல், அசையாமல் படுத்திருந்த சூர்யகலாவுக்கு மலையரசன் கீழே போர்வையை விரித்து படுத்தது மிகவும் ஆச்சரியமாகி விட்டது. 'ஆஹா! இனி தாத்தாவை காக்கா பிடித்து வைத்துக்கொள்ள வேண்டியது தான்' என மனதுள் முடிவெடுத்தபடி தூங்கினாள் சூர்யகலா.

XxxxxxxxxXxxxxxxXxxxxxxx

.கழுத்தில் தாலி ஏறியதும் தேனரசிக்கு 'மாலுச்சாமி தனக்கென முடிவு செய்த கணவன் இவனே!' என மனதுள் மாலுச்சாமிக்கு நன்றி கூறியபடி ரிஷியுடன் இருந்தாள். அவனோ அவளை தனியே ஓரிடத்தில் நிற்க வைத்துவிட்டு தன் நண்பர்களிடமே பேசியது, அவளுக்கு எரிச்சலைக் கிளப்பியது. ரிஷி நண்பர்களிடம் பேசியது அப்பா வீட்டைவிட்டு கிளம்பியதும் தகவல் கொடுக்க வேண்டும் என்பது பற்றியதாகும்.. ரிஷி காரிலே மண உடையிலிருது சாதாரண உடைக்கு மாறியதும் தேனரசிக்கு எரிச்சலை மூட்டியது. பிறகு சாதாரண ஓட்டலில் சாப்பிட்டார்கள்.

XxxxxxxxxXxxxxxxXxxxxxxx

சூர்யகலா எழுந்து பார்த்தால் அங்கு மலையரசன் இல்லை. சரி பல்துலக்க வேண்டுமே என எண்ணியபடி வந்தால் சிங்கராசா தாத்தாவோடு பேசிக்கொண்டிருந்தான். மலையரசன், .சூர்யகலாவைக் கண்டதும் வேப்பங்குச்சை ஒடித்து அவளிடம் கொடுத்து எப்படி பல்துலக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்தான். அவளை குளிக்க சுனைக்கு கூட்டிச் சென்றான். பல இடங்களில் சூர்யகலாவை கைப்பிடித்து விழாமல் பார்த்துக்கொண்டான். ‘அடேங்கப்பா! என்ன ஒரு வலிமை' மனதிற்குள் வியந்தாள்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31