Posts

உன்னை விடமாட்டேன் – பகுதி 77

 தமையனிடம் பேசிக்கொண்டிருந்த தேனரசி கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறந்தாள். “இந்தாம்மா மூன்றுபேருக்கும் இரவு உணவு கொண்டுவந்திருக்கிறேன். நீ பார்த்துக் கொள்ளம்மா. மாப்பிள்ளை! சூர்யகலா எப்படி இருக்கிறாள்? கூட்டிக்கொண்டுவந்திருக்கக்கூடாதா?” தன்விழி நீரைக் கட்டுப்படுத்தியபடி பேசிய ரிஷியின் தாயாரிடம் தன் தாயைக் கண்டான் “அம்மா! கவலைப்படாதீர்கள். சூர்யகலா சுகமாக இருக்கிறாள். திரும்பவும் இங்கே வரும்போது கண்டிப்பாக கூட்டி வருகிறேன்.என்று கூறிவிட்டு, சூர்யகலா தாத்தாவுடன் சேர்ந்து பறவைகளுக்கு உணவளிப்பது, அங்குள்ள பெண்களுடன் விளையாட்டைக் கற்று விளையாடிக்கொண்டிருப்பது, பிறகு கைவினைப் பொருட்களை செய்து பார்த்துக் கொண்டிருப்பதையெல்லாம் விலாவாரியாக விவரித்தான் மலையரசன். அங்கு அவள் சந்தோஷமாய் ஒன்றி வாழ்கிறாள் என்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தாள். சரி சரி நேரமாகிவிட்டது. நீங்கள் இருவருமாய் சாப்பிடுங்கள் என்று சென்றுவிட்டார். என்ன இருவரா? என்று நினைத்தான் மலையரசன். மலையரசன் அப்போதுதான் கவனித்தான், ரிஷி தன்னுடன் சாப்பிடாமல் தனியே சாப்பிட்டு முடித்துவிட்டு, கம்யூட்டரில் வேலையைக் கவனிக்கிறான் என்று. அவன...

உன்னை விடமாட்டேன் – பகுதி 76

ரிஷியின் தாயார் காயத்ரி, முன்னே வந்து மலையரசனை வரவேற்றார். அவரிடம் மலையரசன் கோபமாக ஏதோ சொல்ல முயல ரிஷி “வாடா! தேனரசியைப் பார்க்கலாம்“ என்று தனது மாடிக்கு இழுத்துச் சென்றான். பிறகு அவனைவிட்டு விட்டு அறைக் கதவைத் தட்டினான். திறந்த தேனரசிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இருக்காதா பின்னே! மணி ஆறு தானே ஆயிற்று. அதற்குள் அருமைக் கணவன் வந்து விட்டானே! தன் கரங்களை அவன் கழுத்தில் மாலையாக போட்டபடி, “அத்தான்! இன்று வேலை சீக்கிரம் முடிந்துவிட்டதா?” என்றாள் உற்சாகத்துடன். “ஆமாம்.” என்றான் ரிஷி. தொடர்ந்து பின்னே வந்த மலையரசன் தேனரசியின் குரலைக் கேட்டுதான் அவளை அடையாளம் காண முடிந்தது. அவ்வளவு ஆடை அலங்காரம். தேனரசி பின்னால் வரும் ஆடவனைக் கண்டு பதறியவாறு தன் கரங்களை ரிஷியின் மேலிருந்து எடுத்தாள். ஆனால் ரிஷியோ அவளைத் தன்னைவிட்டு விலக அனுமதிக்கவில்லை. சேர்த்து அணைத்தான். “என்ன இது? கண்ட ஆண்களை நம் அறைக்குள் ஏன் கூட்டி வந்தீர்கள்“ கோபத்துடன் ரிஷியிடம் சிடுசிடுத்தாள் தேனரசி. “நான் முடியாது என்று தான் சொன்னேன். ஆனால் எனது தங்கையை பார்த்தே ஆகவேண்டும் என்று இவன் ஒற்றைக் காலில் நிற்கிறான். வேறு வழியின்றி கூ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 75

 மலையரசனுக்கு அந்தி வேளையா? இரவாகிவிட்டதா? என்பது கூடத் தெரியவில்லை. நடுவில் ஒரு சில குறிப்பிட்ட போன்களில் மட்டுமே ரிஷி பேசினான். அதுவும் செக்ரெட்டரி பேசிய பின். ஒரு வழியாக அந்த செக்ரெட்டரி ஒரு பெட்டியில் பைல்களை அடுக்கிவைத்தார். பென் டிரைவ் போன்ற வேறு சில பொருட்களையும் வைத்தார். கடைசியில் ரிஷி கொடுத்த பைலையும் அதில் வைத்து மூடினார். அங்கிருந்து செக்ரெட்டரி கிளம்பிவிட்டார். ‘அப்பாடியோ’ என்றிருந்தது மலையரசனுக்கு. இந்த ஆள் கிளம்பிவிட்டால் ரிஷியும் கிளம்புவான் எனத் தோன்றியது மலையரசனுக்கு. ரிஷி இருப்பிடத்திலிருந்து எழுந்து மலையரசனைப் பார்த்தான். பிறகு வெளியே கதவைத் திறந்து போக முயன்ற செக்ரெட்டரியிடம் ஏதோ ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு அருகிலுள்ள ஓர் அறைக்குள் போய்விட்டான். எப்படியிருந்தாலும் ரிஷி வருவான் என காத்திருக்கும்போது திடீரென இருவர் வந்து மலையரசனை தலை முதற்கொண்டு நாகரீகமாக மாற்றி, ஆடைகளைக் கழட்டி தாங்கள் கொண்டுவந்த ஆடைகளை அவனுக்கு அணிவிக்க முயன்றனர். அவன் முரண்டுபிடிக்க சத்தம் கேட்டு முகத்தில் சோப்பு நுரையோடு வந்த ரிஷி, “தங்கச்சியப் பார்க்கணுமா, வேண்டாமா?” என்று கூற அமைதியாய் ஒத்த...

உன்னை விடமாட்டேன் – பகுதி 74

முன்பு ஏற்பட்ட தாமதத்தைச் சீர்செய்யும் வகையில் துரிதமாக பைலை பார்வையிட்டு செக்ரெட்டரியிடம் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தான் ரிஷி. அவரும் அதற்கேற்ப துரிதமாக மற்றவர்களை இயங்க வைத்துக் கொண்டிருந்தார். ரிஷியைப் பார்க்க நிறைய பேர் காத்துக்கொண்டிருப்பதும் என்ன விஷயம் என செக்ரெட்டரியிடம் விசாரித்து பல பேரை சந்திக்காமலே அவர்களின் தேவையை, வேண்டுகோளை மறுத்தோ, பூர்த்தி செய்தோ அனுப்புகிறான் என்பது மலையரசனுக்குப் புரிந்தது. ஆனால் ரிஷியைக் காண எதற்காக வருகிறார்கள், என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை. யாரோ ஒருவர் வந்தபோது மட்டும் சிறிது அளவோடு புன்னகைத்து கை குலுக்கினான் ரிஷி. பிறகு அதிகாரத் தோரணையுடன் நிதானமாக ரிஷி ஆங்கிலத்தில் சீரியசாக பேசிக்கொண்டிருந்தான். ரிஷியை பார்க்க வந்தவர் முதலில் மலையரசனை விசித்திரமாக பார்த்து விட்டு ரிஷியின் பேச்சில் ஆழ்ந்து போனார். அவர் ரிஷி சொன்னதெற்கெல்லாம் இளித்தபடி சரி சரி என்கிறார் என்பது மலையரனுக்குப் புரிந்தது. எழுந்து போக மனமில்லாமல் அமர்ந்திருந்தவரிடத்தில் அவ்வளவு தான் விஷயம் என தன் தலையசைப்பால் அவரை வெளியேற வைப்பதையும் பார்த்தான். பார்க்க...

உன்னை விடமாட்டேன் – பகுதி 73

 ரிஷி வருவதை கவனிக்காத தலைமை நிர்வாகி “அவர் என்ன உன் வீட்டுவேலைக்காரனா? நாயே! பேரை மரியாதையில்லாமல் சொல்லுகிறாய் போதாக்குறைக்கு அவன் இவன் என்று பேசுகிறாய்?” என்று கூறியடி மலையரசன் கன்னத்தில் திடீரென்று அறைய, ரிஷி வந்து பொதுமேலாளரான வர்மாவின் கன்னத்தில் பதிலுக்கு அறைய அலுவலகத்தில் பெரும் நிசப்தம் நிலவியது. மலையரசனை மேற்கொண்டு முன்னேறி உள்ளே வராமல் தடுக்க முற்பட்டவர்களும், தலைமை நிர்வாகிக்கு துணையாக வந்தவர்களும் அதிர்ச்சியுடன் பின் வாங்கினார்கள். “சார்” என்றார் தலைமை நிர்வாகி அதிர்ச்சியுடன். “நீங்க உங்க பொஸிஸன விட்டு ஏன் கீழே இறங்கினீங்க மிஸ்டர். வர்மா. பொதுமேலாளரிடமோ அல்லது செக்யூரிட்டிகிட்டேயோ இவன் எப்படி உள்ளே வந்தான்னு விசாரிச்சு, கவனிக்க சொல்லவேண்டியது தானே?. கரெக்டா ப்ரொஸிஜரை பாலோ பண்ணியிருந்தா நான் தான் அவனை உள்ளே வர விட்டேன்னு தெரிஞ்சிருக்கும். தலைமை நிர்வாகியாக இருக்க உங்களுக்கு தகுதி இருக்கான்னு முதல்ல யோசிங்க.” என ஆங்கிலத்தில் அவரைச் சாடினான் ரிஷி. “சாரி சார். மரியாதையில்லாம உங்க பேர் சொல்லி கூப்பிட்டதை கேட்டதால கோபப்பட்டுடேன். சாரி சார்” என்றார் தலைமை நிர்வாகி அடிவாங்கி...

உன்னை விடமாட்டேன் – பகுதி 72

 தந்தை மலேசியா போய் இரண்டு நாட்களாகி விட்டன. முழு வேலையும் ரிஷியின் தலையில். முக்கியமான பைல்களை கவனமாக ஆராய்ந்து முடிவெடுத்துக் கொண்டிருந்தான். அவனின் குறிக்கோள் தற்போதைய மலேசியா மற்றும் இதர முக்கிய வேலைகளை முடித்து விட்டு இன்னும் அதிகப்படியாக வேலை செய்து தந்தை வரும் போது அவருக்கு முக்கிய வேலை இல்லாமல் சற்று ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த ஓய்வின்போது எப்படியாவது நடந்தவைகளைக் கூறி இரு திருமணங்களையும் அங்கீகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே! “சார் செக்யூரிட்டிகிட்ட இருந்து போன்.” என்ற செக்ரெட்டரியிடம் எரிச்சலுடன் “இதையெல்லாம் நீங்களே பார்க்கக் கூடாதா.?” என்றான் ரிஷி. “நீங்கள்தான் பேச சொன்னதாக சொன்னார் சார்.” உடனே போனை வாங்கி “ஹலோ” என்றான் ரிஷி. “சார் நீங்க சொன்ன மாதிரி காதுல கடுக்கனும், மூக்கில வளையமும் இருக்கு.. கொண்டை போட போதுமான முடி இல்ல. ‘.உள்ளே அனுப்பு. ரிஷியை பார்க்கணும்’ன்னு மரியாதையே இல்லாம உங்க பேரை சொல்றான் சார். ஏன் பார்க்கணும்னா அதெல்லாம் ரிஷிக்கு தெரியும்னு தெனாவெட்டா பேசுறான் சார். உள்ளே அனுப்பவா விரட்டிவிடவா? சார்.” செக்யூரிட்டி பேசும்போதே ரிஷி அவசர அவசரமாய் தன் விலையுயர்ந...

உன்னை விடமாட்டேன் – பகுதி 71

 தனக்கு பதிலாய் தந்தையை மலேசியா அனுப்ப முயற்சித்தான் ரிஷி. “வேறு யாரையும் அனுப்பினால் சொதப்பி விடுவார்கள் அப்பா.” “உண்மைதான் ரிஷி. நாம்தான் பொறுப்புடன் கவனிப்போம். ஆனால் சூர்யகலாவைப் பார்க்காமல் எப்படி போவது? இங்கு இப்படி ஒரு பிரச்சினை ஓடும்போது நான் அங்கே என்ன செய்ய முடியும்.” “அப்பா! தொழில் வேறு. குடும்பம் வேறு. என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே' அவள் என் தங்கை. நான் பார்த்துக் கொள்கிறேன்.” “எனக்குத் தெரியும் ரிஷி, நீ மிக்க திறமைசாலி என்று. நீ நினைத்தால் சூர்யகலாவையும், மாப்பிள்ளையையும் அழைத்து வந்திருக்கலாம். ஆனால் நடுவில் நீ என்ன கோல்மால் செய்கிறாயோ? யாருக்குத் தெரியும்? திறமை இருந்து படிப்பு...” “அப்பா இதில் நீங்கள் கையெழுத்திட வேண்டுமே. நான் படித்துவிட்டேன். எல்லாம் சரியாக இருக்கிறது. ஒரு முறை நீங்களும் படித்து விடுங்களேன்.” “இப்படியே பேச்சை திசைதிருப்பி என்னை ஏமாற்றுடா!” “இல்லையப்பா. நீங்கள் கையெழுத்திட்டால்தான் மேற்கொண்டு நமது செயலாளர்கள் செய்யவேண்டியதைச் செய்ய முடியும். இப்பொழுதே தாமதம்தானேப்பா” வேறு வழியின்றி தொழிலில் கவனம் பதித்தார் தந்தை. தேனரசி ரிஷியின் வரவுக்காக ஆவலு...