உன்னை விடமாட்டேன் – பகுதி 4
மலையரசன் கண் பார்வையிலிருந்து மறைந்த ரிஷி சாவதானமாக ஒரு கிளையை பிடித்து திரும்ப பாறாங்கற்களை பிடித்து மலை ஏற ஆரம்பித்தான். பின் சிறிது யோசித்தான். ‘ஏதோ மலை ஏற விரும்புவன் போலவும், ஆனால் இப்பொழுதுதான் மலை ஏறக் கற்றுக் கொள்பவன் போல மலையரசனிடம் நடித்து இப்பொழுது நன்றாக மலையேறி அவனிடம் சென்றால் காறி உமிழ்ந்து விடுவான். சரி சிறிது நேரம் இப்படியே நிற்போம்’ என்று நினைத்தான் ரிஷி. அப்பொழுது மலையரசனின் அரற்றிய அழுகுரல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. “ஒரு உசிர எடுத்துட்டு நான் மட்டும் வாழனுமா? மாட்டேன் சாமி மாட்டேன். என் உசிரையும் எடுத்துக்கோ” என்ற மலையரசனின் கூக்குரலைக் கேட்ட மறுவிநாடி “மலையரசா! என்னைக் காப்பாற்று” என்று ரிஷி எதிர்க்குரல் கொடுத்தான். மலையரசன் குரல் வந்த திக்கை நோக்கி ஓடி வந்து ரிஷியை காப்பாற்ற முனைந்தான். அவனை காப்பாற்றி விட்டோம் என்ற மகிழ்ச்சியும் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற மகிழ்ச்சியும் மலையரசன் முகத்தில் அப்பட்டமாக தொிந்தது. மலையரசன் தற்கொலை செய்யாமல் மறைமுகமாக தடுத்த திருப்தி ரிஷியின் முகத்தில் புன்னகையாய் விரிந்தது. மலையரசன் “சாமி என் உசிருபோயி உசிரு வந்திடுச்...