Posts

உன்னை விடமாட்டேன் – பகுதி 4

 மலையரசன் கண் பார்வையிலிருந்து மறைந்த ரிஷி சாவதானமாக ஒரு கிளையை பிடித்து திரும்ப பாறாங்கற்களை பிடித்து மலை ஏற ஆரம்பித்தான். பின் சிறிது யோசித்தான். ‘ஏதோ மலை ஏற விரும்புவன் போலவும், ஆனால் இப்பொழுதுதான் மலை ஏறக் கற்றுக் கொள்பவன் போல மலையரசனிடம் நடித்து இப்பொழுது நன்றாக மலையேறி அவனிடம் சென்றால் காறி உமிழ்ந்து விடுவான். சரி சிறிது நேரம் இப்படியே நிற்போம்’ என்று நினைத்தான் ரிஷி. அப்பொழுது மலையரசனின் அரற்றிய அழுகுரல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. “ஒரு உசிர எடுத்துட்டு நான் மட்டும் வாழனுமா? மாட்டேன் சாமி மாட்டேன். என் உசிரையும் எடுத்துக்கோ” என்ற மலையரசனின் கூக்குரலைக் கேட்ட மறுவிநாடி “மலையரசா! என்னைக் காப்பாற்று” என்று ரிஷி எதிர்க்குரல் கொடுத்தான். மலையரசன் குரல் வந்த திக்கை நோக்கி ஓடி வந்து ரிஷியை காப்பாற்ற முனைந்தான். அவனை காப்பாற்றி விட்டோம் என்ற மகிழ்ச்சியும் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற மகிழ்ச்சியும் மலையரசன் முகத்தில் அப்பட்டமாக தொிந்தது. மலையரசன் தற்கொலை செய்யாமல் மறைமுகமாக தடுத்த திருப்தி ரிஷியின் முகத்தில் புன்னகையாய் விரிந்தது. மலையரசன் “சாமி என் உசிருபோயி உசிரு வந்திடுச்...

உன்னை விடமாட்டேன் – பகுதி 3

 "நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை மலையரசா! நான் இங்கு வந்த காரணங்களில் இரண்டை மட்டும் கூறினேன். மூன்றாவதைச் சொல்லி நமக்குள் விவாதம் வேண்டாம் என்றுதான் கூறவில்லை. நீ இவ்வளவு மட்டமாக என்னை நினைக்க வேண்டாம். ஆம். மலைத் தேனுக்காகத்தான் வந்தேன். பல இடங்களில் மலைத்தேன் கிடைக்காமல் இல்லை. ஆனால், இங்குள்ள மலைத்தேன் மிக உயர்ந்த தரத்துடன் உள்ளது, பல நோய்கள் சட்டென்று தீர்கின்றன. இது அனுபவமாகவும், சில ஆராய்ச்சி கள் மூலமாகவும் கண்டறியப்பட்டுள்ளது,” மேலும் தொடர்ந்தான் ரிஷி. “இங்கு மிக அதிகமாக தேன்கூடுகள் உள்ளன. எங்களால் நிச்சயமாக இதிலிருந்து தேனெடுக்க இயலாது, கரணம் தப்பினால் மரணம் நிச்சயம். ஆனால், இது உங்களுக்கு கை வந்த கலை. மலையில் சறுக்காமல், தடுமாற்றம் இல்லாமல் தேனெடுப்பதில் நீங்கள் அனைவரும் வல்லவர்கள். நல்ல வருமானமும் உங்கள் எல்லோருக்கும் வரும். தேனை தேன்கூட்டை கலைக்காமல் அதிலே ஒரு நூலை கட்டி தொங்க விட்டு, அந்த நூல் வழியாக சொட்டு சொட்டாக வரும் தேனை மிக பொறுமையாக சேகரிக்கிறீர்களாம். அதுவும் குறிப்பிட்ட அளவு மட்டும்தானாம். தினமும் கூட தேன் எடுப்பதில்லை என்றும் கேள்விப்பட்டேன். இந்த தேனுக்க...

உன்னை விடமாட்டேன் - பகுதி 2

 உங்கள் இடத்திற்கு வரும் நாங்கள் விருந்தாளிகள்தானே மலையரசன்! எங்கள் மேல் ஏதோ கோபம் போல் தொிகிறதே! என்னவென்று தொிந்து கொள்ளலாமா?" என்று கூறி நட்புடன் புன்னகைத்தான் ரிஷி. மலையரசனோ பாகற்காயை பச்சையாக கடித்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு, "ஏன்? அந்த ஆபிசரு சொல்லலியா?" என்றான். வாய்விட்டு சிரித்த ரிஷி "ஏன்? நீதான் தெளிவாக சொல்லேன்." என்றான். "என்னத்த சொல்ல? சொன்னாக்க நாங்க என்னமோ முட்டாளுங்க மாதிரியும், நீங்களெல்லாம் வானத்திலிருந்து குதித்த அதிபுத்திசாலிங்க மாதிரியுமில்ல பார்வையும், பேச்சும் இருக்குது," என்றான் மலையரசன். "எனக்கு முன்பு வந்தவர்கள் அதிபுத்திசாலியா இருந்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், நான் சரியான முட்டாள்தான் மலையரசன். என் மண்டையும் எம்டியாத்தான் அதாவது காலியாத்தான் இருக்கு. நீ சொல்வதை கண்டிப்பாக மண்டையில் நிரப்பிக் கொள்கிறேன்." என்று ரிஷி கூற இப்பொழுது மலையரசன் வாய்விட்டுச் சிரித்தான். “அது இருக்கட்டுஞ் சாமி. நீங்க இங்கன எதுக்கு வந்திருக்கிறீங்க?” என்றான் மலையரசன். ‘இவன் புத்திசாலி. இவனிடத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க...

உன்னை விடமாட்டேன் - பகுதி 1

 பாத்து சாமி” என்று ரிஷிகேசை கீழே சறுக்கி விழாமல் பிடித்துக் கொண்டான் மலையரசன். தவறி விழுந்திருந்தால் கண்டிப்பாக எமலோகம்தான். உயிரை காப்பாற்றினான் என்று நன்றியுணர்வை விட மலையரசன் மேல் சினம்தான் உருவாயிற்று. மலையரசன் மட்டும் பிரச்சனை செய்யாமலிருந்தால் இந்நேரம் மலேசிய தொழிலதிபரிடம் பேசிக் கொண்டிருந்திருப்பான். ஆனால் இப்போது அவன் பின்னால் செல்ல வேண்டியுள்ளது. ரிஷி ஒன்றும் வெறும் ஏசி அறையில் மட்டும் அமர்ந்து பழக்கப்பட்டவன் அல்ல. காடு, மலை, மேடு எல்லாம் பார்த்தவன்தான். தனக்கு இருக்கும் பணத்திற்கு பலரை அனுப்பினாலும் எல்லோரும் ‘முடியாது’ என்று கூறிவிட்டதால் குளுகுளு அறையில் பஞ்சணையில் புரண்டவன் வேறுவழியின்றி தானே களம் புக வந்துவிட்டான். மலையரசனை பார்த்தான் ரிஷி. 'லாவகமாக மலையேறுவது, கடினமான பாதையில்லா இடங்களை கடப்பது, உடன் வருபவரையும் கவனமாக பார்த்துக் கொள்வது என எல்லாவற்றிலும் கண்டிப்பாக என்னை விட திறமைசாலிதான். ஆனால் அப்பா மட்டும் தொழிலை கவனிக்க வரச்சொல்லாவிட்டால் ஒருவேளை அவனுக்கு சமமாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது என் திறமையை நிச்சயம் இவன் அறிந்து கொள்ளக்கூடாது, கவனமாக இருக்க வேண்ட...

ஏப்ரல் 1

     காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் கணவனுக்கு மதிய உணவை அரக்க பரக்க சமைத்துக் கொண்டிருந்தாள் வெண்மதி. “மதி! உங்கப்பாவுக்கு ஆக்ஸிடெண்டாம்” பதற்றத்துடன் கைபேசியை கையில் வைத்தபடி சொன்ன வசீகரனிடம், “ஐயோ! என்னவாயிற்று? எந்த ஹாஸ்பிடல்?” என்று அதைவிட பதற்றத்துடன் வினவினாள் மதி. “ஹேய்! கூல் மா. இன்னைக்கு ஏப்ரல் 1. முட்டாள் ...” என்று அவன் பேசி முடிக்கும் முன் வெடித்தாள் வெண்மதி. “மண்ணாங்கட்டி! எதில்தான் விளையாடுவது என்று இல்லை”     “இன்னைக்கு நீதான் எச்சரிக்கையா இருந்திருக்கனும். நீ முட்டாளாயிட்ட. நல்லா ஏமாந்துட்ட. கோபம் வரத்தான் செய்யும்”. இப்படி கிண்டலடிப்பவனிடம், கோபப்பட்டால் சமையல் வேலை பாதிக்கும் என்று மனதினில் முடிவு கட்டியவள், மீண்டும் வேலையில் ஈடுபடலானாள்.     “யாரை வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் ஏமாத்தலாம். ஏமாறாம புத்திசாலித்தனமா இருக்கனும். ஏமாந்துட்டா கோபம் வரக்கூடாது என் ராணி!” தொடர்ந்து தன்னை கலாய்த்தவனின் கரங்களில் சூடான மதிய உணவுப்பையை திணித்தாள். "சரி! சரி! இன்று உங்கள் அலுவலகத்தில் யாரிடமும் ஏமாறாமல் இருந்தால் சரி. என்றாள் புன்னகையுடன...

ஆயிரம் பொய்

  அந்த பெண், இளைஞனின் காலில் விழுவதே தொியாமல் மெதுவாக முட்டி போட்டு மென்மையான குரலில் கெஞ்சிக் கொண்டிருந்தாள். “நம் குழந்தையை நினைத்துப் பார், தனுஷ். அதற்காகவாவது உன் முடிவை மாற்றிக் கொள்” என்று அந்த நீதிமன்ற வளாகத்தினுள் யாருடைய கவனத்தையும் கவராமல், தன் கணவனிடம் மிக மெல்லிய குரலில் கெஞ்சியும், அவன் திமிராக கர்வத்துடன் மௌன சிரிப்பு சிரித்தான்.     வழக்கறிஞரான எனக்கு ஏனோ அப்பெண்ணுக்கு உதவ தோன்றியது. விசாரித்ததில் இருவரும் காதலித்து மணந்து கொண்டதும், தற்போது தனுஷின் தகப்பனார் பணக்கார பெண்ணை மணமுடிப்பதற்காக மகனிடம் பணத்தாசையை தூண்டி விட்டு விவாகரத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதும் தொிய வந்தது,     தனுஷின் மனைவியாகிய சார்கவியை நீதிமன்றத்தில் உள்ள எனது அலுவலக அறையில் அழைத்து பேசிக் கொண்டிருக்கும்பொழுது,  எனது திட்டப்படி ஹரிப்பிரியா, சார்கவியின் கணவனான தனுஷை ‘இந்த வழக்கை அரசு வழக்கறிஞரான என் மூலம் விரைவில் முடிக்கலாம்’ என ஆசை காட்டி அழைத்து வந்து அறைக்கு வெளியே அமர வைத்தாள்.     தனுஷின் காதுகளில் விழும்படியாக நான் சார்கவியிடம், “சார்கவி! எனது ம...

மன்னிப்பு

     ருக்மணி கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த பசும்பாலுடன் அறைக்குள் சென்றாள். மனம் நிறைய கோபம். இருக்காதா பின்னே? தன் அண்ணன் ருக்மி என்னதான் தன்னை தனக்கு பிடிக்காத சிசுபாலனுக்கு கட்டி கொடுக்க நினைத்தாலும் அண்ணன் அண்ணன்தானே! தனக்கு மிகவும் பிடித்தமான கிருஷ்ணனுடன் செல்ல விடாமல் பலமுறை தடுத்து அக்கிருஷ்ணனுடனேயே சண்டையிட்டாலும் அண்ணன் இல்லை என்றாகி விடுமா?      அண்ணன் செய்தது தவறுதான் என்றாலும் கிருஷ்ணன் எப்படி பாதி மொட்டை, பாதி மீசை என்று மழித்து அண்ணனை அவமானப்படுத்தலாம். அவளால் ருக்மியின் உயிரை காக்க முடிந்ததே தவிர கிருஷ்ணனால் அவமானப்படுத்தப்படுவதை தடுக்க இயலவில்லை. பலராமர் வராவிட்டால் நிலைமை இன்னும் மோசமாயிருக்கும்.      கிருஷ்ணனுக்குத்தான் என்ன ஒரு கோபம்? என்ன ஒரு ஆக்ரோஷம். அவளுள் ஒரு ரசனை பிறந்தாJiலும் மாட்டிக் கொண்டவன் தன்னுடனே பிறந்த அண்ணனாயிற்றே. அண்ணன் பட்டபாடு நிச்சயம் மமறக்கவில்லை தானே விரும்பி கிருஷ்ணனுடன் தோில் ஏறி வந்தவள். எல்லா சொந்தங்களையும் துறந்து வந்தவள். தற்போது அவள் கோபம் செல்லுபடி ஆகுமா? என்ன சீரை கொண்டு வந்தாள் கோபிக்க? யா...