Posts

உன்னை விடமாட்டேன் – பகுதி 23

Image
 அங்கே அவர் கண்ட காட்சி அவருக்கு மிக வியப்பளித்தது. ஏனெனில், 12 போிடமும் சிக்காமல் ரிஷி பயங்கர ஆட்டம் காட்டினான். மலையரசன் சரியான முறையில் முயன்றாலும் மீதிப் போ் செய்யும் தவறையே தனக்கு சாதகமாக்கி தப்பிக்க முயன்றான். மலையரசன் விட்டுவிடக் கூடாதென்று அனைவருக்கும் எங்கு நிற்க வேண்டும் என்றும் எந்தப் பக்கம் அவனை போகவிடக் கூடாது என்றும் பலவித ஆணைகளை பிறப்பித்துக் கொண்டு தப்பிக்க விடாமல் செய்தான். இரண்டு மணி நேரத்திற்கு சற்று குறைவான நேரத்தில் ரிஷியை நெருங்கி பிடித்தனர். ஆனால், ஐயகோ! அவ்வளவு நேரம் பொறுமையுடன் வேடிக்கைப் பார்த்த தாத்தா இப்போது ரிஷியை விட்டுவிடும்படி கூறினாா். மலையரசனுக்கு என்ன செய்வதென்றே தொியவில்லை. கடைசியில், 'சுனையில் நடந்ததையும், இங்கே வந்து திரித்து கூறியதையும் சொல்லிவிட்டு, "ரிஷியை எங்களிடம் விட்டு விடுங்கள் தாத்தா" என்று வேண்டினான். ஆனால், தாத்தாவோ "ஒருத்தன பிடிக்க 12 பேரா? வெக்கமாயில்ல. ஒத்தைக்கு ஒத்தை நின்னுபிடிச்சி இவ்வளவு நேரம் ஆனா கூட பரவாயில்ல. இத்தன பேரு இவ்வளவு நேரமா? அதெல்லாம் முடியாது. அவன் திறமைய மதிச்சி ஒழுங்கு மரியாதையா அவன பேசாம விட்ட...

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

Image
 பறவைகளுக்கு தானியங்களை போட நேரமாயிற்று. ரிஷியை அழைத்துக் கொண்டு போகலாம் என்றால் அவன் அங்குள்ள பெண்மணிகளிடம் பேசிக் கொண்டே கைவினைப் பொருட்களை வைத்து பார்த்துக்கொண்டிருந்தான். கடைசியில், தாத்தா அழைத்தார். ரிஷி, “தாத்தா இவைகளெல்லாம் எனக்கு இரண்டு, இரண்டாய் தேவைப்படுகிறது. தருகிறீர்களா?” என்று கேட்டான். “இதெல்லாம் எங்கேயும் போகாது. நீ உங்க ஊருக்கு போகுறதுக்கு முன்ன கொடுத்தனுப்புறேன். இப்ப எங்கூட வா ரிஷி” என்றார் தாத்தா. தாத்தாவிடம், “எங்கே தாத்தா” என்று துள்ளியபடி முன்னே போய் நின்றான். அவர் அங்கிருந்து சற்று தொலைவு சென்றதும் தன் கையில் வைத்திருந்த தானியங்களை வாரி இறைத்தார். பறவைகள் அச்சமின்றி அவரருகே செல்வதைக் கண்டான். அழகழகான பறவைகளின் பல பெயர்களைக் கேட்டுத் தொிந்து கொண்டான். தங்கைக்காக சில அழகிய பறவைகளைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடக்கினான். சில பறவைகள் அவன் ஆபத்தானவன் இல்லை எனக் கருதியோ என்னமோ, அவன் தோள்களிலும் அமர்ந்தன. தன்னை நம்பி தன் தோளிலும் பறவைகள் அமர்கிறதே! இவற்றை பிடிக்கக் கூடாது. தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். அணில்களும் வந்து ஆட்டம் போட்டன. அவன் இம்மாதிரியான காட்...

உன்னை விடமாட்டேன் – பகுதி 21

 மலையரசனின் தங்கை தேனரசி தன் வயது பெண்களுடன் மாடு மேய்க்க போனவர்களுக்கு சாப்பாடு கொண்டு சென்றாள். அங்கு பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. ‘என்ன’ என விசாரித்தால் காலையில் ரிஷி செய்த வேலை தொிய வந்தது. அவளுக்கு ஏக கோபம். “இந்த வெளியாட்களே மிக மோசம் அண்ணா! இவர்களை அருகில் வைத்திருப்பது பாம்பை வீட்டிற்குள் வைத்திருப்பது போலாகும்” என்றாள். மலையரசன் மறுத்தான். “இல்லை, தேனு! அவன் நல்லவன்தான். காலையில் சொம்பு தண்ணியை ஊற்றியதற்கு பழி வாங்குகிறானாம். ரிஷின்னு எல்லாரையும் கூப்பிட சொன்னான். யாரும் கூப்பிடல. நான் கூப்பிட சொன்னா கூப்பிடலாம்னு எல்லாரும் என்னய பாக்கிறாங்க. நான் வேணுமின்னே பேசாம இருக்கேன். அவன் உடனே ‘மலையரசன் என்னை 'வாடா, போடா'ன்னுதான் கூப்பிடுவான்’னும் சொல்லி பாத்துட்டான். யாரும் நம்பல. ஆனாலும் அவனுக்குத்தான் என்ன சாமர்த்தியம். தாத்தாவிடமும், அப்பாவிடமும் எப்படி சொல்லி என்னை மட்டுமல்ல எல்லாரையும் ஒரு வழி பண்ணி விட்டானே! மேய்ச்சலுக்கு என்னோடு வருவான். அவனை நாங்க எல்லாரும் ஒரு வழி செய்யவேண்டும் என்று நினைத்தால் அவன் தாத்தாவை கேடயமாக்கி தப்பிக்கிறான். மேய்ச்சல் முடிந்து மாடுக...

உன்னை விடமாட்டேன் – பகுதி 20

 ரிஷி ஒரு நிமிடம் உள்ளுக்குள் அதிர்ந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகை மாறாமல் நின்றான். ஆனால், பொியவர்கள் விடவில்லை. ரிஷி ‘விளையாட்டா என்ன வேண்டிக்கிட்ட? சாமிகிட்ட மன்னிப்பு கேளு.’ என்றனர். ஆனால், சிங்கராசா தாத்தாவோ பயப்படாமல், "சாமிதான் அதுகிட்ட வந்து நின்னா நல்லபடியா முடிச்சித் தரேன்னு சொல்லுதே. ரிஷி ஏதாவது பயங்கர பிரச்சினை. தீர்க்க முடியாதுன்னு தோணிச்சின்னா, எங்கிட்டு இருந்தாலும் நம்ம சாமிகிட்ட வந்துடு. பிரச்சினையில மூழ்கி சாமியை மறந்துடாதே. அம்புட்டுத்தான்l" சொல்லி முடித்துவிட்டார். கோயிலை முறைப்படி சுற்றி வணங்கியபின் அங்கேயே இருந்து பேசிக் கொண்டிருந்தனர். ரிஷி அங்கே, வில்லையும் அம்பையும் பார்த்தான். நிறைய எண்ணிக்கையில் இருந்தன. பார்க்கும்போதே அது தரம்மிக்கவையாகவும், பராமரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பதும் தொியவந்தது. தாத்தாவிடம் ரிஷி மிக்க ஆவலுடன் விசாரித்தான். அவன் கணித்தது சரிதான். அவர்களுடைய முன்னோர்கள் போரில் ராசாக்களுக்கு உதவி வந்ததாகவும், தற்போது, திறமை மங்காமல் இருக்க பயிற்சி எடுத்துக் கொண்டு வருவதாகவும் தாத்தா கூறினார். மேலும், ‘புலி இனம் பெருகினால் வே...

உன்னை விடமாட்டேன் – பகுதி 19

 சிறு அளவில் பயிரிடப்பட்ட நிலங்களைக் கண்டான். தோட்டங்களைக் கண்டான். பசுக்களை புலிகளிடமிருந்து காக்க காவலுக்கு ஆட்கள் நியமிப்பதும் தொிந்து கொண்டான். கடைசியில் அவர்கள் சென்றது கோயிலுக்கு. அவர்கள் அந்த சாமியை மாலுச்சாமி, மாயவன், மாயச்சாமி என்று அழைத்தனர். சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது. உச்சிகால ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. “சக்தி வாய்ந்த சாமி இது ரிஷி. தப்பு நடந்தா சாமிக்கு பிடிக்காது. இங்க உன் கம்பெனி ஆளு ஒருத்தன் ஏதோ பறவை குஞ்சை சமைச்சு சாப்பிட பார்த்தான். அவனால சாப்பிடவும் முடியல. புலிகிட்ட மாட்டிக்கிட்டு கடுமையா அவஸ்தைப் பட்டான். கடைசில அவன் கூக்குரல கேட்டு நம்ம பசங்க காப்பாத்துனாங்க” என்றார் தாத்தா. “ஏன் தாத்தா அசைவம் சாப்பிட மாட்டீர்களா?” வியப்புடன் கேட்டான். தாத்தா காதை பொத்திக் கொண்டார். “என்னடா ரிஷி ஒரு உயிரை எடுத்திட்டு அதை நாம சாப்பிடலாமா? பாவம்தானே!” கேட்டார் தாத்தா. அவனுக்கு சிரிப்பு வந்தது. அவன் அசைவப் பிரியன். அவன் பசுவையும், பன்றியையும் தவிர ருசியாக எதைச் செய்து கொடுத்தாலும் சாப்பிடுவான். பசுவை விட்டு வைத்து அம்மாவுக்காக. பன்றிகளை சுகாதார முறையில் வளர்த்...

உன்னை விடமாட்டேன் – பகுதி 18

 சிங்கராசா தாத்தாவும் அமைதியாக இருந்தது இன்னும் வியப்பாக இருந்தது. சிங்கராசா தாத்தா, அனைவரையும் அழைத்து, "ரிஷி நம்ம வீட்டுப் பிள்ளை. அதனால, எல்லோரும் ரிஷியை 'சாமி'ன்னு சொல்லக் கூடாது. ரிஷின்னு போ் சொல்லி கூப்பிடணும்" என்று உத்தரவிட்டார். சுனையில் இவனை விழுந்து, விழுந்து தேடுவதற்குள் இங்கே என்ன மாயவித்தை செய்தான். மலையரசனுக்கு தாத்தாவிடம் இப்போது கேட்க சுத்தமாய் தைரியம் இல்லை. தன் தங்கையிடம் விசாரித்தால் அவளுக்கு விபரம் தொியவில்லை. அதற்குள் தாத்தா, "மலையரசா! உள்ளே என்ன செய்கிறாய்? ரிஷியையும் உள்ளே அழைத்துக் கொண்டு போய் சாப்பிடு. சீக்கிரம்." என்றார். தங்கை, "என்னண்ணா இது கூத்து? நான் இங்கே இருக்குமிடத்திற்கு தாத்தா அந்த சாமியை அழைத்துவர சொல்கிறார்." என்றாள். "மண்ணாங்கட்டி எனக்கு தொிந்ததுகூட உனக்கு தொியவில்லை. ரிஷி நம்ம வீட்டுப் பிள்ளையாம். இனிமே விருந்தாளி போல சாமின்னு கூப்பிடக்கூடாதாம்." என்று கூறிவிட்டு அவசரமாக வெளியே வந்தால் "நான் உள்ளே போகமாட்டேன். இங்குதான் நன்கு காற்று வருகிறது." என்று ரிஷி வெளியே ஒரு இடத்தில் அமர்ந்து விட...

உன்னை விடமாட்டேன் – பகுதி 17

மாயவனால் ஒன்றும் பேச முடியவில்லை. அவனை ரிஷி என்று அழைக்கச் சொன்னபோது மலையரசன் எதுவும் சொல்லாததால், 'சாமி' என்று கூப்பிட்டதற்கு பழி வாங்குகிறானா? அதைத்தான் மறைமுகமாக நமக்கு கூறுகிறானா?' என்று குழம்பி நிற்கும் வேளையில், "என்னடா! சொன்னது காதில விழல. அவன சீக்கிரம் இங்கன வரச் சொல்லு” என்று மீண்டும் கத்தினார் தாத்தா. மாயவன் பயந்து போய் ஓடினான். “சாமி! உன்ன பத்தி எவ்வளவு தப்பா நினைச்சுட்டோம் சாமி. நீ தான் சாமி எங்கள மன்னிக்கணும். நீ கண்டிப்பா ஒரு மாசம் எங்ககூட இருந்திட்டு போகணுஞ்சாமி. இல்லன்னாக்க, எங்களுக்கு மனசு கஷ்டமா இருக்குஞ்சாமி!” என்றார் தாத்தா. ரிஷிக்கு தன் தந்தையின் நினைவு வந்து விட்டது. “தாத்தா! முடியாததைச் சொல்கிறீர்களே! எனக்கு நிறைய வேலை இருக்கிறது.” என்றான் ரிஷி. மலையரசனின் பொியம்மா முல்லையரசி, “ஏஞ்சாமி! நாங்க ஏமாத்தியிருந்தா ஒரு மாசம் உங்களுக்கு வேலையில்லாம இருந்திருக்கும் போல.” என்றாள். தர்மசங்கடமாக உணர்ந்த ரிஷி, “விருந்தும், மருந்தும் மூணு வேளைதானே!” மலையரசன் சொன்னது நினைப்பிற்கு வர அதைக் கொண்டு சமாளிக்க நினைத்தான். அதுவே அவனுக்கு பாதகமாகி விட்டது. “சாமி!...