உன்னை விடமாட்டேன் – பகுதி 35
தேனரசிக்கு நேற்றிலிருந்து வீடே நரகம் ஆயிற்று. நடத்தை கெட்டவள் போல. தாய் பேசினால் எப்படி இருக்கும்? போதாக்குறைக்கு நீ செத்தால் பரவாயில்லை. நீ ஏன் பிறந்தாயோ? என்ற வார்த்தைகள் ஈட்டியை போல் அவள் நெஞ்சைப் பிளந்தன. பெரியம்மா கூட உனக்கு எப்படி கல்யாணம் ஆகும் என கவலைப்பட்டாளே தவிர தாயைக் கண்டிக்கவில்லை. பாட்டியும் ஒத்து ஊதினாள். இம்மாதிரியான சூழ்நிலையை அவள் இதுவரை கண்டதில்லை. அவளால் தாங்க முடியவில்லை. தேனரசி மாலுச்சாமியை நினைத்துக் கொண்டாள். ‘ உனக்கு உப்பு, மிளகு எடுத்து வச்சதுல ஆரம்பிச்ச பிரச்சினை பெரிதாக மாறுதே தவிர குறையக் காணும். கேட்கக் கூடாத வார்த்தையெல்லாம் கேட்டுட்டேன். இனி நான் உயிரோட இருக்கணுமா? முடியாது.. நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல. என்னை கண்டிக்கவும் வேண்டாம். கல்யாணம் பண்ணிக்கொடுக்கவும் வேண்டாம். தற்கொலை பண்ணா உன்கிட்ட வரமுடியாதுன்னு சொல்வாங்க. ஆனால் எனக்கு வேற வழி தெரியல. உன்னை மனசில் நினைச்சுகிட்டு தற்கொலை பண்ணிக்க போறேன். நீதான் எல்லாத்துக்கும் பொறுப்பு.’ என நினைத்துவிட்டு, தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். முடிவில் இரவில் அனைவரும் உறங்கிய பின் குடிலை விட்டு வ...