Posts

உன்னை விடமாட்டேன் – பகுதி 61

 விறகு அடுக்கி வைத்த இடத்தில் கிடத்திய சூர்யகலா மேனியில் அங்கங்கு திட்டு திட்டாக தடித்து சிவந்தது. ஒரு பக்கம் இரத்தமும் வழிந்தது. என்ன இப்படியும் பூ போல மேனி இருக்குமா எதையும் தாங்க மாட்டாள் போலிருக்கிறது என்று எண்ணியவாறு அவள் மயக்கத்தை தெளிவித்தான். அவள் சோர்வுடன் கண் திறந்தாள். சுற்றுப்புற சூழ்நிலை அவளை பயமுறுத்தியது. ஏன் இவன் நம்மை இங்கு வைத்துள்ளான் என புரியாமல் நடுங்கினாள். நடுக்கம் மேனியில் தெரிந்தது. மலையரசனுக்கு சிரிப்பாக இருந்தது. “ரிஷியின் தங்கை இவ்வளவு கோழையா?” வாய் விட்டு சிரித்தான். அவளோ பயந்து நடுங்கி எங்காவது ஓட முடியுமா? என்று பார்த்தாள். பயத்தால் அவள் கால்கள் கூட ஒத்துழைக்கவில்லை.  “உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்” என்று அவளுடைய பயத்தை தெளிவிக்க முயன்ற போது சிங்கராசா தாத்தாவின் குரல் கேட்டது. “மலையரசா! ஒரே சிரிப்பா இருக்கு. உள்ளே யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டார். ‘இவர் ஏன் இந்நேரத்தில் இங்கு வந்தார் எப்படி வந்தார்‘ என யோசித்தபடி வெளியே வந்தான் மலையரசன். தாத்தா மட்டுமல்ல வெளியே ஒரு கூட்டமே நின்றது. முல்லையரசி உள்ளே சென்று நடுங்கிய சூர்யகலாவை வெளியில் கூட்டி...

உன்னை விடமாட்டேன் – பகுதி 60

 பிரதீபாவிற்கு ‘இவள் யார்? எங்கிருந்து ரிஷி கூட்டிவந்தான்’ என்பது மர்மமாகவே இருந்தது. ‘இந்தப் பெண் மிகுந்த அழகுதான். ரிஷியை அழகால் மயக்குவது கடினம். அவன் குடும்பப் பராம்பரியத்தில் கட்டுப்பாடுகள் உண்டு. அவன் குடும்பம் திடீர் பணக்காரக் குடும்பம் கிடையாது. ராஜவம்ச பரம்பரையைச் சேர்ந்தது. வம்ச வாரிசு முக்கியம். தங்கள் வித்து வேறெங்கும் தோன்ற கூடாது என நினைப்பவர்கள். எத்தனையோ பெண்களிடம் சிக்காதவன் இந்தப் பெண்ணிடம் எப்படி சிக்கினான். அல்லது இவள் அவனிடம் சிக்கினாளா?’ என வியந்தாள் பிரதீபா. பிரதீபாவுக்கு ஆச்சரியத்துடன், அறிந்து கொள்ள ஆர்வம் மிகுந்தது. ‘யாரையோ தன்னை கவனிக்க அனுப்பியிருக்கிறான்’ என்பதை உணர்ந்த தேனரசி ‘ரிஷி எங்கே தெரியுமா?’ என எப்படி கேட்பது என்று அமைதியாக இருந்தாள். ஆனால் பிரதீபா கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள். தேனரசி கடுப்பாகி தூங்க ஆரம்பித்துவிட்டாள். பிரதீபா ‘ சரியான அழுத்தக்காரிதான். ஒரு வார்த்தை பேசமாட்டேன் என்கிறாளே! தீவிரவாதியைப் போலவே. ரிஷியிடமாவது பேசுவாளா? பேசாமலா பிள்ளையை வயிற்றில் சுமப்பாள். ஆக மொத்தத்தில் திமிர்பிடித்தவள். ரிஷியை விட பணக்காரியாக இருப்பாளோ. ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 59

 தந்தையை உடனடியாக தொடர்பு கொண்டு விபரம் கேட்டான் ரிஷி. “இப்படியாடா பிள்ளை இருப்பாய்? அவசரத்துக்குக் கூட தொடர்புகொள்ள முடியாமல்.” என்று எல்லை மீறிய ஆத்திரத்தைக் கொட்டி விட்டு விபரம் கூறினார். கைவினைப் பொருட்களை வாங்கச் சென்றபோது தங்கை காணாமல் போனது மனதை அதிர வைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இரவில் பெட்டியில் இருந்து எதையெதையோ கயிறு, பாதாள கொலுசு, கொக்கி போன்ற பொருட்களைப் பையில் எடுத்துச் செல்லும் கணவனை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் தேனரசி. போகும் போதாவது தன்னிடம் எதுவும் சொல்லுவான் என்று பார்த்திருந்தால் ஒன்றும் கூறாமல் காரியமே கண்ணாக போனில் பேசியபடி கிளம்பிச் சென்றுவிட்டான். தேனரசிக்கு மனம் வலித்தது. வெளிஅறையை பூட்டிவிட்டான். அவள் நடமாட பல அறைகள் இருந்தன. அவள் சங்கிலியால் பிணைக்கப்படவில்லை. ஆனாலும், அவளைப் பற்றி கவலைப்படாமல் திடீரென சென்று விட்டது அவளை மிகவும் பாதித்தது. இதேபோல் முன்பு போன் வந்த போது இரவு உடையுடன் வெளியே சென்றான். ஆனால் இப்பொழுது நிமிடத்தில் உடை மாற்றி எதை எதையோ எடுத்துப் போட்டுக்கொண்டு பையுடன் செல்கிறானே! தன்னைவிட்டு ரிஷி சொல்லாமல் கொள்ளாமல் வெகு தூரம் போகப்போவதாய...

உன்னை விடமாட்டேன் – பகுதி 58

 சுனிலிடம் சூர்யகலாவை கடத்த ஆட்டோவை எடுத்து வரச் சொல்லி பணத்தை நீட்டினான் மலையரசன். ஆனாலும், சுனில் அரண்டு விட்டான். ஐயையோ! பணக்கார இடம். அங்கு வேலையை காட்டினால் உன் கதி மட்டுமல்ல என் கதியும் அதோகதிதான். உயிருடன் இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. தீர்த்துக் கட்டிவிடுவார்கள் பேசவே மாட்டார்கள். செய்துவிடுவார்கள். மீண்டும் மற்றொரு பணக்கட்டை எடுத்துக் காட்டினான். “அடேங்கப்பா இவ்வளவு பணமா? கொஞ்சம் பொறு. என் நண்பனிடம் ஆட்டோ வாங்கி கொண்டு வந்து விடுகிறேன்.” என்றான். சுனிலின் மூளை வேகமாய் வேலை செய்தது. முன் ஏற்பாடு எல்லாம் கட கடவென முடித்து விட்டு மலையரசனுடன் சூர்யகலா காத்திருக்கும் ஹோட்டலுக்கு சென்றான். சூர்யகலா கார் டிரைவரிடம், “நான் சில கைவினைப்பொருட்களை வாங்க வேண்டும். காரில் சென்றால் அதிக விலை சொல்வார்கள். அதனால் நான் ஆட்டோவில் செல்கிறேன். நீங்க வீட்டுக்குப் போங்க. நான் ஆட்டோவில் போய் பொருட்களை வாங்கி விட்டு என் தோழி வீட்டுக்குச் சென்று விடுவேன். அங்கிருந்து நானே வந்துவிடுகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடுங்கள்.” என்றாள். அய்யய்யோ சின்ன ஐயா கோபித்துக்கொள்வார். நான் சற்று தொலைவில் ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 57

 வெளியே வந்த ரிஷியிடம் செக்யூரிட்டி, “சார்! ஆள் என்று தான் நினைக்கிறேன். முதலில் ஏதோ ஒரு மிருகம் என்று நினைத்தோம். ஆனால் காலடித்தடம் ஆள் எனக் காட்டுகிறது. எர்த் இருப்பதால் ஒன்றும் ஆகவில்லை. இல்லை என்றால் ஆள் ஸ்பாட்டிலேயே காலியாக இருப்பான். ‘மலையரசன் வந்துவிட்டானா?’ ரிஷியின் மனம் திடுக்குற்றது. சற்றுநேரம் செக்யூரிட்டியுடன் சேர்ந்து ஆளைத் தேடியவன் பிறகு காவலை அதிகரிக்கும்படியும், எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கூறினான். விடியும் வரை ரிஷி அங்கிருந்து நகரவே இல்லை. அவன் கண் பார்வை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தது. காட்டில் ரிஷியுடன் விளையாடியது மலையரசனுக்கு உதவிற்று எனக் கூறலாம். ஏனெனில் ரிஷி வந்தால் எப்படித் தேடுவான், எங்கு தேடுவான் என்பது மலையரசனுக்கு அத்துப்படி. அதனால் தப்பிவிட்டான். நடந்து வந்தாலும் இங்கு நுழைவது மிகவும் கடினம். உள்ளே நுழைவதே கடினம் என்றால் பங்களாவிற்குள் நுழைவது எப்படி? இது வேண்டாத வேலை என்று அதுவரை ஆடாமல் அசையாமல் ரிஷி போகும் வரை காத்திருந்தவன் பிறகு மீண்டும் பழைய இடத்திற்கு சென்று விட்டான். தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என எண்ணினான் மலையரசன். உண்ம...

உன்னை விடமாட்டேன் – பகுதி 55

 ரிஷிக்கும், தேனரசிக்கும் ஒரு போட்டா போட்டி நடந்தது. அவள் பாடத்தை அன்று சரியாக படித்துவிட்டால் அன்றிரவு ரிஷி அவளைத் தொடக்கூடாது. ஆனால் ரிஷி, அவளைத் தொடுவதற்காகவே அவளால் பாடத்தை படிக்க முடியாத அளவுக்கு அதிகரித்தான். அவள் எதிர்ப்பு தெரிவித்தால் மிகவும் கடின மொழியாக ஆங்கிலம், ஹிந்தி என்று சிறிதளவு கொடுத்தான். பல நாட்கள் ரிஷியே வெற்றிக்கொடி நாட்டினான். ரிஷி முன் போல் இல்லாமல் தற்போது ரசனையுடன் தன்னுடன் சேர்வது கண்டு பயந்தாள். அதனால் அவள் தப்பிப்பதற்கு மிகவும் கடுமையாக படித்தாள். விளைவு ஒரு பக்கம் அவள் படிப்பில் புலியாக மாறினாள். மற்றொரு பக்கம் தாயாகவும் ஆனாள். சுனிலின் பணத்தாசையை சமாளிக்க தன் கடையை வெவ்வேறு பணக்கார இடங்களில் பரப்பி பொருட்களை விற்றான். பொருட்கள் விற்றுத் தீர்ந்ததும் சுனிலுக்குக் கூட தெரியாமல் மாயவன், தென்னரசு இவர்களை தொடர்பு கொண்டு பொருட்களை எடுத்துவரச்செய்தான். சுனில் ஏதேனும் துருவிக் கேட்டாலும் மலையரசன் தங்களைப் பற்றிய உண்மையைக் கூறவில்லை. பிற்பாடு சுனில் பிடிபட்டால்கூட நம்மைப் பற்றி அவனுக்கு சொல்லத் தெரியக்கூடாது என நினைத்தான். வன அதிகாரியிடமும் ஆலோசனைக் கேட்டான். ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 56

 ரிஷி ஒரு நாள் மருத்துவர் என ஒருவனைக் கூட்டிவந்தான். தேனரசி எந்த மருத்துவ சோதனைக்கும் ஒத்துழைக்கவில்லை. ஆனால் மருத்துவர் தேனரசியை ஒரு பொருட்டாக மதிக்காமல் தன் வேலையை செய்தார். ரிஷியுடன் ஆங்கிலத்தில் நன்கு பேசினார். அவனுடன் பேசியபடி வெளியே சென்றார். அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆனால் சற்றுநேரத்திலேயே அவர் உள்ளே நுழைய முற்பட ரிஷி அவரைத் தடுத்தான். “டேய்! நீ செய்யும் இந்த வேலையை எல்லோரிடமும் சொல்லி விடுவேன் என்று தமிழில் மிரட்டினார். வேறுவழியின்றி ரிஷி வழி விட்டான். உள்ளே வந்தவன் தேனரசியிடம், “சிஸ்டர் நீங்க அவனோட ஒய்ஃப் அப்படின்னு எனக்கு தெரியாது. என்னை மன்னிச்சிடுங்க. சிஸ்டர்.” என்றான். ஒய்ஃப் என ஆங்கிலத்தைக் கலந்து பேசினாலும் அவள் புரிந்து கொண்டாள் தன்னை ரிஷியின் மனைவி என்கிறானே! ரிஷி அப்படியா சொன்னான். அவளுக்கு வியப்பாக இருந்தது. இருந்தாலும் அமைதியாக இருந்தாள். “ஏண்டா இவங்களை இந்த அறையில் வைத்திருக்கிறாய். இவங்க என்ன தீவிரவாதியா? கள்ளக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவங்களா? நானும் ஏதோ சட்டவிரோதமா தப்பு பண்ணவங்கன்னு நினைச்சிட்டேன். சங்கிலியில் இப்போது பிணைக்கவில்லை. ஆனால் சங்கிலி...