உன்னை விடமாட்டேன் – பகுதி 70
சுனையில் அவன் அண்ணன் நீச்சல் தெரியாதது போல் மூழ்கி நடித்ததையும், எல்லோரும் விழுந்து விழுந்து அவனைத் தேடியதையும் கூறினான் மலையரசன். “ஓ...அதுதான் எனக்குத் தெரியுமே! அண்ணன் என்னிடம் சொல்லிவிட்டானே!” பயம் விலகி சகஜமாய் பழக ஆரம்பித்தாள் சூர்யகலா. அவள் .குளிக்க மறைவிடத்தை தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவன் மற்றொரு இடத்தில் குளித்தான். பிறகு மலையரசன் காதில் கடுக்கனையும், மூக்குத்தியையும் மாட்டிக்கொண்டான். அவள் அதை போடக்கூடாது என்றாள். “நான் சிறுவயதிலிருந்து போடுகிறேன். போடாமல் முடியாது” என்றான் மலையரசன். “சரி! சரி! போட்டுக்கொள்ளுங்கள்” என்றாள் சோகமுடன். “எனக்குப் புரிகிறது சூர்யா. ஆனால் இங்கு இது தானே வழக்கம்.” “அங்கேயும் இப்போது இந்த வழக்கம்தான். அதனால்தான் சரி என்று விட்டுவிடுகிறேன்” என்றாள் சூர்யகலா. ரிஷிக்கும் தேனரசிக்கும் நடந்த மோதல்களைக் கூறினான். இதை அண்ணன் கூறவேயில்லையே என்று கேட்டுக்கொண்டாள். தான் அங்கு தேனரசியைத் தேடி வந்தது முதற்கொண்டு சூர்யகலாவைக் கடத்திய கதை வரை சொன்னான். ஆர்வமுடன் கேட்டுக்கொண்டே வந்தாள் சூர்யகலா. மலையரசனிடம் இருந்த முழுபயமும் விலகியது. அவனைத் தவறாக நின...