Posts

உன்னை விடமாட்டேன் – பகுதி 71

 தனக்கு பதிலாய் தந்தையை மலேசியா அனுப்ப முயற்சித்தான் ரிஷி. “வேறு யாரையும் அனுப்பினால் சொதப்பி விடுவார்கள் அப்பா.” “உண்மைதான் ரிஷி. நாம்தான் பொறுப்புடன் கவனிப்போம். ஆனால் சூர்யகலாவைப் பார்க்காமல் எப்படி போவது? இங்கு இப்படி ஒரு பிரச்சினை ஓடும்போது நான் அங்கே என்ன செய்ய முடியும்.” “அப்பா! தொழில் வேறு. குடும்பம் வேறு. என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே' அவள் என் தங்கை. நான் பார்த்துக் கொள்கிறேன்.” “எனக்குத் தெரியும் ரிஷி, நீ மிக்க திறமைசாலி என்று. நீ நினைத்தால் சூர்யகலாவையும், மாப்பிள்ளையையும் அழைத்து வந்திருக்கலாம். ஆனால் நடுவில் நீ என்ன கோல்மால் செய்கிறாயோ? யாருக்குத் தெரியும்? திறமை இருந்து படிப்பு...” “அப்பா இதில் நீங்கள் கையெழுத்திட வேண்டுமே. நான் படித்துவிட்டேன். எல்லாம் சரியாக இருக்கிறது. ஒரு முறை நீங்களும் படித்து விடுங்களேன்.” “இப்படியே பேச்சை திசைதிருப்பி என்னை ஏமாற்றுடா!” “இல்லையப்பா. நீங்கள் கையெழுத்திட்டால்தான் மேற்கொண்டு நமது செயலாளர்கள் செய்யவேண்டியதைச் செய்ய முடியும். இப்பொழுதே தாமதம்தானேப்பா” வேறு வழியின்றி தொழிலில் கவனம் பதித்தார் தந்தை. தேனரசி ரிஷியின் வரவுக்காக ஆவலு...

உன்னை விடமாட்டேன் – பகுதி 70

 சுனையில் அவன் அண்ணன் நீச்சல் தெரியாதது போல் மூழ்கி நடித்ததையும், எல்லோரும் விழுந்து விழுந்து அவனைத் தேடியதையும் கூறினான் மலையரசன். “ஓ...அதுதான் எனக்குத் தெரியுமே! அண்ணன் என்னிடம் சொல்லிவிட்டானே!” பயம் விலகி சகஜமாய் பழக ஆரம்பித்தாள் சூர்யகலா. அவள் .குளிக்க மறைவிடத்தை தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவன் மற்றொரு இடத்தில் குளித்தான். பிறகு மலையரசன் காதில் கடுக்கனையும், மூக்குத்தியையும் மாட்டிக்கொண்டான். அவள் அதை போடக்கூடாது என்றாள். “நான் சிறுவயதிலிருந்து போடுகிறேன். போடாமல் முடியாது” என்றான் மலையரசன். “சரி! சரி! போட்டுக்கொள்ளுங்கள்” என்றாள் சோகமுடன். “எனக்குப் புரிகிறது சூர்யா. ஆனால் இங்கு இது தானே வழக்கம்.” “அங்கேயும் இப்போது இந்த வழக்கம்தான். அதனால்தான் சரி என்று விட்டுவிடுகிறேன்” என்றாள் சூர்யகலா. ரிஷிக்கும் தேனரசிக்கும் நடந்த மோதல்களைக் கூறினான். இதை அண்ணன் கூறவேயில்லையே என்று கேட்டுக்கொண்டாள். தான் அங்கு தேனரசியைத் தேடி வந்தது முதற்கொண்டு சூர்யகலாவைக் கடத்திய கதை வரை சொன்னான். ஆர்வமுடன் கேட்டுக்கொண்டே வந்தாள் சூர்யகலா.   மலையரசனிடம் இருந்த முழுபயமும் விலகியது. அவனைத் தவறாக நின...

உன்னை விடமாட்டேன் – பகுதி 69

 மலையரசன் இருக்கும் குடிலுக்கு பாலைக் கொடுத்து சூர்ய கலாவை உள்ளே அனுப்பினார்கள். அவளோ பயமாய் இருக்கிறது. நான் போக மாட்டேன் என அழ ஆரம்பித்து விட்டாள். பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க தாத்தா வந்தார். “ஏம்மா தாத்தாவைப் பார்த்தா பயமா இருக்கா?” “இல்ல தாத்தா!” “சரி என் கூட வா” என்று மலையரசன் இருக்கும் குடிலினுள் கூட்டிச்சென்றார். கட்டிலில் சூர்யகலாவை சீண்டும் ஆவலில் அமர்ந்து கொண்டு இருந்தவன், தாத்தாவைக் கண்டு திகைத்து எழுந்தான். மலையரசன் காலில் சூர்யகலாவை விழச் சொன்னார். விழுந்தாள். “பாலை அவனிடம் கொடுத்து பாதியைக் குடித்து மீதியை உனக்குக் கொடுக்கச் சொல்” என்றார். சூர்யகலா மனதுள் 'அய்யய்யோ மறுபடியும் எச்சில் பாலைக் குடிக்க வேண்டுமா?' என எண்ணியபடி தாத்தா கூறியதைச் சொல்லி கொடுத்தாள். அவன் குடித்துவிட்டு மீதியைக் கொடுக்க வாங்கி விட்டு தாத்தாவைப் பார்க்க “குடிம்மா” என்றார் சிரித்தபடி. வேறு வழியின்றி அந்தப் பாலைக் குடித்தாள். “சரிம்மா ஒன்னும் பிரச்சினை இல்ல. நீ கட்டில்ல படுத்து தூங்கு” என்றார். தயங்கி நின்றவளை எப்படியும் இரவு முழுக்க தூங்காம இருக்க முடியுமா? சொல்லு. படும்மா. என...

உன்னை விடமாட்டேன் – பகுதி 68

 காடு, மலை தாண்டி காரை ஓட்டியபடி ரிஷி தாய், தந்தையரிடம் பேசினான். விபரம் கேட்ட அவர்களுக்கு “சூர்யகலா ஒருவனை காதலித்து மணந்துகொண்டாள்” என்று கூறினான். பெற்றவர்களால் நம்பமுடியவில்லை “நாம் தொழில் வட்டாரத்தில் பயிற்சி கொடுத்து அவளுக்கு பார்த்து வைத்திருக்கும் வரன்களில் யாரையாவது மணமுடித்துவிடுவோம் என்று பயந்து மணம் செய்து கொண்டாள். அவளுக்கு பிடித்தபடி கைவினைப்பொருள் தயாரிப்புடன் தொடர்பு கொண்டவனைதான் மணந்து கொண்டுள்ளாள்.” என நம்பும்படி அளந்து விட்டு 'அங்கு திருமணம் முடித்துவிட்டது. அவர்களை வீட்டிற்கு அழைத்தேன். பயப்படுகிறார்கள். இரண்டு மாதங்கள் கழித்து வருகிறோம் என்கிறார்கள். மாப்பிள்ளை அம்சமாக உள்ளான். ஆனால் படிப்பு இல்லை. மிக்க திறமைசாலி' என அவர்களுக்கேற்றவாறு பொறுமையாய் பதில் கூறினான். மேலும் “ஓரிரு நாட்களில் நான் வந்துவிடுகிறேன்.” என்றான் ரிஷி. “ஏண்டா மலேசிய தொழிலதிபர் மாநாட்டுக்குத்தான் போகமாட்டேன் என்று சொன்னாய். அதற்குரிய வேலையாவது பார்க்க வேண்டும்தானே. என்னடா இது தொழிலை...” “அப்பா நான் ஒரே நாளில் வந்துவிடுகிறேன் நாளை நிச்சயம் அங்கு இருக்கிறேன்” என்று சமாதானப்படுத்தினான். போ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 67

 'திருமணத்தை ஒத்துக்கொண்டுவிட்டான். தங்கையை இங்கேயே விட்டு விட முடிவு செய்து விட்டான். இனி விட்டால் பறந்து விடுவான். இனி நாம தலையிடாமல் இருக்க முடியாது.' என சட்டென்று முடிவெடுத்து ”ரிஷி! பொறு. தேனரசியை நான் பார்க்க வேண்டுமே!” என்றார் சிங்கராசா தாத்தா. “தாத்தா உண்மையில் நேரமாகிறது வேலை நிறைய இருக்கிறது. வேலையை முடித்துவிட்டு வருகிறேன்.” “டேய் நில்லுடா. உதைபடுவ.” நின்றான் ரிஷி. “எங்கே என்கிட்ட சொல்லு. உண்மையில் யாருக்கும் தெரியாம உங்கம்மாகிட்ட தேனரசியை விட்டிருக்கிறாயா?” “தாத்தா! ப்ளீஸ் நான் கண்டிப்பா உங்க கிட்ட தேனரசியக் கூட்டிட்டு வருவேன். அவகிட்ட விபரம் கேட்டுக்குங்க. இப்ப என்னை போகவிடுங்க.” “நான் உன்கிட்ட கெஞ்சனும்னா கெஞ்சறேன் ரிஷி.” என்று தாத்தா கூறினார். ரிஷி தாத்தாவின் கால் அருகே வந்து முட்டியிட்டு காலில் விழுந்து விட்டான். “என்ன வார்த்தை சொல்லிட்டீங்க தாத்தா! உங்க பேரன் கெட்டவன் இல்ல. தேனரசி என் பொறுப்பு. மலையரசன் என் தங்கைய கூட்டிட்டு வந்தான். இதோ பாருங்க.” சூர்யகலாவை பிடித்திழுத்து தாத்தா முன் நிறுத்தினான். “அவள் உடம்பெல்லாம் பாருங்க. இதோ கையில் இரத்தம் கூட வந்திருக்க...

உன்னை விடமாட்டேன் – பகுதி 66

 "இங்கே பார் ரிஷி, என் தங்கையை அங்கு வந்து ஆறு மாதங்களாக தேடி பார்க்க முடியவில்லை. புளியமரத்தில் ஒரு கொப்புல இருக்கிற புளியங்காய் எட்டலன்னா நாங்க என்ன செய்வோம்னா அடுத்த கொப்பை பிடித்து இழுப்போம். அப்போ எட்டாம இருக்கிற புளியங்காய் தன்னால பக்கத்துல வந்துடும். உன்னைப்போல.” என்றான் மலையரசன் வேண்டுமென்றே ரிஷியை சீண்டுவதற்காக. “ஹேய் நான் யாருக்கும் எட்டாதவன் கிடையாது. என்னைப் பார்க்கணும்னு செக்யூரிட்டிங்ககிட்ட சொன்னா நிச்சயம் என்னை நீ பார்த்திருக்கலாம். உன் தங்கை எங்கே? என்று என்னிடம் கேட்டிருக்கலாம். எல்லாத்தையும் விட்டுட்டு என் தங்கையை ஏன் கடத்தினாய்?” நடுவில் புகுந்த மாயவன் “மலையரசா! வெளியாளுங்க பேச்சுல சாகசக்காரங்க டோய். பாத்தியா? முதல்ல பொட்டப்புள்ளய கடத்தின அவன் உத்தமன் மாதிரியும் .....” “மாயவா நான் உன்கிட்ட பேசல. மலையரசா சொல்லு.” என்றான் ரிஷி. “நான் வருவேன்னு உனக்குக் கண்டிப்பா தெரியும். ஏன் உன் செக்யூரிட்டிக்கிட்ட அவன் என் நண்பன் மரியாதையா உள்ள அழைச்சுட்டு வாங்க அப்படின்னு சொல்லியிருக்கலாம்ல. அதைவிட்டுட்டு எர்த்தை வைச்சேன்னு பேசுற நீ!” “நீ கண்டுபிடிச்சி வருவேன்னு என்ன நிச்சயம்? ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 65

மலையரசா! என் தங்கையை ஏன் கடத்திவந்தாய்?” கைகட்டியபடி நிதானமாக கேட்டான் ரிஷி. சூர்யகலா குடிலில் இருந்து அங்கிருந்த ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தாள். அவள் மட்டுமா பார்த்தாள். பெண்கள் கூட்டமும் ஆர்வமுடன் தேனரசியைப் பற்றி தெரிந்துகொள்ள குடிலுக்கு வெளியே குழுமியிருந்தது. “என் தங்கையை நீ கடத்தி போகவில்லையா?” என்றான் மலையரசன். “உன் தங்கை என்னிடம் என்ன தவறு செய்தாள் என்று உனக்குத் தெரியாதா? என் தங்கை உன்னிடம் என்ன தவறைச் செய்தாள் என்று கடத்திவந்தாய்?” நடுவில் பேச முயன்ற அனைவரையும் தடுத்தார் சிங்கராசா தாத்தா. சூர்யகலா மலையரசன் கூறியதையும், அதற்கு அண்ணன் கூறிய பதிலையும் கேட்டு அதிர்ந்தாள். ‘இது உண்மையா? அண்ணனா? அண்ணன் பெண்களிடம் தவறாக நடப்பவன் அல்லவே? என்ன கூத்து இது? ஒரு வேளை, அதனால்தான் அண்ணன் தன்னைக் கடத்தி வந்த மலையரசனை ஒன்றும் செய்யவில்லையா? இப்பொழுதுகூட அண்ணன் சிறிது கூட கோபத்துடன் கேட்கவில்லையே?’ என எண்ணினாள் சூர்யகலா . “என் தங்கை தப்பு செஞ்சா இங்கேயே தலையை வெட்டிப்போட்டுட்டு போயிருந்தாக் கூட பரவாயில்லை. நீ எப்படி ஒரு பொட்டப்புள்ளய கடத்திட்டு போகலாம். இனி யார் அவளைக் கல்யாணம் பண்ணிப்பா?...