Posts

Showing posts from September, 2021

உன்னை விடமாட்டேன் – பகுதி 45

 "என்னை எத்தனை நாள் இப்படியே வைத்திருப்பதாக உத்தேசம்?” என்று கேட்டாள் தேனரசி. ரிஷி அவள் பேசியதைக் கேட்டு வியந்தாலும் எந்த முகமாறுதலையும் வெளிப்படுத்தாமல் “உனக்கு புத்தி வளரும் வரை“ என்றான். அவளுக்கு கோபம் வந்தது. முதலிலேயே தன் கோபம் செல்லாக்காசு என்பதை நடைமுறையில் அனுபவமாகக் கண்டவளாயிற்றே. அவன் வம்புக்கு இழுக்கிறான். மாட்டக்கூடாது என முடிவுகட்டினாள். ‘மலைத்தேனுக்காகத்தானே தன்னைக் கடத்தினான்‘ என எண்ணியவாறு “மலைத்தேன் என்னவாயிற்று?” என்றாள். ரிஷிக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. ‘இவளை அடைத்து வைத்ததால் இவருக்கு பைத்தியம் ஏதாவது பிடித்துவிட்டதோ? என எண்ணியவன், “மலைத்தேனா? புரியவில்லை மலைத்தேன் உனக்கு வேண்டுமா? கொண்டுவரச் சொல்லவா!” என்றான். அவனை முறைத்தவள், “நீ மலைத்தேனுக்காகத்தானே எங்களிடத்திற்கு வந்தாய். மலைத்தேன் தர தாத்தா சம்மதித்துவிட்டாரா? என்றாள். உண்மையிலேயே இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ? என எண்ணினான். ஆனாலும் அவளிடம் பொறுமையாக, “அதுதான் உன் தாத்தாவிடம் அதற்கு இனி முயற்சி செய்யமாட்டோம் என்று உறுதி மொழி கொடுத்துவிட்டேனே.” என்றான். உடனே தேனரசி, “பொய். அப்படி பொ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 44

ரிஷி தன்னைக் கடத்தி வந்து நான்காவது நாளாகிவிட்டது என கணித்தாள் தேனரசி. உண்மையில், அவளுக்கு இரவு, பகல் தெரியவே இல்லை. அவளை ரிஷி குளிக்க, சாப்பிட, உறங்க உத்தரவிட்டு அதைச் செயல்படுத்துவதன் மூலம் அதைக் கணித்தாள். ‘இனி இப்படியே இருக்க முடியாது. நாளை காலை அவன் வரும்போது ஏதாவது பேசி அவன் என்ன நினைக்கிறான் என அறிந்துகொள்வது அவசியம்‘ என எண்ணினாள். அவளுக்கு ரிஷியிடம் பேசவே விருப்பம் இல்லை. ‘ஆனால், என்ன செய்வது? பேசினால்தான் தப்பிக்க அல்லது தற்கொலை செய்துகொள்ள வழி கிடைக்கும். இப்பொழுது பேச வேண்டிய கட்டாயம்’ .என்று எண்ணியடி அன்று இரவு உறங்கிவிட்டாள். அன்றைய இரவு, ‘ஒரு வாரத்தில் வீட்டிற்கு வருவதாய் கூறியுள்ளோம். ஒரு வாரத்திற்குப் பிறகு, காலையிலேயே சமைத்து அவளருகில் வைத்து விட்டு 7 மணிக்கெல்லாம் கிளம்பி மதியம் 2 மணியளவில் அல்லது அதற்கு முன்னதாக இங்கு வரும்படி பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். இவளைக் கஷ்டப்பட்டு கடத்திக் கொண்டு வந்த விட்டு நிச்சயமாக வீண் தலைவலியில் மாட்டிக் கொண்டேன். அன்றாட அலுவலை எப்படி பார்ப்பது? இவளை கவனிக்க ஆள் வைக்க வேண்டிவருமோ? தாத்தா சொன்னதைக் கேட்டிருக்கலாம். முட்டாளைத் திருத்...

உன்னை விடமாட்டேன் – பகுதி 43

 இரண்டு நாட்களாய் தேனரசியிடம் பதிலுக்கு பதில் சீண்டியவன், தேனரசி அமைதியாக இருந்ததும் அவனும் அமைதியாக இருக்க ஆரம்பித்தான். ஆனாலும் தேனரசி தன்னிடம், ‘ஏன் என்னை கடத்தி வந்தாய்’ என்று கேட்பாள் என ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்திருந்தான். ஆனால், அவளோ அது பற்றி எதுவும் கேட்கவே இல்லை. முதலில், அவள் ரிஷியை தாக்குவதிலேயே குறியாக இருந்தாள். இப்போதோ அவள் அமைதியாக இருக்க ஆரம்பித்து விட்டாள். அடிக்கடி அவள் கண்களில் கண்ணீர் மழையைக் கண்டான். அவள் அழுவதை தன்னிடம் மறைப்பதற்காக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வதைக் கவனித்தான் ரிஷி. அவள் அடங்கி விட்டதாக நினைத்து தன்னுடைய வழக்கமான அலுவல் பணிகளை கவனிக்க ஆரம்பிக்கலாம் என்று நினைத்தான். ‘முதலில் தங்கையிடம் பேசி விடலாம். அவளிடம் பேசி எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன?’ என எண்ணியபடி செல்போனை ஆன் செய்தான். சூர்யகலா கேட்டாள், “அண்ணா எங்கே இருக்கிறாய்? அன்று ஏன் நீ பேசும்பொழுது திடீரென்று கட் செய்தாய்? அடுத்த நாள் ஏன் பேசவில்லை. பிறகு அதற்கடுத்த நாள் ‘பத்து நாட்கள் கழித்து தான் பேச முடியும்’ என்றாய். இப்பொழுது இவ்வளவு நாள் கழித்து பேசுகிறாய். இவ்வளவு நாட்களாக ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 42

 மலையரசன், கார் சென்னையை அடைந்ததும் ஒரு சலூன் கடையில் முடியை வெட்டிக்கொண்டான். காதில், மூக்கில் உள்ளதெல்லாம் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டான். நல்ல ஆடையை வாங்கி அணிந்து கொண்டான். மாயவனும், தென்னரசும் தாத்தாவை நினைத்து பயந்தனர். “டேய் மலை! உன்னைய நம்ம கூட்டத்துல இருந்தே விலக்கி வச்சுட்டுவாங்களே. தேனு கிடைக்கலைன்னா பரவாயில்லைடா” என்றனர். “நான் சென்னைக்காரன் மாதிரி மாறினத தாத்தாட்ட சொல்லவேண்டாம்” என்றான் மலையரசன். மூவரும் ரிஷியின் தொழில் நிறுவனத்திற்கு சற்று தொலைவில், நிற்க முடிந்ததே தவிர அதன் அருகில் கூட செல்ல முடியவில்லை. மலையரசன் தனியாகவும், மற்ற இருவரும் சேர்ந்தும் செல்ல முயன்றனர். மலையரசனால் போகமுடிந்த அளவுக்கு கூட மற்ற இரண்டு பேரால் போக முடியவில்லை. அங்கு இரண்டுபேரும் இரண்டு நாட்களாய் போராடி பார்த்தார்கள். கேட்டின் அருகே கூட போகமுடியவில்லை. அவர்களைப் பார்த்தாலே காவலாளிகள் உள்ளே விடவே இல்லை. மலையரசன் மட்டும் அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தான். வன அதிகாரி சொன்ன அடையாளத்துடன் ரிஷியின் கார் அங்கு வரவே இல்லை. மலையரசன் இரண்டு பேரிடமும், “ரெண்டு பேரும் நம்ம இடத்துக்கு போய் கைவினை பொரு...

உன்னை விடமாட்டேன் – பகுதி 41

 ரிஷி தேனரசியை, தீவிரவாதிகளுக்கென்று தனிப்பட்ட முறையில் அமைத்த அறையில் சங்கிலியுடன் பிணைத்தான். பிறகு, அந்த அறையை பூட்டிவிட்டு அவனுடைய அறையில் குளித்தான். அழைப்புமணியை அழுத்தி, உள்ளே வந்த காவலாளிகள் வாங்கி வந்திருந்த உணவு, மற்றும் மளிகை சாமான்களை, ஓரிடத்தில் வைக்கச் சொன்னான். தமது கட்டளையின்றி உள்ளே வரக்கூடாது என்றான்.  ரிஷியை பார்க்க வந்த தலைமைக் காவலாளி, “சார்! மின்வேலியில எர்த் இருக்கும்படி பார்த்துக்க சொன்னீங்களாமே! தலையில் கொண்டை முடி, காதுல கம்மலோட ஒருத்தன் வந்தா தகவல் சொல்ல சொன்னீங்களாமே! அப்போ வர்றவன் சாகக்கூடாதுதானே சார்! கை, கால்ல மட்டும் சுட்டு உயிரோட பிடிக்கலாமா? சார்” என்று கேட்டார். ரிஷி பதற்றத்துடன் “அப்படியெல்லாம் பண்ண வேண்டாம். அவனுக்கு சின்ன காயம்கூட ஏற்படக்கூடாது.” என்றான். தன்னை தலைமைக் காவலாளி வித்தியாசமாக பார்ப்பதை உணர்ந்தான் ரிஷி. மலையரசன் வருவான் என ரிஷி நினைக்கவில்லை ஏனெனில் காட்டு பங்களா பற்றி யாருக்கும் தெரியாது. அப்படியிருக்க எங்கோ உள்ள மலையரசன் எப்படி கண்டுபிடித்து வருவான். முடியாதுதான். ஆனால் பொதுவாக ரிஷி எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பவன். ரிஷி ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 40

 வன அதிகாரி ஏற்பாடு செய்த காரும் வந்தது. “உன்னுடைய ஆட்கள் தாத்தாவிடம் இருந்து பணம் கொண்டு வந்தால் விவரத்தை நான் கூறிக்கொள்கிறேன். உடனடியாக நீங்கள் மூவரும் சென்னைக்கு செல்லுங்கள்.“ என்று காரில் அனுப்பி வைத்தார் வன அதிகாரி. ‘அந்த தொழில் அதிபரை நான்தானே வலுகட்டாயமாக மலையரசனிடம் கூட்டிட்டு போகச் சொன்னேன். இப்போது அதனால்தானே அவர்கள் பெண்ணிற்கு தீங்கு நேரிட்டது.’ என்று குற்ற உணர்வுடன் தவித்த வன அதிகாரி இந்த உதவியை அவர்களுக்கு செய்தபின் ஓரளவு நிம்மதி அடைந்தார். ரிஷியின் கார் சென்னையை நோக்கி சீறிச் சென்றது. ரிஷி ‘இனி தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது’ என்று அலட்சியமாக நினைத்தான். தேனரசி மயக்கம் தெளியும் இடங்கள் ஆள் அரவமற்ற இடமாக இருக்கும்படி பார்த்துக் கொண்டான். தேனரசியிடம் மூர்க்கத்தனம் மிகுந்திருந்தது. ஆனாலும், அவளால் தப்பிக்க இயலவில்லை. நடு வழியில் மூன்று முறை வலுக்கட்டாயமாக மூக்கைப் பிடித்து பழச்சாற்றை குடிக்க வைத்தான். பின் மீண்டும் மயக்க மூலிகையை பயன்படுத்தினான். தேனரசி இயற்கை உபாதையை கழிக்க ரிஷி ஒதுங்கி நிற்கும்போது, தேனரசி தப்பிக்க முயன்றது ரிஷியின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியத...

உன்னை விடமாட்டேன் – பகுதி 39

 மலையரசன் தன்னுடன் பழகிய ரிஷியை நினைத்து கொண்டு, “சாமி! நீங்க ரிஷியோட வீட்டு விலாசத்தை கொடுங்க. நான் போய் பேசிக்கிறேன்” என்றான். வன அதிகாரி மிரள, “சாமி! உங்க பேரை எங்கேயும் சொல்லமாட்டேன். சொல்லுங்க சாமி!” என கையேந்திய மலையரசனின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்ட வன அதிகாரி, “கண்டிப்பா உனக்கு உதவுறேன் மலையரசா!” என்றார். அப்பொழுது மாயவன் முதற்கொண்டு மற்றவர்கள் அங்கு வந்து சேர ஒரு குழப்ப நிலை ஆரம்பித்தது. அதைக் கண்ட மலையரசன் அவர்களிடம், “மாயவன், தென்னரசு இரண்டு பேர் மட்டும் இருங்க. மீதி பேரு நம்ம இடத்துக்கு திரும்ப போய்டுங்க. போறவங்கள்ல ரெண்டு பேர் மட்டும் தாத்தாட்ட கேட்டு பணத்தை வாங்கிட்டு சீக்கிரம் வாங்க. ரிஷி சென்னைக்குதான் கார்ல கடத்திட்டு போயிருப்பான்னு நினைக்கிறேன். அவனைப் பத்தி இங்க (திருநெல்வேலி) இருக்குற அவனோட கம்பெனிலதான் விசாரிக்கணும். பிறகு நான் சென்னைக்கு போக வேண்டியதாயிருக்கும் நிறைய பணம் தேவைப்படும். நீங்க விசிறி, பொம்மை, பெட்டி, நாற்காலி இதெல்லாம் நிறைய செஞ்சு வைங்க. அதையே சென்னைக்கு கொடுத்தனுப்புனா வித்து காசாக்கி அவங்கள தேட முடியும். கண்டிப்பா ரிஷியை கூட்டிட்டுதான் வர...

உன்னை விடமாட்டேன் – பகுதி 38

 சிங்கராசா தாத்தா. மலையடிவாரத்தை அடையும்போது மலையரசனும் அங்கே வந்து விட்டான். சிங்கராசா தாத்தா, “வந்துட்டியா மலையரசா! நீ இருந்தா ரிஷியை இந்நேரம் பிடிச்சிருப்ப. அவனை விடாதே. தாத்தாவோட கட்டளை அப்படினு அவனை எப்படியாவது அழைச்சுட்டு வந்துரு. சீக்கிரம் போ” என்று மலையரசனை அனுப்பி வைத்தார். பிறகு அவர் காட்டுராசா தாத்தாவிடம், “மயங்கி இருந்தவன் இவ்ளோ சீக்கிரமா வந்திருக்கான்னா கண்டிப்பா ரிஷியோட காலடித் தடத்த பார்த்து மலையரசன் ஏமாறலன்னு அர்த்தம். ஆனாக்கூட இனி மலையரசன் ரிஷியை பிடிப்பானான்னு சந்தேகம்தான். ஏன்னா, வெளிச்சம் வந்துடுச்சு. இருட்டுலியே சமாளிச்சு வந்தவன் இந்நேரம் மலையக் கடந்திருப்பான்.” என்று வருத்தத்துடன் சொன்னார். 8.30 மணியளவில் மயங்கியிருந்த தேனரசியுடன் வந்தவன், தான் விட்டு விட்டு சென்ற செல்போன் அடங்கிய பையை கொண்டு வரும்படி வன அதிகாரியிடம் உத்தரவிட்டான். ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்த ரிஷியை கேள்வி கேட்க பயந்து, “இதோ சார்!” என்று பத்திரமாக வைத்திருந்த பையைக் கொண்டு வந்து கொடுத்தார் வன அதிகாரி. “என்னுடைய கார் எங்கே?” என்ற ரிஷியிடம், “நீங்கள் சொன்னபடியே தினமும் துடைத்து பத்திரமாக...

உன்னை விடமாட்டேன் – பகுதி 37

“அக்கா! தேனைக் காணலியே. அவள் காலைல போற இடமெல்லாம் தேடிப் பாத்துட்டேன். மாமனாருக்கு (சிங்கராசா தாத்தா) தெரிஞ்சா அவ்வளவுதான். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலியே. இவளை ஏன் பெத்தேனோன்னு நினைக்கிற அளவுக்கு என்னைய பாடாய்படுத்துறாளே!” என கண்ணில் நீர் பெருக உரைத்தாள். அவளை சமாதானப்படுத்தியபடி முல்லையரசியும் விழுந்து, விழுந்து தேடினாள். விஷயம் பெரியவருக்கு தெரியாமல் முடிக்க வேண்டும் என பாட்டி முதற்கொண்டு பெண்கள் மூலமாக தேட துவங்கினாள். ஆண்களிடம் சென்றாலே பெரியவருக்கு தெரிந்து விடும் என எண்ணியே பெண்கள் கூட்டம் மட்டும் ரகசியமாக தேடியது. தேடினாலும் தேனரசி கிடைத்தால்தானே. வேறுவழியின்றி மலையரசன் மூலமாக தாத்தாவுக்கு தெரியாமல் தேடலாம் என விரைவில் முடிவெடுத்து முல்லையரசி மலையரசன் தூங்கும் இடத்திற்கு சென்றாள். தட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் சாத்தி இருந்த கதவை திறந்தாள். மலையரசன் பக்கத்தில் மயக்க மூலிகை இலைகளை பார்த்தாள். ரிஷியையும் காணவில்லை. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தவள் மலையரசனை உலுக்கி பார்த்துவிட்டு சப்தமாக அனைவரையும் அழைத்தாள். சிங்கராசா தாத்தா, வந்தவுடன் நேரத்தை விரயமாக்காமல் மாயவன் தலைமையில் ச...

உன்னை விடமாட்டேன் – பகுதி 36

 நடு இரவில் விழித்த ரிஷி பக்கத்தில் மலையரசன் ஆழ்ந்து உறங்குவதை உறுதி செய்து கொண்டான். பின் மரத்திலிருந்து டிரான்ஸ்மிட்டரை எடுக்க வெளியில் வந்தான். மரத்தில் உட்கார்ந்து தங்கையை தொடர்பு கொண்டு, “இனி பத்து நாட்கள் வரை பேச முடியாது.” என கூறி விட்டு மரத்திலிருந்து இறங்க முற்பட்டான். அப்போது தேனரசி குடிலை விட்டு வெளியே வருவதைப் பார்த்தான். அவள் எங்கோ தனியே செல்வதைப் பார்த்து விட்டு வெற்றி களிப்புடன் அவளை பூனை போல பின்தொடர்ந்தான். சிறிது தூரம் சென்றதும் அவளின் வாயை பொத்தி, வாயினுள் கைக்குட்டையை திணித்தான். அவளை அங்கிருக்கும் கொடியைக் கொண்டு பிணைத்தவன், அருகிலுள்ள மயக்கம் தரும் மூலிகை செடியின் இலைகளை பறித்தான். அவளை மயக்கமடைய வைத்து விட்டு அங்கேயே அப்படியே படுக்க வைத்து விட்டு மலையரசனிடம் சென்றான். மலையரசன் மூக்கின் அருகே மயக்க மூலிகையை முகர வைத்தான். மலையரசனை தூக்கத்திலேயே மயக்கத்தில் ஆழ்த்தினான். ‘இனி நிச்சயம் மலையரசன் 6 மணி வரைக்கும் எழும்ப மாட்டான். மலையரசன்தான் இம்மூலிகையை எவ்வளவு, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான். இப்பொழுது அதை அவனுக்கு எதிராக பயன்படுத்துகிறோமோ...