Posts

Showing posts from August, 2021

உன்னை விடமாட்டேன் – பகுதி 35

  தேனரசிக்கு நேற்றிலிருந்து வீடே நரகம் ஆயிற்று. நடத்தை கெட்டவள் போல. தாய் பேசினால் எப்படி இருக்கும்? போதாக்குறைக்கு நீ செத்தால் பரவாயில்லை. நீ ஏன் பிறந்தாயோ? என்ற வார்த்தைகள் ஈட்டியை போல் அவள் நெஞ்சைப் பிளந்தன. பெரியம்மா கூட உனக்கு எப்படி கல்யாணம் ஆகும் என கவலைப்பட்டாளே தவிர தாயைக் கண்டிக்கவில்லை. பாட்டியும் ஒத்து ஊதினாள். இம்மாதிரியான சூழ்நிலையை அவள் இதுவரை கண்டதில்லை. அவளால் தாங்க முடியவில்லை. தேனரசி மாலுச்சாமியை நினைத்துக் கொண்டாள். ‘ உனக்கு உப்பு, மிளகு எடுத்து வச்சதுல ஆரம்பிச்ச பிரச்சினை பெரிதாக மாறுதே தவிர குறையக் காணும். கேட்கக் கூடாத வார்த்தையெல்லாம் கேட்டுட்டேன். இனி நான் உயிரோட இருக்கணுமா? முடியாது.. நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல. என்னை கண்டிக்கவும் வேண்டாம். கல்யாணம் பண்ணிக்கொடுக்கவும் வேண்டாம். தற்கொலை பண்ணா உன்கிட்ட வரமுடியாதுன்னு சொல்வாங்க. ஆனால் எனக்கு வேற வழி தெரியல. உன்னை மனசில் நினைச்சுகிட்டு தற்கொலை பண்ணிக்க போறேன். நீதான் எல்லாத்துக்கும் பொறுப்பு.’ என நினைத்துவிட்டு, தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். முடிவில் இரவில் அனைவரும் உறங்கிய பின் குடிலை விட்டு வ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 34

 அடுத்த நாள் காலை தாத்தா ராசாளியைக் கிளப்பிக் கொண்டு ரிஷியின் கால் கட்டை அவிழ்த்தார். முன்பே தயாராக வைத்திருந்த எண்ணெயை காலில் ஊற்றி அழுத்தி தேய்த்தவர், “ரிஷி! நேத்து ராத்திரி காலை வேகமா எதற்காவது அசைச்சியா?” என்று கேட்டார். மிகுந்த வியப்புடன் தாத்தாவிற்கு பதில் சொல்ல முற்பட்ட ரிஷியை முந்திக் கொண்டு பதில் சொன்னான் மலையரசன். “ஆமாம் தாத்தா! என்னாலதான் அவன் காலை அசைச்சான். ஏதும் பிரச்னையா தாத்தா” என்றான் பதற்றத்துடன். “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை. பயப்படாத.” என்றவர் காலுக்கு பயிற்சி கொடுத்தார். பிறகு, ரிஷியிடம், “என்ன ரிஷி! ஒரு வழியா மலையரசனை மன்னிச்சிட்ட போலிருக்கு. இதுதான் சரி. முட்டாள்தனமா யார் நடந்துகிட்டாலும் மன்னிக்க கத்துக்கணும் ரிஷி!” என்றார். தாத்தா, “மலையரசன் அறிவுபூர்வமா மன்னிப்பு கேட்டான். அதான் கொடுத்துட்டேன் தாத்தா. உணர்வுபூர்வமா, முட்டாள்தனமா மன்னிப்பு கேட்டிருந்தா கொடுத்துருக்க மாட்டேன்.” என்றான் ரிஷி. தாத்தா சிரித்தபடி, “ரிஷி உனக்கு தூக்குணாங்குருவியும் குரங்கும் கதை தெரிஞ்சிருக்கும். முட்டாள்கள திருத்த முயற்சி செஞ்சா சில நேரம் அது நமக்கே கெடுதலா மாறிடும். அதனால...

உன்னை விடமாட்டேன் – பகுதி 33

 தாத்தா, “அம்மா, தேனு! ரிஷி என்ன பண்ணாலும் அதை நாங்க பார்க்க மாட்டோமா? நாங்க என்ன செத்தா போயிட்டோம். பொட்ட பிள்ள செய்ய கூடாததை செய்துட்டு விளக்கெண்ணய் விளக்கம் சொல்றியோ?” கோபத்துடன் கேட்டார். பின் அங்குள்ள பெண்மணிகளிடம் “அம்மா! தேனரசிய எக்காரணத்த கொண்டும் வெளியே விடாதீர்கள். வீட்டுக்குள்ளயே இருக்கட்டும். வெளியே விட்டீங்கன்னா பொல்லாப்பு வந்து சேரும். அனுபவஸ்தன் சொல்றேன். கண்டிப்பா கேட்டு நடங்க. பின்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னா தேனு வீட்டுக்குள்ளதான் இருந்தாகணும். சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். அம்புட்டுதான்.” என்று சொல்லி விட்டு ரிஷியின் காலுக்கு எண்ணெய் தயாரிக்க ஏற்பாடு செய்ய போனார். தேனரசிக்கு பற்றிக் கொண்டு வந்தது. அவள் மனதிற்குள், “நீங்க அவ்வளவு தெளிவா இருந்தா எனக்கேன் இந்த நிலைமை தாத்தா! இப்பவும் தப்பு பண்ண மாதிரி என்னயத்தான அடைச்சு வைக்கீறீங்க” என்று எண்ணிக் கொண்டாள் வெளியில் வாய் விட்டு சொல்ல முடியாமல். தேனரசிக்கு கட்டுக்காவல் போடப்பட்டது. ரிஷிக்கு மலையரசன் இரவு உணவு கொண்டு வந்தான். ரிஷி அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மலையரசன், “ரிஷி! என்னய மன்னிச்சுரு. நான் மன்னிக்க ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 32

 சிரித்த முகத்துடன் பேசியவனின் முகம் ‘தவறு செய்பவர்களை நான் தண்டிக்காமல் விடுவதில்லை.’ என்று சொல்லும்போது மட்டும் கோபத்தின் கனலைக் காட்டியது. தாத்தாவின் முகத்தில் பயம் படர்ந்தது. ‘தேனரசியை தண்டிக்காமல் விட மாட்டானோ?’ என எண்ணினார். அதனால் அவர் ரிஷியிடம், “அறிவில்லாமல், அனுபவமில்லாமல் செய்யும் தவறுகளை மன்னிக்கலாம் இல்லையா ரிஷி.” என்றார். ரிஷியோ, புன்னகையுடன் “அதெப்படி முடியும் தாத்தா! என்னிடம் அறிவில்லாமல், அனுபவமில்லாமல் தவறு செய்தால் அறிவும், அனுபவமும் புகட்டப்படும். அதனால், தாங்கள் கவலையே பட வேண்டாம்.” என்றான் சிரித்தபடி. தாத்தாவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது. இவன் மிக சாதாரணமாக பழகினாலும் அசாதாரணமானவன். இவன் இளைய வயதினன் என்றாலும் இவனின் அறிவு, சாமர்த்தியம், ஒருவரை கணிக்கும் திறன் தன்னுடைய அனுபவத்துடன் போட்டி போடும் அளவிற்கு உள்ளது. குற்றவுணர்வுடன் கதறி அழும் மலையரசனையே இன்னும் மன்னிக்காதவன் தேனரசியை மன்னிப்பானா? அவள் எத்தகைய தவறு செய்தாலும் தன்னுடைய பேத்தி ஆயிற்றே. அவளை ரிஷி எவ்வாறு தண்டிப்பான் என அவரால் கணிக்க முடியவில்லை. ஆனால், ரிஷியிடம் இருந்து தேனரசியைக் காப்பாற்றியே ஆக வேண்...

உன்னை விடமாட்டேன் – பகுதி 31

 மலையரசன், தன் கோபம் முழுவதையும் தங்கை தேனரசி மீது காட்ட முயல அனைவரும் பெரும்பாடுபட்டு அவனை தடுத்தனர். மலையரசன் அவளிடம், “இனி என்னை ‘அண்ணா!’ என்று அழைக்காதே! நான் உன் அண்ணன் கிடையாது. உன்னிடம் எனக்கு பேச்சும் கிடையாது.” என்று கூறி சென்று விட்டான். அனைவரும் அவளைக் கரித்துக் கொட்டினர். தேனரசி தன் தாயிடமாவது ரிஷியைப் பற்றி கூறலாம் என்று பார்த்தால் “உன்னை ஏன் பெற்றேன் என்றே தொியவில்லை. இம்மாதிரியாக, தானே ஆடையைக் கலைத்து நாடகம் ஆடுபவள் இன்னும் என்னென்ன பொய்களை சொல்வாளோ? உன்னால் எனக்கும் சோ்த்தல்லவா கெட்ட பெயர். நீ உயிரோடு இருப்பதை விட சாகலாம்.” என்று தாய் அவளை வாட்டி எடுத்தாள். அங்கு ரிஷி, தாத்தாவைத் தவிர யாரிடமும் பேசவில்லை. இங்கோ, தேனரசியிடம் யாருமே பேசவில்லை. தாத்தாவும் ‘சீ’ என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின் தேனரசியை பார்க்கவில்லை. ஏனெனில், ரிஷியை அவர்தான் கவனிக்க வேண்டி இருந்தது. தாத்தா, “ரிஷி நீ ரொம்ப கோவக்காரனா இருக்கியே. உன்ன உங்க வீட்டுல எப்படி சமாளிக்கிறாங்களோ? மன்னிக்கவும் கத்துக்கணும் ரிஷி.” விளையாட்டாய் பேசி அவன் கோபத்தை தணிக்க முயன்றார். “நான் மன்னிப்பேன் தாத்தா! அந்த மன்னிப...

உன்னை விடமாட்டேன் – பகுதி 30

 ரிஷி உண்மையில் தவறு செய்திருந்தால் ஒன்று, தேனரசி ரிஷி தன்னிடம் அத்துமீறியதற்காக தாத்தாவிடம் கதறி இருக்க வேண்டும். அல்லது மிகுந்த கோபமாவது வந்திருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் அவள் தாத்தாவைக் கண்டு தலைகுனிந்தது ஏன்? ‘தன்னுடன் பிறந்தவள், தானே தன்னுடைய ஆடையையும், கூந்தலையும் கலைத்து நாடகமாட எங்கு கற்றுக் கொண்டாள்? இந்த புத்தி எங்கிருந்து வந்தது? நம் தங்கை என நம்பியதற்கு தண்டனையாக எத்தகைய தவறை செய்ய வைத்து விட்டாள். ரிஷியை இனி எந்த முகத்துடன் பார்ப்பது?’ என பலவிதமாக யோசிக்க ஆரம்பித்தான் மலையரசன். மலையரசனுக்கு தங்கையின் மேல் வெறுப்பும், துவண்டிருக்கும் ரிஷியைப் பார்க்கையில் குற்றவுணர்வும் தோன்றியது. காலில் உள்ள பிசகை சரி செய்து பச்சிலை வைத்து கட்டிய தாத்தா மலையரசனைப் பார்த்து, “என்னடா, சும்மா மசமசன்னு நின்னுகிட்டுருக்கிற. ரிஷிக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சில்ல. அம்மாகிட்ட இருக்கிற ஆறின பாலை ரிஷிக்குக் கொடு.” என்றார். மலையரசன் கொடுத்த பாலை ரிஷி கையில் வாங்கவில்லை. சோர்வுடன் இருந்த ரிஷியின் வாயருகே பாலைக் கொண்டு சென்றபோது முகத்தைத் திருப்பிக் கொண்டான் ரிஷி. அப்பொழுதும் மலையரசன் மீண்டும் வ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 29

 திடீரென்று பெருவேகத்துடன் ஓடி வந்தவள் பெருங்குரலெடுத்து “காப்பாற்றுங்கள்” என கதற ஆரம்பித்தாள். ரிஷி அவள் வேகமாக ஓடி வருவதை உணர்ந்து டிரான்ஸ்மீட்டரை மரத்தின் ரகசிய இடத்தில் மறைத்து வைத்து விட்டு கீழே குதித்தான். ரிஷி, தன் தங்கையுடனான டிரான்ஸ்மீட்டர் பேச்சை, தேனரசி பிரச்சனை ஆக்குவாள் என எதிர்பார்த்தான். ஆனால், அவள் ‘காப்பாற்றுங்கள்’ என கதறியது அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. முதலில் ஓடி வந்தது மாயவன். மலையரசனால் வெளியே வர முடியாமல் கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். ரிஷி தாழ்பாள் போட்டிருந்தான். ஆடையும், அவளும் கலைந்து போய் அவளிட்ட கதறல் மாயவனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. அவன் ரிஷியை பிடித்து அடிக்க ஆரம்பிக்க, மற்றொருவன் மலையரசன் இருக்கும் குடிலை திறந்துவிட்டான். தன் தங்கையின் கோலத்தை கண்டான் மலையரசன். அவன் எதையும் யோசிக்கவில்லை. நேற்று இரவு இவ்வளவு சொல்லியும் தேனரசி மேல் கோபம் கொண்டு இவ்வளவு கீழ்தரமாக நடந்து கொண்டானா? என அவன் கை, காலை முறிக்கும் வேகத்தில் ரிஷியை அடிக்க ஆரம்பித்தான். அதற்குள் வேகமாக வந்த தாத்தா மலையரசனை நோக்கி, “நிறுத்து மலையரசா!” என்று ஆக்ரோஷத்துடன் கத்தினார்....

உன்னை விடமாட்டேன் – பகுதி 28

ரிஷி "ஆம். என்னுடைய பொய் கலந்த உண்மையை நிச்சயம் அவர் தொிந்து அதன்படி அவருடைய பேரனாகிய என்னை நம்புவார்.” என்றான் மிக்க உறுதியோடு. ரிஷி பொய் கலந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறான் என்பது மலையரசனுக்கு தெள்ளத் தெளிவாயிற்று அதை தாத்தா தொிந்து கொண்டுள்ளார் என்பதையும் ரிஷி தொிந்தே வைத்திருக்கிறான் என்பதும், தன்னை அவருடைய பேரன் என்றதும் மலையரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “டேய்! பாத்துடா. நாங்க நிறைய பேரப் பசங்க இருக்கோம்டா. தாத்தா எங்கள மறந்துறாம.” என்றான் மலையரசன். ஆனால், ரிஷி மௌனமாக, அழுத்தமாக இருந்தான். மலையரசன் அவனை அணைத்தபடி, “என் தங்கை குழந்தை மாதிரிடா! அவ உன்ன தப்பா புரிஞ்சிகிட்டத பொிசா எடுத்துக்காத” என்றான் மலையரசன். ரிஷி, “மலையரசா! நான் ஒரு அப்பாவியா இருந்திருந்தால், தாத்தாவைப் போல் ஒரு சரியான அனுபவசாலி இல்லாதிருந்தால் அவளால் நான் எப்படி பாதிக்கப்பட்டிருப்பேன்? அப்பாவிகள் யாரும் இருந்தால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள். இதனை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது” என்றான் ரிஷி. “இங்கே அது மாதிரியான தவறுகள் நடக்காது” என்றான் மலையரசன் ரிஷியை தட்டிக் கொடுத்தபடி. அவன் சாந்தமாகி உறங்கினான்....

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

 தாத்தாவிடம் தன் மனக்குழப்பத்தை தொிவித்தான் மலையரசன். “மலையரசா! மிளகு, உப்பை ரிஷி எடுத்திருக்கான். ஆனால், அசைவம் சாப்பிடறதுக்காக இல்லை. வேறு விஷயம் எதற்காகவோ எடுத்திருக்கான். அதுதான் எதுக்காக அப்படின்னு தொியல. ஆனா தேனரசி பாத்துட்டு தப்பா புரிஞ்சிகிட்டு, இப்படி நடந்துகிட்டா. ஆனா ரிஷிக்கு கோபம் வந்து மிளகு, உப்பை அவதான் எடுத்து அரைச்ச மாதிரியான வார்த்தைகளை சொல்ல ஆரம்பிச்சிட்டான். இளரத்தம். சட்டுன்னு கோபப்படுறான். ஆனா, எனக்கு எல்லோரும் குழந்தைங்கதானே? உன் தங்கை மேலதான் முதல் குத்தம். ஆராயாம ஒருத்தர அபாண்டம் சொல்லக்கூடாது. ரிஷி புத்திசாலி மட்டுமில்ல, நல்லவனும்தான். ஆனா அவன் போ்ல தப்பு இல்லாம குத்தம் சொன்னா அவன் நிச்சயமா சும்மா விட மாட்டான். அதான் அவள சந்தேகப்படும்படியான வார்த்தைகளை சொன்னான். அவன் கோபம் தீரட்டும்னுதான் தேனரசியக் கடுமையா பேசினேன். அவளும் குழந்தைதானே! அவளுக்கு அனுபவம் பத்தல. சட்டுன்னு சந்தேகப்பட்டுட்டா. ரிஷி கோபம் தீராமதான் நீ தங்கையை ஒருவழி பண்ணனுமின்னு உன்னய தூண்டி விட்டிருக்கான். வேற பயப்பட ஒண்ணுமில்ல. உன் தங்கை முட்டை எப்ப குஞ்சு பொரிச்சி வெளிய வருமுன்னு தினமும் அங...

உன்னை விடமாட்டேன் – பகுதி 26

Image
 ரிஷி தாத்தாவின் அறிவுக் கூர்மையை எண்ணி வியந்தான். ஆனால் தாத்தா தேனரசியின் மேல் காட்டிய கடுமை ரிஷிக்கு திருப்தி அளிக்கவில்லை. ‘அவள் தவறாக புரிந்து கொண்டதை இச்சிறு கண்டிப்புடன் விட்டு விட்டாரே. தன்னிடம் ‘என்ன’ என்று கூட கேட்காமல் அனைவரையும் அழைத்து எல்லோர் முன்பும் குற்றவாளி ஆக்க முற்பட்டதற்கு இந்த தண்டனை போதாது' என்று நினைத்தான் ரிஷி. மலையரசனிடம் தாழ்ந்த குரலில் ரிஷி, “என்னவோ கட்டுப்பாடு என்கிறீர்கள். உன் தங்கை என்னமோ இங்கு ரகசியமாக உப்பு, மிளகு அரைக்கிறாள். எதற்காக என்று ஏன் கேட்கவில்லை. தன்னைப் போல் பிறரை நினைப்பர் என்பார்கள். உன் தங்கை முட்டை இருப்பதை இங்கு வந்து பலமுறை பார்த்திருக்கிறாள். ஏன் உன் தங்கை முட்டையை சாப்பிட நினைத்து உப்பு, மிளகு அரைத்திருக்கக் கூடாது. ஓ... உன் தங்கை என்பதால் சந்தேகம் வராது. வெளியாள் என்றால் வரும் போலும்” என்றான் ரிஷி. மலையரசனும் ரிஷி ‘தான் இங்கு வந்ததில்லை’ என்று கூறியபோது ரிஷியின் இன்றைய காலடித் தடத்தை கண்டான். அப்போதே தங்கையின் பல நாட்களின் காலடித்தடத்தையும் பார்த்தான். உண்மையில் அவனுக்கு தங்கையின் மேல் சந்தேகம் வரவில்லை. ரிஷி இவ்வாறு கூறியதும் ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 25

Image
 ரிஷி அமைதியாக எழுந்து கைகட்டி நின்று நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான். முந்தி வந்த மலையரசனிடம், “அண்ணா! நான் அப்போதே சொன்னேன். வெளியாட்களை நம்பக் கூடாது என்று. பார்த்தாயா? இப்போ இந்த மரக்கூட்டிலுள்ள முட்டையைச் சாப்பிடப் பார்க்கிறான்” குற்றம் சாட்டினாள் தேனரசி. நிலைமையை சட்டென்று புரிந்து கொண்டான் ரிஷி. தேனரசிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எண்ணியவனின் கண்களில் மரத்தின் அருகிலுள்ள தேனரசியின் பாதச்சுவடுகள் தென்பட்டன. தேனரசி கூறியதை கேட்டவர்கள் ரிஷியை பார்க்க, அவன் “ம்... தப்பான தீர்ப்பு சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். என் தரப்பு நியாயத்தையும் கேட்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இந்த பக்கம் வந்ததும் இல்லை. வரத் தோன்றியதும் இல்லை. ஏதோ சத்தம் கேட்கவும் என்ன சப்தம் என்று அறியும் ஆர்வத்தில் இன்றுதான் வந்தேன். எனக்கு இங்கு தேனரசி இருப்பது தொியாது. யாரோ பயந்து மறைவது போல் சப்தம் கேட்டது. என்ன இங்கு இருக்கிறது என்று கல் மேல் உள்ளதைப் பார்த்தேன். பிறகு தேனரசி திடீரென்று கூக்குரலிட்டு கூப்பிட்டாள். இதுதான் நடந்தது. நான் இதுவரை பெண்கள் இருக்கும் சமையலறை பக்கம் சென்றது இ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 24

Image
 அன்றைய இரவும் மலையரசனுக்கு தொியாமல் ரிஷி முந்தைய நாள் போலவே தங்கையிடம் பேசினான். வேலை முடிந்து விட்டது. ஆனால், இங்கு வராமல், அங்கேயே மலையரசனிடம் ஆட்டம் போட்டுக் கொண்டும், விற்பயிற்சி எடுக்கப் போகிறேன் என்றும் கூறினால் கோபம் வராதா? “அண்ணா! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் அப்பாவிடம் என்ன சொல்லி சமாளிக்க? உனக்குதான் வில்வித்தை தொியுமே? அம்மா வேறு பாவம். நீ இல்லாமல் எனக்கு போர் அடிக்கிறது. ஒழுங்கு மரியாதையாக வந்து சோ்” மிரட்டினாள் தங்கை. அதற்கு ரிஷி, “வில் வித்தையில் இன்னும் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம். மேலும், என்னை பிடிக்கவே முடியாது என்பார் என் சீனியர். தப்ப வசதி இருந்தும் என்னை தப்ப விடாமல் மலையரசன் என்னை தடுத்த விதம் மிக அருமை. அவனிடம் மிகுந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது, மலையரசன் என்னைப் பிடிக்க ஆட்களை நிறுத்தி வைத்த இடங்கள் எனக்கு தீவிரவாதிகளை எப்படி பிடிக்க வேண்டும் என்பதில் உதவிகரமாக இருக்கும். அவனை வம்பிழுத்து நான் பலவற்றைக் கற்று கொண்டுதான் வருவேன்.” என்றான். தங்கை, தந்தையிடம் மாட்டி விடுவதாக மிரட்ட அவன் கைவினைப் பொருட்களைப் பற்றி கூறவும்,...