Posts

Showing posts from October, 2021

உன்னை விடமாட்டேன் – பகுதி 61

 விறகு அடுக்கி வைத்த இடத்தில் கிடத்திய சூர்யகலா மேனியில் அங்கங்கு திட்டு திட்டாக தடித்து சிவந்தது. ஒரு பக்கம் இரத்தமும் வழிந்தது. என்ன இப்படியும் பூ போல மேனி இருக்குமா எதையும் தாங்க மாட்டாள் போலிருக்கிறது என்று எண்ணியவாறு அவள் மயக்கத்தை தெளிவித்தான். அவள் சோர்வுடன் கண் திறந்தாள். சுற்றுப்புற சூழ்நிலை அவளை பயமுறுத்தியது. ஏன் இவன் நம்மை இங்கு வைத்துள்ளான் என புரியாமல் நடுங்கினாள். நடுக்கம் மேனியில் தெரிந்தது. மலையரசனுக்கு சிரிப்பாக இருந்தது. “ரிஷியின் தங்கை இவ்வளவு கோழையா?” வாய் விட்டு சிரித்தான். அவளோ பயந்து நடுங்கி எங்காவது ஓட முடியுமா? என்று பார்த்தாள். பயத்தால் அவள் கால்கள் கூட ஒத்துழைக்கவில்லை.  “உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்” என்று அவளுடைய பயத்தை தெளிவிக்க முயன்ற போது சிங்கராசா தாத்தாவின் குரல் கேட்டது. “மலையரசா! ஒரே சிரிப்பா இருக்கு. உள்ளே யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டார். ‘இவர் ஏன் இந்நேரத்தில் இங்கு வந்தார் எப்படி வந்தார்‘ என யோசித்தபடி வெளியே வந்தான் மலையரசன். தாத்தா மட்டுமல்ல வெளியே ஒரு கூட்டமே நின்றது. முல்லையரசி உள்ளே சென்று நடுங்கிய சூர்யகலாவை வெளியில் கூட்டி...

உன்னை விடமாட்டேன் – பகுதி 60

 பிரதீபாவிற்கு ‘இவள் யார்? எங்கிருந்து ரிஷி கூட்டிவந்தான்’ என்பது மர்மமாகவே இருந்தது. ‘இந்தப் பெண் மிகுந்த அழகுதான். ரிஷியை அழகால் மயக்குவது கடினம். அவன் குடும்பப் பராம்பரியத்தில் கட்டுப்பாடுகள் உண்டு. அவன் குடும்பம் திடீர் பணக்காரக் குடும்பம் கிடையாது. ராஜவம்ச பரம்பரையைச் சேர்ந்தது. வம்ச வாரிசு முக்கியம். தங்கள் வித்து வேறெங்கும் தோன்ற கூடாது என நினைப்பவர்கள். எத்தனையோ பெண்களிடம் சிக்காதவன் இந்தப் பெண்ணிடம் எப்படி சிக்கினான். அல்லது இவள் அவனிடம் சிக்கினாளா?’ என வியந்தாள் பிரதீபா. பிரதீபாவுக்கு ஆச்சரியத்துடன், அறிந்து கொள்ள ஆர்வம் மிகுந்தது. ‘யாரையோ தன்னை கவனிக்க அனுப்பியிருக்கிறான்’ என்பதை உணர்ந்த தேனரசி ‘ரிஷி எங்கே தெரியுமா?’ என எப்படி கேட்பது என்று அமைதியாக இருந்தாள். ஆனால் பிரதீபா கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள். தேனரசி கடுப்பாகி தூங்க ஆரம்பித்துவிட்டாள். பிரதீபா ‘ சரியான அழுத்தக்காரிதான். ஒரு வார்த்தை பேசமாட்டேன் என்கிறாளே! தீவிரவாதியைப் போலவே. ரிஷியிடமாவது பேசுவாளா? பேசாமலா பிள்ளையை வயிற்றில் சுமப்பாள். ஆக மொத்தத்தில் திமிர்பிடித்தவள். ரிஷியை விட பணக்காரியாக இருப்பாளோ. ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 59

 தந்தையை உடனடியாக தொடர்பு கொண்டு விபரம் கேட்டான் ரிஷி. “இப்படியாடா பிள்ளை இருப்பாய்? அவசரத்துக்குக் கூட தொடர்புகொள்ள முடியாமல்.” என்று எல்லை மீறிய ஆத்திரத்தைக் கொட்டி விட்டு விபரம் கூறினார். கைவினைப் பொருட்களை வாங்கச் சென்றபோது தங்கை காணாமல் போனது மனதை அதிர வைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இரவில் பெட்டியில் இருந்து எதையெதையோ கயிறு, பாதாள கொலுசு, கொக்கி போன்ற பொருட்களைப் பையில் எடுத்துச் செல்லும் கணவனை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் தேனரசி. போகும் போதாவது தன்னிடம் எதுவும் சொல்லுவான் என்று பார்த்திருந்தால் ஒன்றும் கூறாமல் காரியமே கண்ணாக போனில் பேசியபடி கிளம்பிச் சென்றுவிட்டான். தேனரசிக்கு மனம் வலித்தது. வெளிஅறையை பூட்டிவிட்டான். அவள் நடமாட பல அறைகள் இருந்தன. அவள் சங்கிலியால் பிணைக்கப்படவில்லை. ஆனாலும், அவளைப் பற்றி கவலைப்படாமல் திடீரென சென்று விட்டது அவளை மிகவும் பாதித்தது. இதேபோல் முன்பு போன் வந்த போது இரவு உடையுடன் வெளியே சென்றான். ஆனால் இப்பொழுது நிமிடத்தில் உடை மாற்றி எதை எதையோ எடுத்துப் போட்டுக்கொண்டு பையுடன் செல்கிறானே! தன்னைவிட்டு ரிஷி சொல்லாமல் கொள்ளாமல் வெகு தூரம் போகப்போவதாய...

உன்னை விடமாட்டேன் – பகுதி 58

 சுனிலிடம் சூர்யகலாவை கடத்த ஆட்டோவை எடுத்து வரச் சொல்லி பணத்தை நீட்டினான் மலையரசன். ஆனாலும், சுனில் அரண்டு விட்டான். ஐயையோ! பணக்கார இடம். அங்கு வேலையை காட்டினால் உன் கதி மட்டுமல்ல என் கதியும் அதோகதிதான். உயிருடன் இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. தீர்த்துக் கட்டிவிடுவார்கள் பேசவே மாட்டார்கள். செய்துவிடுவார்கள். மீண்டும் மற்றொரு பணக்கட்டை எடுத்துக் காட்டினான். “அடேங்கப்பா இவ்வளவு பணமா? கொஞ்சம் பொறு. என் நண்பனிடம் ஆட்டோ வாங்கி கொண்டு வந்து விடுகிறேன்.” என்றான். சுனிலின் மூளை வேகமாய் வேலை செய்தது. முன் ஏற்பாடு எல்லாம் கட கடவென முடித்து விட்டு மலையரசனுடன் சூர்யகலா காத்திருக்கும் ஹோட்டலுக்கு சென்றான். சூர்யகலா கார் டிரைவரிடம், “நான் சில கைவினைப்பொருட்களை வாங்க வேண்டும். காரில் சென்றால் அதிக விலை சொல்வார்கள். அதனால் நான் ஆட்டோவில் செல்கிறேன். நீங்க வீட்டுக்குப் போங்க. நான் ஆட்டோவில் போய் பொருட்களை வாங்கி விட்டு என் தோழி வீட்டுக்குச் சென்று விடுவேன். அங்கிருந்து நானே வந்துவிடுகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடுங்கள்.” என்றாள். அய்யய்யோ சின்ன ஐயா கோபித்துக்கொள்வார். நான் சற்று தொலைவில் ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 57

 வெளியே வந்த ரிஷியிடம் செக்யூரிட்டி, “சார்! ஆள் என்று தான் நினைக்கிறேன். முதலில் ஏதோ ஒரு மிருகம் என்று நினைத்தோம். ஆனால் காலடித்தடம் ஆள் எனக் காட்டுகிறது. எர்த் இருப்பதால் ஒன்றும் ஆகவில்லை. இல்லை என்றால் ஆள் ஸ்பாட்டிலேயே காலியாக இருப்பான். ‘மலையரசன் வந்துவிட்டானா?’ ரிஷியின் மனம் திடுக்குற்றது. சற்றுநேரம் செக்யூரிட்டியுடன் சேர்ந்து ஆளைத் தேடியவன் பிறகு காவலை அதிகரிக்கும்படியும், எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கூறினான். விடியும் வரை ரிஷி அங்கிருந்து நகரவே இல்லை. அவன் கண் பார்வை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தது. காட்டில் ரிஷியுடன் விளையாடியது மலையரசனுக்கு உதவிற்று எனக் கூறலாம். ஏனெனில் ரிஷி வந்தால் எப்படித் தேடுவான், எங்கு தேடுவான் என்பது மலையரசனுக்கு அத்துப்படி. அதனால் தப்பிவிட்டான். நடந்து வந்தாலும் இங்கு நுழைவது மிகவும் கடினம். உள்ளே நுழைவதே கடினம் என்றால் பங்களாவிற்குள் நுழைவது எப்படி? இது வேண்டாத வேலை என்று அதுவரை ஆடாமல் அசையாமல் ரிஷி போகும் வரை காத்திருந்தவன் பிறகு மீண்டும் பழைய இடத்திற்கு சென்று விட்டான். தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என எண்ணினான் மலையரசன். உண்ம...

உன்னை விடமாட்டேன் – பகுதி 55

 ரிஷிக்கும், தேனரசிக்கும் ஒரு போட்டா போட்டி நடந்தது. அவள் பாடத்தை அன்று சரியாக படித்துவிட்டால் அன்றிரவு ரிஷி அவளைத் தொடக்கூடாது. ஆனால் ரிஷி, அவளைத் தொடுவதற்காகவே அவளால் பாடத்தை படிக்க முடியாத அளவுக்கு அதிகரித்தான். அவள் எதிர்ப்பு தெரிவித்தால் மிகவும் கடின மொழியாக ஆங்கிலம், ஹிந்தி என்று சிறிதளவு கொடுத்தான். பல நாட்கள் ரிஷியே வெற்றிக்கொடி நாட்டினான். ரிஷி முன் போல் இல்லாமல் தற்போது ரசனையுடன் தன்னுடன் சேர்வது கண்டு பயந்தாள். அதனால் அவள் தப்பிப்பதற்கு மிகவும் கடுமையாக படித்தாள். விளைவு ஒரு பக்கம் அவள் படிப்பில் புலியாக மாறினாள். மற்றொரு பக்கம் தாயாகவும் ஆனாள். சுனிலின் பணத்தாசையை சமாளிக்க தன் கடையை வெவ்வேறு பணக்கார இடங்களில் பரப்பி பொருட்களை விற்றான். பொருட்கள் விற்றுத் தீர்ந்ததும் சுனிலுக்குக் கூட தெரியாமல் மாயவன், தென்னரசு இவர்களை தொடர்பு கொண்டு பொருட்களை எடுத்துவரச்செய்தான். சுனில் ஏதேனும் துருவிக் கேட்டாலும் மலையரசன் தங்களைப் பற்றிய உண்மையைக் கூறவில்லை. பிற்பாடு சுனில் பிடிபட்டால்கூட நம்மைப் பற்றி அவனுக்கு சொல்லத் தெரியக்கூடாது என நினைத்தான். வன அதிகாரியிடமும் ஆலோசனைக் கேட்டான். ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 56

 ரிஷி ஒரு நாள் மருத்துவர் என ஒருவனைக் கூட்டிவந்தான். தேனரசி எந்த மருத்துவ சோதனைக்கும் ஒத்துழைக்கவில்லை. ஆனால் மருத்துவர் தேனரசியை ஒரு பொருட்டாக மதிக்காமல் தன் வேலையை செய்தார். ரிஷியுடன் ஆங்கிலத்தில் நன்கு பேசினார். அவனுடன் பேசியபடி வெளியே சென்றார். அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆனால் சற்றுநேரத்திலேயே அவர் உள்ளே நுழைய முற்பட ரிஷி அவரைத் தடுத்தான். “டேய்! நீ செய்யும் இந்த வேலையை எல்லோரிடமும் சொல்லி விடுவேன் என்று தமிழில் மிரட்டினார். வேறுவழியின்றி ரிஷி வழி விட்டான். உள்ளே வந்தவன் தேனரசியிடம், “சிஸ்டர் நீங்க அவனோட ஒய்ஃப் அப்படின்னு எனக்கு தெரியாது. என்னை மன்னிச்சிடுங்க. சிஸ்டர்.” என்றான். ஒய்ஃப் என ஆங்கிலத்தைக் கலந்து பேசினாலும் அவள் புரிந்து கொண்டாள் தன்னை ரிஷியின் மனைவி என்கிறானே! ரிஷி அப்படியா சொன்னான். அவளுக்கு வியப்பாக இருந்தது. இருந்தாலும் அமைதியாக இருந்தாள். “ஏண்டா இவங்களை இந்த அறையில் வைத்திருக்கிறாய். இவங்க என்ன தீவிரவாதியா? கள்ளக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவங்களா? நானும் ஏதோ சட்டவிரோதமா தப்பு பண்ணவங்கன்னு நினைச்சிட்டேன். சங்கிலியில் இப்போது பிணைக்கவில்லை. ஆனால் சங்கிலி...

உன்னை விடமாட்டேன் – பகுதி 54

 மலையரசனுக்கு இருப்பு கொள்ளவில்லை. காலையில் 11 மணி வரை பொறுக்க முடியாமல் 10 மணிக்கே செக்யூரிட்டியிடம் வந்து நின்றான். காலையிலேயே சின்ன முதலாளி வந்து விட்டார். பிஸியாக உள்ளார் என்று நினைக்கிறேன். உன் விஷயமாய் இன்று எதுவும் பேசமுடியாது என்று நினைக்கிறேன். நீ சற்று பொறு. நானும் அவருடன் வேறுவிஷயமாக பேசவேண்டியுள்ளது.” என்று ஓர் ஓரமாக நிற்கவைத்துவிட்டார். மலையரசன், ரிஷி பங்களாவை விட்டு காரில் வெளியே வருவதற்காக இதய படபடப்புடன் மறைவில் காத்துக் கொண்டிருந்தான். . சீறிப்பாய்ந்த காரில் ரிஷியின் தங்கை எப்பொழுதும்போல் செல்வது தெரிந்தது. ஏகக் கடுப்புடன் மலையரசன் ரிஷியின் காரை எதிர்நோக்கியிருந்தான். அரை மணிநேரம் கடந்த பின் ரிஷியின் கார் வந்தது. ரிஷிக்காக கேட்டைத் திறந்த செக்யூரிட்டி, ”சார்! நீங்கள் சொன்னமாதிரி கொண்டை, கம்மல் மூக்குத்தி என போட்டுக் கொண்டு ஹெட் ஆபிஸின் கேட்டிற்கு பத்து நாட்களுக்கு முன்பு யாரோ இருவர் வந்திருந்தார்களாம். அவர்களை செக்யூரிட்டிகள் விரட்டிவிட்டனராம். அவர்கள் வந்திருந்த சிசிடிவி காமிரா பதிவை உங்களுக்கு எடுத்து வைக்கச் சொல்லியிருக்கிறேன் சார்” என்றார். ரிஷி “அப்படியா? ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 53

 ரிஷியின் கார் காலையிலேயே வருவதைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டைத் திறந்தார் செக்யூரிட்டி. அவரிடம் காரை சற்று நிறுத்தி, “பரத் யாராவது கொண்டை, வைத்துக் கொண்டு, காது, மூக்கில் எதையாவது மாட்டிகொண்டு வித்தியாசமாகத் திரிந்தால் என்னிடம் கண்டிப்பாக தகவல் சொல்லுங்கள்.” என்றான் ரிஷி. “ஏதாவது பிரச்சனையா? சார்.” என்றார் செக்யூரிட்டி. “அதெல்லாம் ஒன்றுமில்லை சிறு எச்சரிக்கை நடவடிக்கைதான். நம்ம ஹெட் ஆபிஸ் செக்யூரிட்டிகிட்டேயும் இன்பார்ம் பண்ணுங்க” என்றான் ரிஷி. “சரி சார்.” என்றார் செக்யூரிட்டி. “காட்டில் என்ன ஆயிற்று. திடீரென கட் செய்தாயே? என்ன விஷயம்?” என்று மறக்காமல் உள்ளே வந்த அண்ணனிடம் கேட்டாள் சூர்யகலா.. “அதுவா?. முக்கிய வேலை ஒன்று காவல்துறையில் இருந்து வந்தது. அதனால் கட் செய்துவிட்டு பேசினேன். அது விஷயமாய் காட்டைவிட்டு திடீரென்று வெளியேற வேண்டியதாயிற்று. அது விஷயமாய் தினமும் செல்லவேண்டியுள்ளது. இரவு கூட நம் வீட்டில் தங்க முடியாது. ஆபிஸ் வேலை என்று அப்பாவிடம் சமாளிக்கிறேன். நீயும் கை கொடு.” “என்ன வேலை அண்ணா!”  அவன் அளக்க ஆரம்பித்தான். இவள் கோணி பிடித்தாலும் நடுவில் கேள்வி மேல் கே...

உன்னை விடமாட்டேன் – பகுதி 52

 ரிஷி தன் தங்கையை வைத்துக்கொண்டு எங்கிருக்கிறான் என தெரியாமல் தவித்தான் மலையரசன். அவன், ‘ரிஷி வரும்போது தங்கையை அழைத்து வருவானா?’ என குழம்பி நின்றான். மனம் அலைமோதியது. ‘பெண்களிடம் தவறாய் நடப்பானோ? பெண்களை நம் முன் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தது நடிப்பாக இருக்குமோ.?’ “நிஜமா? என்ன நடந்தாலும் நான் உன் நண்பன்தானா? நல்லா, நிதானமா யோசிச்சு பதில் சொல்லு” புன்னகையுடன் கேட்ட ரிஷியின் முகம் நினைவுக்கு வந்தது. அதற்கு, தான் சொன்ன பதிலும் நினைவுக்கு வந்தது. மாயவனும், தென்னரசும் கைவினைப் பொருட்களுடன் வந்துசேர்ந்தனர். விலையை பல மடங்காய் உயர்த்தி விற்க முடிவு செய்தான் மலையரசன். நியாய விலை சொன்னால் இந்த பணக்கார ஏரியாவில் விரைவில் விற்றுவிடும். அது மட்டுமல்ல பொருளை திரும்பவும் எடுத்து வர திருநெல்வேலியில் உள்ள தங்கள் இருப்பிடம் செல்லவேண்டும். நேரம் விரயம். அவன் வியாபாரி அல்ல. செலவுக்கு பணம் சிறிது வந்தாலும் போதும் அன்றைய பொழுதை கழித்து விடலாம்.. அதனால் அவன் அநியாய விலையைத்தான் நிர்ணயித்தான். அவனுக்கு ஒரு நாளைக்கு ஒரே ஒரு பொருள் மட்டுமே விற்க வேண்டும். மனதில் கணக்கிட்டு செயல்படுத்தினான். விற்...

உன்னை விடமாட்டேன் – பகுதி 51

 அடுத்த நாள் அவளை வலுக்கட்டாயமாக எல்லா கடமைகளையும் செய்ய வைத்தவன் படிப்பதற்கு இன்னும் சில எழுத்துக்களை கொடுத்துவிட்டு தன் அன்றாட அலுவலை கவனித்தான் ரிஷி. தங்கையின் அழைப்பு வந்தது அவளிடம் ‘நாளை மறுநாள் வந்து விடுவேன்’ என்றான். அவள் அண்ணா, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அம்மாவிடம் உன்னுடைய செயலாளர், “முக்கியமான தொழிலதிபர் ஒருவர் சின்ன முதலாளியை சந்திக்க விரும்புகிறார். அப்பாயின்மென்ட் கொடுக்க வேண்டும். சின்ன முதலாளி எப்பொழுது வருவார் என தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு அம்மா, “பெற்ற தாய் எனக்கே அவனுடைய அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை. நீ என்னடாவென்றால் மற்றவர்களுடைய அப்பாயின்மென்ட் பற்றி கேட்கிறாய்” என்று போனை வைத்து விட்டார்கள்.” என்று கூறி கல கலவெனச் சிரித்தாள். “அண்ணா அங்கு என்ன பிரச்சனை என்று கேட்டாள். “ஏன்? ஏன் இப்படி கேட்கிறாய் சூர்யா.” “உன் குரலில் சற்று சோகம் தெரிகிறதே!” என்றாள். ‘தேனரசி விசயத்தில் தான் சோர்ந்து உள்ளதை தன் தங்கை கண்டுபிடித்துவிட்டாளே!’ மனதில் வியந்தவன் அதை மறைத்து , ‘ஒன்றுமில்லையே’ என்று சிரித்தான். “என் அண்ணனின் உண்மையான சிரிப்பு எனக்குத் தெரியும். நீ ஒன...

உன்னை விடமாட்டேன் – பகுதி 50

 வெற்றிகரமாக எழுத்தை எழுதி படித்த பின் ரிஷியிடம் தைரியமாக கொள்கைப்பிடிப்பைப் பற்றி கேட்க ஆரம்பித்தாள் அவனும் தன் அலுவல் வேலையை மூட்டை கட்டி வைத்துவிட்டு சொல்ல ஆரம்பித்தான். "நான் முதலில் சில கேள்விகளைக் கேட்பேன். நீ பதில் சொல்லிக்கொண்டே வா. பிறகு நான் சொல்ல வருவது உனக்கு புரியும் சரியா?" என்றான் ரிஷி. “முட்டையை நீ சாப்பிடுவாயா?” “இல்லை சாப்பிட மாட்டேன்.” “ஏன்?” “அந்த முட்டைக்குள் இருப்பது ஒரு உயிர். தெரியுமா உனக்கு?” “அப்படியா ஒரு உயிர் என்கிறாய். அதுதான் பிறக்கவே இல்லையே” “பிறக்காவிட்டாலும் அது உள்ளே உயிருடன் தான் இருக்கிறது. உருவாகி விட்டாலே அது உயிர் தானே. “எல்லா உயிருக்கும் அப்படித்தானா?” “ஆமாம் அப்படித்தான்.” “பிறகு பேச்சை மாற்ற மாட்டாயே. இந்தக் கொள்கை பிடிப்புடன் நிச்சயமாக இருக்கிறாயா?” “நான் ஒன்றும் பச்சோந்தி அல்ல. பேச்சை மாற்றுவதற்கு. “எல்லா உயிருக்கும் அப்படித்தான் என்றால் ஒரு உயிர் உன் வயிற்றில் உருவானால்... உனக்கு கரு உண்டானால் அதற்கும் அப்படித்தானே” “என்ன” என்று அதிர்ந்தாள் தேனரசி. “நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லையே உன் வயிற்றில் உண்டான கருவுக்கும...

உன்னை விடமாட்டேன் – பகுதி 49

 "என்ன செய்தோம்“ என யோசித்தாள். கடைசியாக “நான் தற்கொலைக்கு முயன்றேனே அதுதான் காரணமாக இருக்குமோ? அவனிடம் நாளை கண்டிப்பாக கேட்க வேண்டும்.” என்று நினைத்தாள். அடுத்த நாள் அதை மறக்காமல் அவனிடம் கேட்டாள். அவனும் ‘ஆமாம்’ என்று ஒத்துக்கொண்டான். தேனரசி தற்கொலைக்கு எந்த முயற்சியும் செய்யாமல் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாள். ஆனாலும் அன்று இரவு அவன் அவளிடம் நேற்று இரவு நடந்ததை தொடர்ந்தான் இம்முறை அவளுக்கு கோபம் வந்தது “நான் தான் தற்கொலைக்கு முயற்சியே செய்யவில்லையே. ஏன் என்னிடம் இவ்வாறு நடந்து கொள்கிறாய்?” என்று கேட்டாள். அவன் கூறினான் “உன்னுடைய கொள்கை பிடிப்பு பற்றி எனக்கு சந்தேகம் வந்துவிட்டதால் நான் அதைச் சோதனை செய்யப்போவதாக நேற்றைய இரவே கூறினேனே.” என்றான். “அது என்ன” என்று கேட்டாள் தேனரசி. “நாளை கூறுகிறேன்” என்று சொல்லிச் சென்று விட்டான். அவளுக்கு ஏகக் கடுப்பாயிற்று. ரிஷி தன் அறையில் படுத்துக் கொண்டு தேனரசியின் மனோநிலையைப் பற்றியும், தன் வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்தான் இவளை மணந்து கொள்ள முடியுமா? மணந்து கொண்டால் தன்னுடைய செல்வாக்கு பெருமளவில் சரியும். மணந்து கொள்ளாவிடில் இ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 48

 "நீ என்ன எனக்கு ஒருவனைப் பார்த்து மணமுடிப்பது? இந்த வெளி உலகத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் என்னை மணமுடிக்க வருவார்கள் என்று எனக்குத் தெரியும். இதைப்பற்றி நீ பேசாதே. ஒரு பெண்ணை பற்றி உனக்கு என்ன தெரியும்? பெண்ணின் மனதைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? உன் தங்கைக்கு இவ்வாறு நடந்தால் இப்படிப் பேசி இருப்பாயா?” என்று கண்களில் நீர் வடிய அதே கண்களில் அக்னியும் பறக்க பேசினாள். தன் தங்கையைப் பற்றி பேசியதும் ரிஷிக்கு கோபம் வந்தது. “நீ என்ன அவளை உன்னுடன் ஒப்பிடுகிறாய்? அவள் உன்னை போல் அல்ல. நீ அபாண்டமாக என் மேல் பழி சுமத்தியவள். என் தங்கை அப்படியல்ல.” தேனரசி இப்போது கேட்டாள், “நான் உன்மேல் அப்படி பழி சுமத்தியதற்காகவா என்னை கடத்தி வந்தாய்.” ‘ஆமாம்’ என்றான் ரிஷி. “நான் நீ மலைத்தேனுக்காக எங்கள் வாழ்க்கை முறைக்கு தீங்கு விளைவித்து விடுவாய் என்று எண்ணி அவ்வாறு உன்னை விரட்ட முயன்றேன். ஏனென்றால் நீ பணக்காரன். பணக்காரர்கள் எல்லாம் மிகவும் மோசமானவர்களாக இருப்பார்கள். பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதனால் நான் உன்னை விரட்டுவதற்காக அவ்வாறு நடந்தும் கொண்டேன். அதற்காகவா இப்படி செய்தாய...

உன்னை விடமாட்டேன் – பகுதி 47

 தேனரசிக்கு ரிஷி தன்மேல் ஆசைப்படவில்லை என்பது நன்கு தெரியும். ஏனெனில், முகத்தில் எச்சிலை உமிழ்ந்த அன்று கோபத்தில் எல்லை மீறினானே தவிர, பிறகு அவன் பார்வையில் கூட எல்லையை மீறவில்லை. அவன் பெண் பைத்தியம் இல்லை. பணப்பைத்தியம் என்று நினைத்தாள். அவன் மலைத்தேனுக்காக அவளைக் கடத்தவில்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்தக்காரணமும் பொய். வேண்டுமென்றே சீண்டுகிறானே. என்ன செய்வது? என்ன பேசுவது? என்று தெரியவில்லை. தற்கொலை மட்டுமே குறிக்கோளாய் கொண்டவள் தவித்தாள். பதிலுக்கு பதில் பேசியவளை வாயடைக்க வைத்த வெற்றிக் களிப்புடன் மணியைப் பார்த்தான் ரிஷி. காலை 11.45. மதிய சமையலை முடிக்க வேணடுமே! பரபரப்புடன் இயங்கினான். ரிஷி அவளை அழைத்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்தான். வெஜிடேபிள் பிரியாணிக்கு தேவையான காய்கறிகளை எல்லாம் நறுக்கினான். தேனரசிக்கு கண்ணில் பட்டது கத்தி தான். அதை எப்படியாவது எடுக்க வேண்டும் என எண்ணினாள். பிறகு அதை வைத்து தன் உடலில் எந்த பாகத்தில் குத்துவது என சிந்திக்க ஆரம்பித்தாள். ‘கழுத்தில், நெஞ்சில், வயிற்றில்… ஆம் அதுதான் சரி’ முடிவெடுத்தாள் தேனரசி. ரிஷி வேகமாக செய்தாலும...

உன்னை விடமாட்டேன் – பகுதி 46

 "அண்ணா! இன்னும் நான்கு நாட்களில் வந்துவிடுவாய் தானே?“ “இல்லை, இல்லை! இன்னும் ஆறு நாட்களாகும்.. சரியாகக் கணக்குப் போடத் தெரியவில்லையே உனக்கு.” “அண்ணா விளையாடாதே! உனக்கும் வேண்டாம். எனக்கும் வேண்டாம். ஐந்து நாட்கள். சரியா! அதை விடு. தினமும் போனில் பேசியவன், திடீரென்று கட் செய்தாயே! காட்டில் அன்று அங்கு என்ன பிரச்சினை சொல்” “நான் தான் வீட்டிற்கு வந்து சொல்கிறேன் என்றேனே!” “உனக்கு நேரம் கொடுத்தால் பொய்க்கதை தயார் செய்துவிடுவாய். திடீரென்று ஏன் காட்டில் இருந்து வந்து விட்டாய். அவர்கள் அனைவரும் நலம்தானே?“ “ஏன் திடீரென்று அப்படி கேட்கிறாய்?” “அண்ணா! நான் தான் கேள்வி கேட்பேன் நீதான் பதில் சொல்லவேண்டும் புரிந்ததா? “ம். எல்லோரும் நலம். அப்பாவுக்கு ...” என்றபடி வேறு கதைக்கு தாவ முயன்றான் “அண்ணா! வேறு கதை வேண்டாம்.” “சரி! சரி! சூர்யா எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அப்புறம் பேசுகிறேன். சரியா?” “அண்ணா! போனை வைத்து விடாதே| அப்புறம் இங்கு வரும் போது உன்னிடம் பேசவே மாட்டேன்.” “சரி! சரி! சீக்கிரம் சொல்.” “அதெல்லாம் முடியாது. நான் முக்கியமா? ஆபிஸ் முக்கியமா?” “நீதாம்மா முக்கியம். நீ தெய்வமாயி...