Posts

உன்னை விடமாட்டேன் – பகுதி 77

 தமையனிடம் பேசிக்கொண்டிருந்த தேனரசி கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறந்தாள். “இந்தாம்மா மூன்றுபேருக்கும் இரவு உணவு கொண்டுவந்திருக்கிறேன். நீ பார்த்துக் கொள்ளம்மா. மாப்பிள்ளை! சூர்யகலா எப்படி இருக்கிறாள்? கூட்டிக்கொண்டுவந்திருக்கக்கூடாதா?” தன்விழி நீரைக் கட்டுப்படுத்தியபடி பேசிய ரிஷியின் தாயாரிடம் தன் தாயைக் கண்டான் “அம்மா! கவலைப்படாதீர்கள். சூர்யகலா சுகமாக இருக்கிறாள். திரும்பவும் இங்கே வரும்போது கண்டிப்பாக கூட்டி வருகிறேன்.என்று கூறிவிட்டு, சூர்யகலா தாத்தாவுடன் சேர்ந்து பறவைகளுக்கு உணவளிப்பது, அங்குள்ள பெண்களுடன் விளையாட்டைக் கற்று விளையாடிக்கொண்டிருப்பது, பிறகு கைவினைப் பொருட்களை செய்து பார்த்துக் கொண்டிருப்பதையெல்லாம் விலாவாரியாக விவரித்தான் மலையரசன். அங்கு அவள் சந்தோஷமாய் ஒன்றி வாழ்கிறாள் என்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தாள். சரி சரி நேரமாகிவிட்டது. நீங்கள் இருவருமாய் சாப்பிடுங்கள் என்று சென்றுவிட்டார். என்ன இருவரா? என்று நினைத்தான் மலையரசன். மலையரசன் அப்போதுதான் கவனித்தான், ரிஷி தன்னுடன் சாப்பிடாமல் தனியே சாப்பிட்டு முடித்துவிட்டு, கம்யூட்டரில் வேலையைக் கவனிக்கிறான் என்று. அவன...

உன்னை விடமாட்டேன் – பகுதி 76

ரிஷியின் தாயார் காயத்ரி, முன்னே வந்து மலையரசனை வரவேற்றார். அவரிடம் மலையரசன் கோபமாக ஏதோ சொல்ல முயல ரிஷி “வாடா! தேனரசியைப் பார்க்கலாம்“ என்று தனது மாடிக்கு இழுத்துச் சென்றான். பிறகு அவனைவிட்டு விட்டு அறைக் கதவைத் தட்டினான். திறந்த தேனரசிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இருக்காதா பின்னே! மணி ஆறு தானே ஆயிற்று. அதற்குள் அருமைக் கணவன் வந்து விட்டானே! தன் கரங்களை அவன் கழுத்தில் மாலையாக போட்டபடி, “அத்தான்! இன்று வேலை சீக்கிரம் முடிந்துவிட்டதா?” என்றாள் உற்சாகத்துடன். “ஆமாம்.” என்றான் ரிஷி. தொடர்ந்து பின்னே வந்த மலையரசன் தேனரசியின் குரலைக் கேட்டுதான் அவளை அடையாளம் காண முடிந்தது. அவ்வளவு ஆடை அலங்காரம். தேனரசி பின்னால் வரும் ஆடவனைக் கண்டு பதறியவாறு தன் கரங்களை ரிஷியின் மேலிருந்து எடுத்தாள். ஆனால் ரிஷியோ அவளைத் தன்னைவிட்டு விலக அனுமதிக்கவில்லை. சேர்த்து அணைத்தான். “என்ன இது? கண்ட ஆண்களை நம் அறைக்குள் ஏன் கூட்டி வந்தீர்கள்“ கோபத்துடன் ரிஷியிடம் சிடுசிடுத்தாள் தேனரசி. “நான் முடியாது என்று தான் சொன்னேன். ஆனால் எனது தங்கையை பார்த்தே ஆகவேண்டும் என்று இவன் ஒற்றைக் காலில் நிற்கிறான். வேறு வழியின்றி கூ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 75

 மலையரசனுக்கு அந்தி வேளையா? இரவாகிவிட்டதா? என்பது கூடத் தெரியவில்லை. நடுவில் ஒரு சில குறிப்பிட்ட போன்களில் மட்டுமே ரிஷி பேசினான். அதுவும் செக்ரெட்டரி பேசிய பின். ஒரு வழியாக அந்த செக்ரெட்டரி ஒரு பெட்டியில் பைல்களை அடுக்கிவைத்தார். பென் டிரைவ் போன்ற வேறு சில பொருட்களையும் வைத்தார். கடைசியில் ரிஷி கொடுத்த பைலையும் அதில் வைத்து மூடினார். அங்கிருந்து செக்ரெட்டரி கிளம்பிவிட்டார். ‘அப்பாடியோ’ என்றிருந்தது மலையரசனுக்கு. இந்த ஆள் கிளம்பிவிட்டால் ரிஷியும் கிளம்புவான் எனத் தோன்றியது மலையரசனுக்கு. ரிஷி இருப்பிடத்திலிருந்து எழுந்து மலையரசனைப் பார்த்தான். பிறகு வெளியே கதவைத் திறந்து போக முயன்ற செக்ரெட்டரியிடம் ஏதோ ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு அருகிலுள்ள ஓர் அறைக்குள் போய்விட்டான். எப்படியிருந்தாலும் ரிஷி வருவான் என காத்திருக்கும்போது திடீரென இருவர் வந்து மலையரசனை தலை முதற்கொண்டு நாகரீகமாக மாற்றி, ஆடைகளைக் கழட்டி தாங்கள் கொண்டுவந்த ஆடைகளை அவனுக்கு அணிவிக்க முயன்றனர். அவன் முரண்டுபிடிக்க சத்தம் கேட்டு முகத்தில் சோப்பு நுரையோடு வந்த ரிஷி, “தங்கச்சியப் பார்க்கணுமா, வேண்டாமா?” என்று கூற அமைதியாய் ஒத்த...

உன்னை விடமாட்டேன் – பகுதி 74

முன்பு ஏற்பட்ட தாமதத்தைச் சீர்செய்யும் வகையில் துரிதமாக பைலை பார்வையிட்டு செக்ரெட்டரியிடம் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தான் ரிஷி. அவரும் அதற்கேற்ப துரிதமாக மற்றவர்களை இயங்க வைத்துக் கொண்டிருந்தார். ரிஷியைப் பார்க்க நிறைய பேர் காத்துக்கொண்டிருப்பதும் என்ன விஷயம் என செக்ரெட்டரியிடம் விசாரித்து பல பேரை சந்திக்காமலே அவர்களின் தேவையை, வேண்டுகோளை மறுத்தோ, பூர்த்தி செய்தோ அனுப்புகிறான் என்பது மலையரசனுக்குப் புரிந்தது. ஆனால் ரிஷியைக் காண எதற்காக வருகிறார்கள், என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை. யாரோ ஒருவர் வந்தபோது மட்டும் சிறிது அளவோடு புன்னகைத்து கை குலுக்கினான் ரிஷி. பிறகு அதிகாரத் தோரணையுடன் நிதானமாக ரிஷி ஆங்கிலத்தில் சீரியசாக பேசிக்கொண்டிருந்தான். ரிஷியை பார்க்க வந்தவர் முதலில் மலையரசனை விசித்திரமாக பார்த்து விட்டு ரிஷியின் பேச்சில் ஆழ்ந்து போனார். அவர் ரிஷி சொன்னதெற்கெல்லாம் இளித்தபடி சரி சரி என்கிறார் என்பது மலையரனுக்குப் புரிந்தது. எழுந்து போக மனமில்லாமல் அமர்ந்திருந்தவரிடத்தில் அவ்வளவு தான் விஷயம் என தன் தலையசைப்பால் அவரை வெளியேற வைப்பதையும் பார்த்தான். பார்க்க...

உன்னை விடமாட்டேன் – பகுதி 73

 ரிஷி வருவதை கவனிக்காத தலைமை நிர்வாகி “அவர் என்ன உன் வீட்டுவேலைக்காரனா? நாயே! பேரை மரியாதையில்லாமல் சொல்லுகிறாய் போதாக்குறைக்கு அவன் இவன் என்று பேசுகிறாய்?” என்று கூறியடி மலையரசன் கன்னத்தில் திடீரென்று அறைய, ரிஷி வந்து பொதுமேலாளரான வர்மாவின் கன்னத்தில் பதிலுக்கு அறைய அலுவலகத்தில் பெரும் நிசப்தம் நிலவியது. மலையரசனை மேற்கொண்டு முன்னேறி உள்ளே வராமல் தடுக்க முற்பட்டவர்களும், தலைமை நிர்வாகிக்கு துணையாக வந்தவர்களும் அதிர்ச்சியுடன் பின் வாங்கினார்கள். “சார்” என்றார் தலைமை நிர்வாகி அதிர்ச்சியுடன். “நீங்க உங்க பொஸிஸன விட்டு ஏன் கீழே இறங்கினீங்க மிஸ்டர். வர்மா. பொதுமேலாளரிடமோ அல்லது செக்யூரிட்டிகிட்டேயோ இவன் எப்படி உள்ளே வந்தான்னு விசாரிச்சு, கவனிக்க சொல்லவேண்டியது தானே?. கரெக்டா ப்ரொஸிஜரை பாலோ பண்ணியிருந்தா நான் தான் அவனை உள்ளே வர விட்டேன்னு தெரிஞ்சிருக்கும். தலைமை நிர்வாகியாக இருக்க உங்களுக்கு தகுதி இருக்கான்னு முதல்ல யோசிங்க.” என ஆங்கிலத்தில் அவரைச் சாடினான் ரிஷி. “சாரி சார். மரியாதையில்லாம உங்க பேர் சொல்லி கூப்பிட்டதை கேட்டதால கோபப்பட்டுடேன். சாரி சார்” என்றார் தலைமை நிர்வாகி அடிவாங்கி...

உன்னை விடமாட்டேன் – பகுதி 72

 தந்தை மலேசியா போய் இரண்டு நாட்களாகி விட்டன. முழு வேலையும் ரிஷியின் தலையில். முக்கியமான பைல்களை கவனமாக ஆராய்ந்து முடிவெடுத்துக் கொண்டிருந்தான். அவனின் குறிக்கோள் தற்போதைய மலேசியா மற்றும் இதர முக்கிய வேலைகளை முடித்து விட்டு இன்னும் அதிகப்படியாக வேலை செய்து தந்தை வரும் போது அவருக்கு முக்கிய வேலை இல்லாமல் சற்று ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த ஓய்வின்போது எப்படியாவது நடந்தவைகளைக் கூறி இரு திருமணங்களையும் அங்கீகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே! “சார் செக்யூரிட்டிகிட்ட இருந்து போன்.” என்ற செக்ரெட்டரியிடம் எரிச்சலுடன் “இதையெல்லாம் நீங்களே பார்க்கக் கூடாதா.?” என்றான் ரிஷி. “நீங்கள்தான் பேச சொன்னதாக சொன்னார் சார்.” உடனே போனை வாங்கி “ஹலோ” என்றான் ரிஷி. “சார் நீங்க சொன்ன மாதிரி காதுல கடுக்கனும், மூக்கில வளையமும் இருக்கு.. கொண்டை போட போதுமான முடி இல்ல. ‘.உள்ளே அனுப்பு. ரிஷியை பார்க்கணும்’ன்னு மரியாதையே இல்லாம உங்க பேரை சொல்றான் சார். ஏன் பார்க்கணும்னா அதெல்லாம் ரிஷிக்கு தெரியும்னு தெனாவெட்டா பேசுறான் சார். உள்ளே அனுப்பவா விரட்டிவிடவா? சார்.” செக்யூரிட்டி பேசும்போதே ரிஷி அவசர அவசரமாய் தன் விலையுயர்ந...

உன்னை விடமாட்டேன் – பகுதி 71

 தனக்கு பதிலாய் தந்தையை மலேசியா அனுப்ப முயற்சித்தான் ரிஷி. “வேறு யாரையும் அனுப்பினால் சொதப்பி விடுவார்கள் அப்பா.” “உண்மைதான் ரிஷி. நாம்தான் பொறுப்புடன் கவனிப்போம். ஆனால் சூர்யகலாவைப் பார்க்காமல் எப்படி போவது? இங்கு இப்படி ஒரு பிரச்சினை ஓடும்போது நான் அங்கே என்ன செய்ய முடியும்.” “அப்பா! தொழில் வேறு. குடும்பம் வேறு. என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே' அவள் என் தங்கை. நான் பார்த்துக் கொள்கிறேன்.” “எனக்குத் தெரியும் ரிஷி, நீ மிக்க திறமைசாலி என்று. நீ நினைத்தால் சூர்யகலாவையும், மாப்பிள்ளையையும் அழைத்து வந்திருக்கலாம். ஆனால் நடுவில் நீ என்ன கோல்மால் செய்கிறாயோ? யாருக்குத் தெரியும்? திறமை இருந்து படிப்பு...” “அப்பா இதில் நீங்கள் கையெழுத்திட வேண்டுமே. நான் படித்துவிட்டேன். எல்லாம் சரியாக இருக்கிறது. ஒரு முறை நீங்களும் படித்து விடுங்களேன்.” “இப்படியே பேச்சை திசைதிருப்பி என்னை ஏமாற்றுடா!” “இல்லையப்பா. நீங்கள் கையெழுத்திட்டால்தான் மேற்கொண்டு நமது செயலாளர்கள் செய்யவேண்டியதைச் செய்ய முடியும். இப்பொழுதே தாமதம்தானேப்பா” வேறு வழியின்றி தொழிலில் கவனம் பதித்தார் தந்தை. தேனரசி ரிஷியின் வரவுக்காக ஆவலு...

உன்னை விடமாட்டேன் – பகுதி 70

 சுனையில் அவன் அண்ணன் நீச்சல் தெரியாதது போல் மூழ்கி நடித்ததையும், எல்லோரும் விழுந்து விழுந்து அவனைத் தேடியதையும் கூறினான் மலையரசன். “ஓ...அதுதான் எனக்குத் தெரியுமே! அண்ணன் என்னிடம் சொல்லிவிட்டானே!” பயம் விலகி சகஜமாய் பழக ஆரம்பித்தாள் சூர்யகலா. அவள் .குளிக்க மறைவிடத்தை தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவன் மற்றொரு இடத்தில் குளித்தான். பிறகு மலையரசன் காதில் கடுக்கனையும், மூக்குத்தியையும் மாட்டிக்கொண்டான். அவள் அதை போடக்கூடாது என்றாள். “நான் சிறுவயதிலிருந்து போடுகிறேன். போடாமல் முடியாது” என்றான் மலையரசன். “சரி! சரி! போட்டுக்கொள்ளுங்கள்” என்றாள் சோகமுடன். “எனக்குப் புரிகிறது சூர்யா. ஆனால் இங்கு இது தானே வழக்கம்.” “அங்கேயும் இப்போது இந்த வழக்கம்தான். அதனால்தான் சரி என்று விட்டுவிடுகிறேன்” என்றாள் சூர்யகலா. ரிஷிக்கும் தேனரசிக்கும் நடந்த மோதல்களைக் கூறினான். இதை அண்ணன் கூறவேயில்லையே என்று கேட்டுக்கொண்டாள். தான் அங்கு தேனரசியைத் தேடி வந்தது முதற்கொண்டு சூர்யகலாவைக் கடத்திய கதை வரை சொன்னான். ஆர்வமுடன் கேட்டுக்கொண்டே வந்தாள் சூர்யகலா.   மலையரசனிடம் இருந்த முழுபயமும் விலகியது. அவனைத் தவறாக நின...

உன்னை விடமாட்டேன் – பகுதி 69

 மலையரசன் இருக்கும் குடிலுக்கு பாலைக் கொடுத்து சூர்ய கலாவை உள்ளே அனுப்பினார்கள். அவளோ பயமாய் இருக்கிறது. நான் போக மாட்டேன் என அழ ஆரம்பித்து விட்டாள். பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க தாத்தா வந்தார். “ஏம்மா தாத்தாவைப் பார்த்தா பயமா இருக்கா?” “இல்ல தாத்தா!” “சரி என் கூட வா” என்று மலையரசன் இருக்கும் குடிலினுள் கூட்டிச்சென்றார். கட்டிலில் சூர்யகலாவை சீண்டும் ஆவலில் அமர்ந்து கொண்டு இருந்தவன், தாத்தாவைக் கண்டு திகைத்து எழுந்தான். மலையரசன் காலில் சூர்யகலாவை விழச் சொன்னார். விழுந்தாள். “பாலை அவனிடம் கொடுத்து பாதியைக் குடித்து மீதியை உனக்குக் கொடுக்கச் சொல்” என்றார். சூர்யகலா மனதுள் 'அய்யய்யோ மறுபடியும் எச்சில் பாலைக் குடிக்க வேண்டுமா?' என எண்ணியபடி தாத்தா கூறியதைச் சொல்லி கொடுத்தாள். அவன் குடித்துவிட்டு மீதியைக் கொடுக்க வாங்கி விட்டு தாத்தாவைப் பார்க்க “குடிம்மா” என்றார் சிரித்தபடி. வேறு வழியின்றி அந்தப் பாலைக் குடித்தாள். “சரிம்மா ஒன்னும் பிரச்சினை இல்ல. நீ கட்டில்ல படுத்து தூங்கு” என்றார். தயங்கி நின்றவளை எப்படியும் இரவு முழுக்க தூங்காம இருக்க முடியுமா? சொல்லு. படும்மா. என...

உன்னை விடமாட்டேன் – பகுதி 68

 காடு, மலை தாண்டி காரை ஓட்டியபடி ரிஷி தாய், தந்தையரிடம் பேசினான். விபரம் கேட்ட அவர்களுக்கு “சூர்யகலா ஒருவனை காதலித்து மணந்துகொண்டாள்” என்று கூறினான். பெற்றவர்களால் நம்பமுடியவில்லை “நாம் தொழில் வட்டாரத்தில் பயிற்சி கொடுத்து அவளுக்கு பார்த்து வைத்திருக்கும் வரன்களில் யாரையாவது மணமுடித்துவிடுவோம் என்று பயந்து மணம் செய்து கொண்டாள். அவளுக்கு பிடித்தபடி கைவினைப்பொருள் தயாரிப்புடன் தொடர்பு கொண்டவனைதான் மணந்து கொண்டுள்ளாள்.” என நம்பும்படி அளந்து விட்டு 'அங்கு திருமணம் முடித்துவிட்டது. அவர்களை வீட்டிற்கு அழைத்தேன். பயப்படுகிறார்கள். இரண்டு மாதங்கள் கழித்து வருகிறோம் என்கிறார்கள். மாப்பிள்ளை அம்சமாக உள்ளான். ஆனால் படிப்பு இல்லை. மிக்க திறமைசாலி' என அவர்களுக்கேற்றவாறு பொறுமையாய் பதில் கூறினான். மேலும் “ஓரிரு நாட்களில் நான் வந்துவிடுகிறேன்.” என்றான் ரிஷி. “ஏண்டா மலேசிய தொழிலதிபர் மாநாட்டுக்குத்தான் போகமாட்டேன் என்று சொன்னாய். அதற்குரிய வேலையாவது பார்க்க வேண்டும்தானே. என்னடா இது தொழிலை...” “அப்பா நான் ஒரே நாளில் வந்துவிடுகிறேன் நாளை நிச்சயம் அங்கு இருக்கிறேன்” என்று சமாதானப்படுத்தினான். போ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 67

 'திருமணத்தை ஒத்துக்கொண்டுவிட்டான். தங்கையை இங்கேயே விட்டு விட முடிவு செய்து விட்டான். இனி விட்டால் பறந்து விடுவான். இனி நாம தலையிடாமல் இருக்க முடியாது.' என சட்டென்று முடிவெடுத்து ”ரிஷி! பொறு. தேனரசியை நான் பார்க்க வேண்டுமே!” என்றார் சிங்கராசா தாத்தா. “தாத்தா உண்மையில் நேரமாகிறது வேலை நிறைய இருக்கிறது. வேலையை முடித்துவிட்டு வருகிறேன்.” “டேய் நில்லுடா. உதைபடுவ.” நின்றான் ரிஷி. “எங்கே என்கிட்ட சொல்லு. உண்மையில் யாருக்கும் தெரியாம உங்கம்மாகிட்ட தேனரசியை விட்டிருக்கிறாயா?” “தாத்தா! ப்ளீஸ் நான் கண்டிப்பா உங்க கிட்ட தேனரசியக் கூட்டிட்டு வருவேன். அவகிட்ட விபரம் கேட்டுக்குங்க. இப்ப என்னை போகவிடுங்க.” “நான் உன்கிட்ட கெஞ்சனும்னா கெஞ்சறேன் ரிஷி.” என்று தாத்தா கூறினார். ரிஷி தாத்தாவின் கால் அருகே வந்து முட்டியிட்டு காலில் விழுந்து விட்டான். “என்ன வார்த்தை சொல்லிட்டீங்க தாத்தா! உங்க பேரன் கெட்டவன் இல்ல. தேனரசி என் பொறுப்பு. மலையரசன் என் தங்கைய கூட்டிட்டு வந்தான். இதோ பாருங்க.” சூர்யகலாவை பிடித்திழுத்து தாத்தா முன் நிறுத்தினான். “அவள் உடம்பெல்லாம் பாருங்க. இதோ கையில் இரத்தம் கூட வந்திருக்க...

உன்னை விடமாட்டேன் – பகுதி 66

 "இங்கே பார் ரிஷி, என் தங்கையை அங்கு வந்து ஆறு மாதங்களாக தேடி பார்க்க முடியவில்லை. புளியமரத்தில் ஒரு கொப்புல இருக்கிற புளியங்காய் எட்டலன்னா நாங்க என்ன செய்வோம்னா அடுத்த கொப்பை பிடித்து இழுப்போம். அப்போ எட்டாம இருக்கிற புளியங்காய் தன்னால பக்கத்துல வந்துடும். உன்னைப்போல.” என்றான் மலையரசன் வேண்டுமென்றே ரிஷியை சீண்டுவதற்காக. “ஹேய் நான் யாருக்கும் எட்டாதவன் கிடையாது. என்னைப் பார்க்கணும்னு செக்யூரிட்டிங்ககிட்ட சொன்னா நிச்சயம் என்னை நீ பார்த்திருக்கலாம். உன் தங்கை எங்கே? என்று என்னிடம் கேட்டிருக்கலாம். எல்லாத்தையும் விட்டுட்டு என் தங்கையை ஏன் கடத்தினாய்?” நடுவில் புகுந்த மாயவன் “மலையரசா! வெளியாளுங்க பேச்சுல சாகசக்காரங்க டோய். பாத்தியா? முதல்ல பொட்டப்புள்ளய கடத்தின அவன் உத்தமன் மாதிரியும் .....” “மாயவா நான் உன்கிட்ட பேசல. மலையரசா சொல்லு.” என்றான் ரிஷி. “நான் வருவேன்னு உனக்குக் கண்டிப்பா தெரியும். ஏன் உன் செக்யூரிட்டிக்கிட்ட அவன் என் நண்பன் மரியாதையா உள்ள அழைச்சுட்டு வாங்க அப்படின்னு சொல்லியிருக்கலாம்ல. அதைவிட்டுட்டு எர்த்தை வைச்சேன்னு பேசுற நீ!” “நீ கண்டுபிடிச்சி வருவேன்னு என்ன நிச்சயம்? ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 65

மலையரசா! என் தங்கையை ஏன் கடத்திவந்தாய்?” கைகட்டியபடி நிதானமாக கேட்டான் ரிஷி. சூர்யகலா குடிலில் இருந்து அங்கிருந்த ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தாள். அவள் மட்டுமா பார்த்தாள். பெண்கள் கூட்டமும் ஆர்வமுடன் தேனரசியைப் பற்றி தெரிந்துகொள்ள குடிலுக்கு வெளியே குழுமியிருந்தது. “என் தங்கையை நீ கடத்தி போகவில்லையா?” என்றான் மலையரசன். “உன் தங்கை என்னிடம் என்ன தவறு செய்தாள் என்று உனக்குத் தெரியாதா? என் தங்கை உன்னிடம் என்ன தவறைச் செய்தாள் என்று கடத்திவந்தாய்?” நடுவில் பேச முயன்ற அனைவரையும் தடுத்தார் சிங்கராசா தாத்தா. சூர்யகலா மலையரசன் கூறியதையும், அதற்கு அண்ணன் கூறிய பதிலையும் கேட்டு அதிர்ந்தாள். ‘இது உண்மையா? அண்ணனா? அண்ணன் பெண்களிடம் தவறாக நடப்பவன் அல்லவே? என்ன கூத்து இது? ஒரு வேளை, அதனால்தான் அண்ணன் தன்னைக் கடத்தி வந்த மலையரசனை ஒன்றும் செய்யவில்லையா? இப்பொழுதுகூட அண்ணன் சிறிது கூட கோபத்துடன் கேட்கவில்லையே?’ என எண்ணினாள் சூர்யகலா . “என் தங்கை தப்பு செஞ்சா இங்கேயே தலையை வெட்டிப்போட்டுட்டு போயிருந்தாக் கூட பரவாயில்லை. நீ எப்படி ஒரு பொட்டப்புள்ளய கடத்திட்டு போகலாம். இனி யார் அவளைக் கல்யாணம் பண்ணிப்பா?...

உன்னை விடமாட்டேன் – பகுதி 64

 தன்னை பற்றி ரிஷி அவனுடைய தங்கையிடம் மிக உயர்வாகக் கூறி கொண்டிருந்ததை தன் காதால் கேட்டு ஆச்சரியப்பட்டு விட்டான் மலையரசன். 'ஒருவேளை தான் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்துவிட்டானோ? அதனால் அப்படி பேசுகிறானோ?’ என சந்தேகப்பட்டான் மலையரசன்.  “அண்ணா! நீ காட்டுக்குள் தங்கியிருந்த போது தினமும் இரவு ரகசியமாக என்னிடம் பேசினாயே! அதே போல்தான் இப்போதும் உயர்வாக பேசுகிறாய். அம்மாதிரி நீ முன்பு பேசும் போது நான் என்ன தெரியுமா நினைத்தேன். அங்கு பிறந்திருக்கலாமோ? மிகவும் சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம் என நினைத்தேன். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வாயில் மற்றொன்றை பேசுபவர்களோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்காது எனத் தோன்றியது. ஆனால், பொய் சொல்லி என்னைக் கடத்தியவனை நீ ஏன் நல்லவன் என்று கூறி வக்காலத்து வாங்குகிறாய். எனக்குப் புரியவில்லை.” ரிஷி ஒரு நிமிடம் மௌனமானான். பிறகு, “சூர்யா குட்டி நான் அவனைப் பற்றி சொன்னதெல்லாம் உண்மை என வைத்துக்கொண்டால் உன் முடிவு என்னவாக இருக்கும்.” என்று கேட்டான் ரிஷி. “என்னண்ணா? இது கற்பனை?...” “நான் கேட்டதற்கு பதில் சொல்லும்மா” “நிச்சயம் சந்தோஷமாக வாழ்ந்திருப்பேன். அப்பாவோடு அங்கு ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 63

 தென்னரசுக்கு சந்தேகம். ரிஷி தந்திரமானவன். தேனரசியை கொண்டு வந்துவிடாமல் நைசாக தன் தங்கையைக் கூட்டிச் சென்றுவிட்டால், கிடைத்த ஒரு வாய்ப்பும் போய்விடுமே. அவனுக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு அங்கு சந்தேகம் வர ரிஷியைத் தடுக்க முயன்றனர். சிங்கராசா தாத்தா, “ ம்... அவங்க போகட்டும். மலையரசா! நீயும், மாயவனும் அவங்களுக்குத் துணையா போயிட்டு வாங்க.” என்றார். மலையரசன் கண் அசைவில் சிலர் தொலைவில் காவலாய் நின்றனர். பலத்த காவல் அங்கு உருவாகியது. சிறு அசைவையும் விடாது கவனிக்கும் ரிஷி, சுற்றுப்புறத்தையே மறந்தான். இப்பொழுது ஒருமுகமாய் மாலுச்சாமியை நினைத்துக்கொண்டு நடந்தான். கோயிலினுள் நுழைந்த அவன் “ஸ்வாமி! செய்த வினைக்கு பலன் உண்டு என நான் கேட்டது போலவே உடனடியாக என் உச்சந்தலையில் ஆணி அடித்தார்போல் காட்டி விட்டாய் ஸ்வாமி! என்னால் தாங்க முடியவில்லையே! என் தங்கையின் வாழ்வு என்னாவது? அம்மாவுக்கு எப்படியும் விஷயம் தெரிந்துவிடும். வேறு கல்யாணத்தை நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். தந்தையார் வேறு திருமணம் நடத்த வேண்டும் என்று நடத்தியே தீருவார். குடும்பத்தில் குழப்பம்தான் மிஞ்சும். இனி மகிழ்வுக்கு இடமில்லையா? தேன...

உன்னை விடமாட்டேன் – பகுதி 62

 ஆக்ரோஷமாக, “அண்ணா உன் நண்பன் மலையரசன் மிகவும் நல்லவன் என்றாயே? ஏற்கனவே அவன் பணத்தாசை பிடித்து கைவினைப்பொருட்களை மிக அதிக விலைக்கு விற்றுக்கொண்டிருந்தான். இவன் தான் மலையரசன் என்பதை மறைத்து நாடகமாடி என்னைக் கடத்தி வந்துவிட்டான். இந்த தாத்தா ஏதோ இரண்டு நாட்களாய் மலையரசனுடன் இருந்ததாய்க் கூறி நம் சொத்துக்கு ஆசைப்பட்டு சீக்கிரமாய் நீ வரும் முன்பு திருமணத்தை முடித்துவிட்டார். விசாரிக்கக்கூட இல்லை. இவர்களுக்கெல்லாம் ஒரு பெண்ணை வைத்து விளையாட என்ன துணிச்சல். கேட்க யாரும் இல்லை என்று தானே! இவர்களையெல்லாம் சும்மா விடாதே! அண்ணா! உன்னிடம் துப்பாக்கி இருக்குமே! இந்த மலையரசனைக் கொன்றுவிடு, கொன்றுவிடு“ கண்களில் நீர் வழிய அதே கண்களில் கோபத்தில் அனல் பறக்கக் கூறினாள் சூர்யகலா. ரிஷிக்கு தன்னையறியாமல் தேனரசி இதேபோல் ஆக்ரோஷமாய் பேசியது நினைவுக்கு வந்தது. அவள் கைகாட்டிய இடத்தில் கொண்டை, கடுக்கன் வளையம் ஏதுமில்லாமல் மலையரசன் நின்றுகொண்டிருந்தான். ரிஷியைப் பார்த்ததுமே அவன் முகத்தில் மௌனமான புன்னகை நன்கு அரும்பியது. அந்தப் புன்னகை, “பார்த்தாயா உன்னை எப்படி வர வைத்துவிட்டேன்.” என்பதுபோல் இருந்தது. ரிஷ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 61

 விறகு அடுக்கி வைத்த இடத்தில் கிடத்திய சூர்யகலா மேனியில் அங்கங்கு திட்டு திட்டாக தடித்து சிவந்தது. ஒரு பக்கம் இரத்தமும் வழிந்தது. என்ன இப்படியும் பூ போல மேனி இருக்குமா எதையும் தாங்க மாட்டாள் போலிருக்கிறது என்று எண்ணியவாறு அவள் மயக்கத்தை தெளிவித்தான். அவள் சோர்வுடன் கண் திறந்தாள். சுற்றுப்புற சூழ்நிலை அவளை பயமுறுத்தியது. ஏன் இவன் நம்மை இங்கு வைத்துள்ளான் என புரியாமல் நடுங்கினாள். நடுக்கம் மேனியில் தெரிந்தது. மலையரசனுக்கு சிரிப்பாக இருந்தது. “ரிஷியின் தங்கை இவ்வளவு கோழையா?” வாய் விட்டு சிரித்தான். அவளோ பயந்து நடுங்கி எங்காவது ஓட முடியுமா? என்று பார்த்தாள். பயத்தால் அவள் கால்கள் கூட ஒத்துழைக்கவில்லை.  “உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்” என்று அவளுடைய பயத்தை தெளிவிக்க முயன்ற போது சிங்கராசா தாத்தாவின் குரல் கேட்டது. “மலையரசா! ஒரே சிரிப்பா இருக்கு. உள்ளே யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டார். ‘இவர் ஏன் இந்நேரத்தில் இங்கு வந்தார் எப்படி வந்தார்‘ என யோசித்தபடி வெளியே வந்தான் மலையரசன். தாத்தா மட்டுமல்ல வெளியே ஒரு கூட்டமே நின்றது. முல்லையரசி உள்ளே சென்று நடுங்கிய சூர்யகலாவை வெளியில் கூட்டி...

உன்னை விடமாட்டேன் – பகுதி 60

 பிரதீபாவிற்கு ‘இவள் யார்? எங்கிருந்து ரிஷி கூட்டிவந்தான்’ என்பது மர்மமாகவே இருந்தது. ‘இந்தப் பெண் மிகுந்த அழகுதான். ரிஷியை அழகால் மயக்குவது கடினம். அவன் குடும்பப் பராம்பரியத்தில் கட்டுப்பாடுகள் உண்டு. அவன் குடும்பம் திடீர் பணக்காரக் குடும்பம் கிடையாது. ராஜவம்ச பரம்பரையைச் சேர்ந்தது. வம்ச வாரிசு முக்கியம். தங்கள் வித்து வேறெங்கும் தோன்ற கூடாது என நினைப்பவர்கள். எத்தனையோ பெண்களிடம் சிக்காதவன் இந்தப் பெண்ணிடம் எப்படி சிக்கினான். அல்லது இவள் அவனிடம் சிக்கினாளா?’ என வியந்தாள் பிரதீபா. பிரதீபாவுக்கு ஆச்சரியத்துடன், அறிந்து கொள்ள ஆர்வம் மிகுந்தது. ‘யாரையோ தன்னை கவனிக்க அனுப்பியிருக்கிறான்’ என்பதை உணர்ந்த தேனரசி ‘ரிஷி எங்கே தெரியுமா?’ என எப்படி கேட்பது என்று அமைதியாக இருந்தாள். ஆனால் பிரதீபா கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள். தேனரசி கடுப்பாகி தூங்க ஆரம்பித்துவிட்டாள். பிரதீபா ‘ சரியான அழுத்தக்காரிதான். ஒரு வார்த்தை பேசமாட்டேன் என்கிறாளே! தீவிரவாதியைப் போலவே. ரிஷியிடமாவது பேசுவாளா? பேசாமலா பிள்ளையை வயிற்றில் சுமப்பாள். ஆக மொத்தத்தில் திமிர்பிடித்தவள். ரிஷியை விட பணக்காரியாக இருப்பாளோ. ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 59

 தந்தையை உடனடியாக தொடர்பு கொண்டு விபரம் கேட்டான் ரிஷி. “இப்படியாடா பிள்ளை இருப்பாய்? அவசரத்துக்குக் கூட தொடர்புகொள்ள முடியாமல்.” என்று எல்லை மீறிய ஆத்திரத்தைக் கொட்டி விட்டு விபரம் கூறினார். கைவினைப் பொருட்களை வாங்கச் சென்றபோது தங்கை காணாமல் போனது மனதை அதிர வைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இரவில் பெட்டியில் இருந்து எதையெதையோ கயிறு, பாதாள கொலுசு, கொக்கி போன்ற பொருட்களைப் பையில் எடுத்துச் செல்லும் கணவனை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் தேனரசி. போகும் போதாவது தன்னிடம் எதுவும் சொல்லுவான் என்று பார்த்திருந்தால் ஒன்றும் கூறாமல் காரியமே கண்ணாக போனில் பேசியபடி கிளம்பிச் சென்றுவிட்டான். தேனரசிக்கு மனம் வலித்தது. வெளிஅறையை பூட்டிவிட்டான். அவள் நடமாட பல அறைகள் இருந்தன. அவள் சங்கிலியால் பிணைக்கப்படவில்லை. ஆனாலும், அவளைப் பற்றி கவலைப்படாமல் திடீரென சென்று விட்டது அவளை மிகவும் பாதித்தது. இதேபோல் முன்பு போன் வந்த போது இரவு உடையுடன் வெளியே சென்றான். ஆனால் இப்பொழுது நிமிடத்தில் உடை மாற்றி எதை எதையோ எடுத்துப் போட்டுக்கொண்டு பையுடன் செல்கிறானே! தன்னைவிட்டு ரிஷி சொல்லாமல் கொள்ளாமல் வெகு தூரம் போகப்போவதாய...

உன்னை விடமாட்டேன் – பகுதி 58

 சுனிலிடம் சூர்யகலாவை கடத்த ஆட்டோவை எடுத்து வரச் சொல்லி பணத்தை நீட்டினான் மலையரசன். ஆனாலும், சுனில் அரண்டு விட்டான். ஐயையோ! பணக்கார இடம். அங்கு வேலையை காட்டினால் உன் கதி மட்டுமல்ல என் கதியும் அதோகதிதான். உயிருடன் இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. தீர்த்துக் கட்டிவிடுவார்கள் பேசவே மாட்டார்கள். செய்துவிடுவார்கள். மீண்டும் மற்றொரு பணக்கட்டை எடுத்துக் காட்டினான். “அடேங்கப்பா இவ்வளவு பணமா? கொஞ்சம் பொறு. என் நண்பனிடம் ஆட்டோ வாங்கி கொண்டு வந்து விடுகிறேன்.” என்றான். சுனிலின் மூளை வேகமாய் வேலை செய்தது. முன் ஏற்பாடு எல்லாம் கட கடவென முடித்து விட்டு மலையரசனுடன் சூர்யகலா காத்திருக்கும் ஹோட்டலுக்கு சென்றான். சூர்யகலா கார் டிரைவரிடம், “நான் சில கைவினைப்பொருட்களை வாங்க வேண்டும். காரில் சென்றால் அதிக விலை சொல்வார்கள். அதனால் நான் ஆட்டோவில் செல்கிறேன். நீங்க வீட்டுக்குப் போங்க. நான் ஆட்டோவில் போய் பொருட்களை வாங்கி விட்டு என் தோழி வீட்டுக்குச் சென்று விடுவேன். அங்கிருந்து நானே வந்துவிடுகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடுங்கள்.” என்றாள். அய்யய்யோ சின்ன ஐயா கோபித்துக்கொள்வார். நான் சற்று தொலைவில் ...